புத்தர் எட்டுவழிகளை போதித்தார் என்று சொல்கிறார்கள். அந்த வழிகளை நாம் நடை முறைப் படுத்துவதையோ ஏன் தெரிந்து கொள்ள விரும்புவதையோ என்றோ மறந்துவிட்டோம் என்று தான் சொல்லவேண்டும்.
அந்த எட்டு தத்துவ விளக்கங்கள் இவை ;
- சரியாக புரிந்து கொள்; வாழ்வையும் உலக இயல்புகளையும், வாழ வேண்டிய நெறிகளையும், புரிந்து கொள்.
- சரியாக எண்ணு; மனதில் தூய்மை இருக்கட்டும். கொடுமையையும், கெட்ட எண்ணத்தையும், ஆசை வெறியையும் அகற்று.
- சரியானபடி பேசு; சாந்தமாகப் பேசு, பொய் சொல்லாதே, புறஞ்சொல்லாதே, கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே. வம்பு பேசாதே.
- சரியான செயல்களில் ஈடுபடு; உன் செயல் தூய்மையான செயலாக இருக்கட்டும். துன்பம் கொடுக்காதே, அழிக்காதே, அவர்களது நிதானத்திற்குப் பங்கம் ஏற்படுத்தாதே.
- சரியான தொழிலைத் தேர்ந்தெடு; நாணயமான தொழிலைச் செய்; பிறருக்குக் கேடு செய்யாதே நியாயமற்றவைகளை செய்யாதே.
- சரியான முயற்சியில் ஈடுபடு; உழைப்பதிலும், முயற்சியிலும் ஈடுபடும்போது கெட்ட எண்ணம் எழாது. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்.
- சரியான சிந்தனை; மனத்தைப் பற்றி உடலைப் பற்றி உன் உணர்வுகளைப் பற்றி இயற்கையைப் பற்றி சரியாக சிந்தித்துத் தெரிந்து கொள்.
- சரியான கவனம்; மன சக்தியை ஒன்று திரட்டிக் கருத்தில் செலுத்து அமைதி பெறுவாய். உள்ளொளி பெறுவாய்.
இந்த 8 அம்சங்களில் நான் தெரிந்து கொண்டது கடவுளை வழிபாடு செய் உன் துயரம் தீர்பார் என அவர் பரிந்துரைக்கவில்லை.
என் பார்வையில் இந்த உலகம் ஒவ்வொரு கணத்திலும் அபாயத்தை வெளிகாட்டுவதாகவே தெரிகிறது. எல்லாம் மாயை என்று சொல்வது போல்
மக்களின் போக்கு வெகுவாக மாறிவிட்டது. யாரும் எதையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வது இல்லை. எல்லா நேரங்களிலும் ஒரு மாய உலகத்தில் இருப்பதை போன்றே உணர்கிறார்கள். நிதர்சனம் என்ன என்பதை யாரும் சட்டை செய்வதே இல்லை.
என்னைப் பொருத்த வரை இந்த நிமிடத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் போதும் என எண்ணுகிறேன். ஆனால் அப்படி இருப்பதையோ நினைப்பதையே இந்த உலகம் கிண்டலடிக்கிறது. ஏன் என்றால் நான் ரசனையில் இருக்கும் போது நான் பின் தங்கி விடுகிறேன், வேகமாக செல்லும் உலகம் இது.
ஆன்மீக வாதியை விடவும் நாத்திக வாதி ஆன்மீகத்தை பற்றி அதிகம் சிந்திக்கிறான். அவனை விடவும் இவனுக்கு தேடுதல் அதிகம். அப்படித்தான் பெரியாரின் தமிழ் சீர் திருத்த எழுத்தும் ஆன்மீக வாதிக்கு தெரியாதது இவருக்கு தெரிந்தது.
நாம் எப்போது வலிமை இழக்கிறோம் என்றால் மனம் தளர்ந்து விடுகிற போது என்று என்று சொல்லலாம். அப்போது நம் உடலில் எண்டார்பின்னும், லிம்போசைட்ஸும் குறைந்து போகிறது.
Endorphin என்றால் ரத்தத்தில் வலியை குறைக்கும் ரசாயணம்.
Lymphocytes என்றால் நோய்கிருமிகளை கொல்லும் பொருள்.
நீ என்னவாக இருக்க விரும்புகிறாய் என்று என்னைக் கேட்டால்
எனது பதில் நான் ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை விஞ்-ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். (ஒன்றை கண்டுபித்தவர்கள் விஞ்ஞானிகள், மற்றதை கண்டுபிடித்தவர்கள் ஞானிகள்.)
கண்டுபிடிப்புகள் காலத்தால் அழியாது ஆனால் அது உருமாறும் மாற்றம் பெரும். எட்வின் லாண்ட் கண்டுபிடித்தது உடனடி போட்டோ மெக்கானிசம். டார்க் ரூமில் வைத்து பிரிண்ட் போட தேவை இல்லை. அப்போது அது பெரிய வித்தை தான் ஆனால் இப்போது டிஜிட்டல் வந்து விட்டது இருந்தாலும் அது அதுதான் இது இதுதான்.
”எண்ணங்கள் ரகசியமானவை அவற்றை மறைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள் மக்கள் ஆனால் அவற்றை ஒருநாளும் நாம் ஒளித்து வைக்க முடியாது “ ------- ஜேம்ஸ் ஆலன்
வலைச்சரத்தில் வெளியான் பதிவின் மீள்பதிவு : by Kalakumaran
மீள்பதிவு படிக்காதவர்களுக்கு உதவும்...
ReplyDeleteஆமாம் அதற்காகவே இந்த மீள்பதிவு.. நன்றி D.D:
Deleteஅருமையான பதிவு நண்பரே
ReplyDeleteநன்றி
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி :)
Deleteமீள் பதிவானாலும் படிக்குந்தோறும் மனதில் புதிதாய்த் தோன்றி பலவித சிந்தனைகளைத் தருகிறதே..
ReplyDeleteபகிதலுக்கு நன்றி சகோ!
ஆசைப் படக்கூடாதுன்னு சொன்னாலும் அவர் சொன்ன கருத்துகளின் மேல் ஆசை உண்டாகத்தான் செய்கிறது..
ReplyDeleteபுத்த மதம் இங்கே பரவவிடாமல் சதி செய்து தடுத்து விட்டார்கள் ,அறிவு பூர்வமாக சிந்திக்க செய்யும் புத்தரின் தத்துவங்களை மக்கள் கடைப் பிடித்து இருந்தால் நாடு இவ்வளவு சீரழிந்து இருக்காது !
ReplyDeleteத.ம +1
நல்லதொரு பகிர்வு!
ReplyDeleteநல்லதொரு பதிவு...
ReplyDelete