இந்த மகாலில் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 58 அடி உயரமும், 5 அடி விட்டமும் கொண்டது. (பெரியவர்கள் மூன்று பேர் தூணை சுற்றி கை கோர்க்கலாம் ! )
இப்போது நாம் காணும் நாயக்கர் அரண்மனை அழிவில் இருந்து மீதமான நான்கில் ஒரு பங்கு மட்டுமே என்பது நம்முள் அதன் வரலாறு குறித்த ஆர்வத்தை தூண்டுகிறது. (குறிப்பிட்ட பகுதி மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகிறது)
அக்காலத்திய நாயக்கர் அரண்மனை சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரண்டு பகுதிகள் இருந்திருக்கின்றன.
கி.பி.1639 ஆண்டு இந்தோ- சார்ஸெனிக் ( Indo-saracenic) கட்டிடக்கலை முறைப்படி ஒரு இத்தாலிய பொறியியல் வல்லுனரின் கைவண்ணத்தில் கட்டப்பட்டது.
மைசூர் அரண்மனை, தாஜ்மஹால், மும்பை தாஜ் ஹோட்டல்...இந்தோ- சார்ஸெனிக் கட்டிடக்கலைக்கு உதாரணமா சொல்லலாம்.
சொர்க்க விலாசம் மன்னர் திருமலைநாயக்கரின் வசிப்பிடமாகவும்,. ரங்கவிலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
சொர்க்கவிலாசம் பூஜை மண்டபம்,அரியணை மண்டபம்,இசை மண்டபம்,படைகலன் பகுதி, தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை,பல்லக்கு சாலை, மலர் வன மண்டபம், பணியாளர் பகுதி இப்படி.பல பகுதிகளை கொண்டிருந்தது.
சொர்க்க விலாசத்தின் நடுவில் ஒரு கல் பீடத்தின் மேல் தந்ததிலான மண்டபம் இருந்தது. அதில் ரத்தினத்தினாலான மன்னரின் அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினார் (இப்பொழுது இல்லை !!)
இந்த அரண்மனையில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல சுரங்கப்பாதை இருந்தது. காலப்போகில் அழிந்து போய்விட்டது.
நாயக்கர்கள் மதுரையை 200 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர். மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529 ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார்.
விஜயநகர பேரரசின் புகழ்வாய்ந்த மன்னர் கிருஷ்ண தேவராயர் அவரின் தளபதி நாகம நாயக்கன். அவரை மதுரையை கைப்பற்றி கப்பம் பெற்றுவர அனுப்பினார். மதுரையை கைப்பற்றிய நாகம நாயக்கன் தானே அரசன் என முடிசூட்டி கொள்கிறார். நாகம நாயக்கனின் மகன் விஸ்வநாத நாயக்கன் மதுரையின் மீது படையெடுத்து தன் தந்தையை சிறைபிடித்து தேவராயர் முன் நிறுத்தினான். ஏன் இந்த துரோகத்தை செய்தாய் என கேட்ட கிருஷ்ண தேவராயருக்கு தனது மகனுக்காகவே அவ்வாறு செய்ததாக கூறுகிறார். பின் வெற்றி கொண்ட விஸ்வநாத நாயக்கனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக்கேட்டார். கிருஷ்ண தேவராயர், விஸ்வநாத நாயக்கன் தன் தந்தையின் உயிர் வேண்டும் எனகேட்டதாக சொல்லப்படுகிறது.
கூரையின் மேல் பகுதி காட்சி
அக்கால அரண்மனையின் ஓவிய காட்சி
திருமலை நாயக்கர்
நாயக்கர் வம்சத்தில் ஏழாவது அரசர் திருமலை நாயக்கர். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயனு. இவரி 36 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்துள்ளார் (கி.பி 1623 - 1659). இவரின் தந்தை முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். அமைதியான செல்வ செழிப்பான சிறப்பான ஆட்சி திருமலை நாயக்கருடையது. அனேக கோயில்கள், பல ஏரிகள்,தெப்பகுளங்கள், மதுரை மாநகரின் அகண்ட வீதிகளும் இவரால் நிர்மானிக்கப்பட்டது. மதுரையின் பல விழாக்கள் இவரால் ஏற்படுத்தப்பட்டது. சைவம் வைணவம் இவற்றை ஒரு சேர பாவித்தார் என்பது சைவ கோயில் அருகிலேயே வைணவ கோயில்களையும் அமைத்தார். கிருத்துவ மத போதகர்களை ஆதரித்தார். முஸ்லிம் மக்கள் தர்க்காக்களும் இவர் காலத்தில் இருந்தது.
திருமலை நாயக்கரின் பேரரசு என்பது 76 பாளையப்பட்டுகள் சேர்ந்தது, தஞ்சாவூர் தவிர. வீரப்பெண் மணி ராணி மங்கம்மா இவரின் வழிதோன்றல். நாயக்கர் 76 வயது வரை வாழ்ந்தார்.
மருது பாண்டிய சகோதரர்கள், வீர பாண்டிய கட்ட பொம்பன் போன்றோர் பாளையக்காரர்களின் வழி தோன்றல்கள்.கோயில் கோபுரங்களின் வடிவமைப்பில் ராய கோபுரம் என்பது சிறப்பு வாய்ந்தது. தமிழக அரசின் முத்திரையில் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ர சாயி கோயில் கோபுரம். திருமலை நாயக்கரின் சிலை இந்த கோயில் வளாகத்தில் உள்ளது.
தொடர்புடைய பதிவு : மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம்
அக்கால படங்கள் பொக்கிசம்... ஆமாம் எப்போது மதுரை வந்தீர்கள்...? சிறப்பான விளக்கங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇரண்டு வாரங்களுக்கு முன்பு குடும்ப நிகழ்வுக்காக வந்திருந்தேன்...நன்றிங்க D D
Deleteசிறப்பான படங்களுடன் வரலாற்றுத் தகவல்களும் சேர்த்து அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே !
Deleteசமீபத்தில் தான் நாயக்கர் மஹால் சென்றேன். இரவில் சென்றதால் ஒலி ஒளி காட்சி மட்டுமே பார்க்க முடிந்தது.
ReplyDeleteநல்ல தகவல்கள். நன்றாக முழுவதும் ஒரு முறை பார்க்க வேண்டும்.
ஆமாம் இந்த பிரச்சனை உள்ளது. ஒளி ஒலி காட்சி பற்றி பதிவிடுங்கள். நன்றிங்க முரளி.
DeletebEATIFUL PICTURES, YOU SHOT THEM?
ReplyDeleteநான் எடுத்த புகைப்படங்கள் தான். எப்படி கண்டுபிடிச்சீங்க ? !
Deleteதிருமலை நாயக்கர் மஹாலின் பிரமாண்டம் சிறிதும் குறையாமல் செல்கிறது தொடர்..
ReplyDeleteஆவி இன்னும் எழுத சொல்றீங்களா? எழுதுகிறேன்.
Deleteஅழகான வடிவமைப்பு ,கட்டிட கலையின் அற்புதம் , எழுத்து வடிவம் அருமை ,
ReplyDeleteநன்றி நண்பரே !
Delete