கடலுக்கடியில் ஒரு மியூசியம் செயல்படுகிறது. இது தனியரின் பராமரிப்பில் உள்ளது. இந்த மியூசியம் மெக்ஸிகோவின் கேன்கம் (Cancum) பகுதியில் கடல் ஓர அடித்தளத்தில் நீருக்கடியில் அமைக்கப் பட்டு உள்ளது. 150 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 460 ஆள் உயர சிலைகள்
இங்கிலாந்தை சேர்ந்த ஓவியக் கலைஞர் ஜெஸான் (Jason de Caires taylor) அவருடைய குழுவினர், நேசனல் பார்க் தலைவர் ஒருவர், நாடிகல் அஸோசியேசன் தலைவர் இவர்கள் எல்லாம் குழுக்களாக சேர்ந்து இந்த மியூசியத்தை உருவாக்கினார்கள். 2009 ல் ஆரம்பித்தார்கள் அப்போது புயலினால் சேதம் அடைந்து விட்டது அதன்பிறகு சரிசெய்து இருக்கிறார்கள்.
சிலைகள் PH-Neutral marine காண்கிரீட்டாலும், ஒருவகை களிமண் சேர்ந்த கலவையாளும் உருவாக்கப் படுகின்றன.
டூரிஸ்டுகள் பிரத்தியோக கண்டாடி கூண்டு அமைக்கப்பட்ட படகுகளிலும், ஸ்கூபா நீச்சல் காரர்கள் அருகில் இருந்தும் பார்க்கலாம்.
இவைகளை எதற்காக கடலின் அடித்தளத்தில் அமைக்க வேண்டும்.
1. இது ஒரு கலை அம்சம்.
2. கடலடி உயிரினங்கள், கடற்பாசி (coral reef) காப்பகமாகவும், இயற்கையோடு இயைந்த ஒரு சுற்று சூழல் திட்டம்(Environment concept ).
ஒவ்வொரு மனித உருவமும் மாடல்களை கொண்டு மோல்ட் செய்யப்பட்டு வடிவமைக்கப் பட்டவை. உள்ளூர் பிரபலங்களும் இதில் அடங்குவர்.
பொருளாதாரம் போச்சே (பேங்கர்)
கண்காட்சியை அழகு படுத்தும் ஏஞ்சல் மீன்கள்
பல துளைகளோடு அமைக்கப்பட்ட மீனவரின் சிலையில் நெருப்பு போல வளர்ந்திருக்கும் பாசிகள்.
அருமை.
ReplyDeleteத.ம.1
வேறுபட்ட போற்றத்தக்க சிந்தனை, குறைந்தது. 85% மக்கள் நீந்த, சுழியோடத் தெரிந்தவர்களால் இதை அனுபவிக்க முடியும், கடலெனில் ஒவ்வாமையுடையோரை 95% கொண்ட நம் நாடுகளில் இவற்றால் யாருக்குப் பயன்.
ReplyDeleteபவளப்பாறைகள் வளர்வதற்கும் மீன்களின் உறைவிடங்களுக்கும் மிக உதவும்.
அட்டகாசம்...! நன்றி...
ReplyDeletewhat is the speciality to have museum under water?
ReplyDelete