சிட்டி லைட்ஸ் 1931 ல் வெளியான வசனங்களற்ற திரைக்காவியம் நீங்கள் பார்க்க வில்லை என்றால் உங்கள் வாழ்க்கை ஒரு காற்புள்ளி.
சினிமா படங்களில் ஒலி ஒளிப்பதிவுகள் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு பின்னே எடுத்த இவர் படங்களில் பேச்சொலி தேவையில்லை என்பதே அவரின் முடிவாக இருந்தது. அவர் தேர்ந்தெடுத்த பாதை ஒன் அன் ஒன்லி என்று கூடச் சொல்லலாம். ஆனால் பின்னனி இசை காட்சி அமைப்பிற்கு மிகப் பொருத்தமானதாகவும், கண்களை மூடி இசையை கேட்டாலே காட்சி மனக் கண்முன் ஓடும் படியாக ஒன்றிணைந்திருந்தது.
படம் பார்ப்பவனுக்கு வசனங்கள் தேவையில்லை அது வெறும் ஆரவாரம் காட்சியை உணர வசனங்கள் பெரும் தடை. ஒவ்வொரு காட்சி தொடங்கும் போதும் காட்சியை பற்றிய ஒரு ஸ்லைட் காட்டப்படுகிறது. இருட்டில் இருந்து தொடங்கி இருட்டில் முடியும். இதுதான் அவரின் வெற்றி பார்முலா. சிட்டி லைப் படத்தின் இறுதி காட்சி எப்படி இருக்கவேண்டும் “நான் அந்த காட்சியில் நடிக்கவில்லை வெறுமனே நின்று கொண்டிருந்தேன்” என்று சொன்னார். அந்த காட்சியில் டக்கென்று நேருக்கு நேராக காதலியை பார்க்கிறார் விவரிக்க முடியாத மகிழ்ச்சி அவர் முகத்தில் பொங்குகிறது, அடுத்த செகண்டே அவர் முகம் மாறுகிறது ஏன்? காதலியின் ஏளனப் பார்வை. சுக்கு நூறாக இவர் மனது உடைவதை கைகளில் உதிரும் ரோஜா இதழ்கள் உதிர்கின்றன. இவள் நமக்கு எட்டாக் கனி விலகி ஓடுகிறார் பின்னாலேயே அவள் விரைந்து அவர் களில் புது ரோஜாவை கொடுத்து தொடும் உணர்ச்சி தேடலில், மென்மை உள்ளத்தின் சொந்தக்காரன் இவனா ? நம் வாழ்க்கையின் ஒளி கொடுத்தவன் இவனா? நீங்களா கேள்விக்கணை தொடுக்கிறாள், புன்சிரிப்புடன் மெல்ல தலை அசைக்கிறார் யூ கேன் ஸீ நவ் ?” “யெஸ் ஐ கேன் ஸீ நவ்” காட்சிகள் மெல்ல மெல்ல இருளுக்குள் சென்று எண்ட் கார்ட் போடப் படுகிறது.
இந்த படத்தில் காதலியுடன் ரோஜா மலரும் பேசுகிறது. இது பேசா படம் என்பதே நமக்கு மறந்து போகிறது.
கதை சுருக்...தெருகூட்டும் தொழிலாளி பார்வை அற்ற பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். அவளுக்காக ஜெயிலுக்கு போகிறான். காதலியின் கண் பார்வைக்காக தன் வாழ்க்கையையே பணையம் வைக்கிறான். இறுதியில் காதலியுடன் சேர்கிறானா ?, அவ்வளவுதான்.
படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் நகைச்சுவையின் எல்லை வரை உங்களை இட்டு செல்கிறது. படம் முடியும் போது உங்கள் மனம் லேசாக இருப்பதை உணரமுடியும். இந்த திருப்தியை இந்த காலத்து படங்கள் கொடுக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. (இத சொல்றதனால என்னை வயசானவன்னு நினைச்சிகாதீங்க...)
படம் முழுக்க நகைச்சுவைதான்...இருந்தாலும் நான் ரசித்த நகைச்சுவைகாட்சிகள் சில...
க்ரீகோ ரோமன் கற்சிலை திறப்பு விழாவில் திரை விலக பெண்சிலையின் மடியில் தூங்கிக் கொண்டு இருப்பார்..சாப்ளின். எல்லோரும் தேசிய கீதத்திற்கு சல்யூட் அடிக்க ஓட்டை டவுசர் சிலையின் கத்தியில் சொருகிக் கொள்ள... தத்தளிக்கும் காட்சி
பார்ட்டி ஒன்றில் நூடில்ஸோடு அலங்கார காகிதங்களை சாப்பிடும் காட்சி. இசையின் உணர்ச்சி எல்லையில் எல்லோரும் துணையோடு ஆட நமக்கு யாரும் இல்லையே என்ற இவரின் தவிப்பும்... சட்டென ஒரு பெண்மணியை பிடித்தாடுவார் சாப்ளின்... வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் காட்சிகள்...
"Tomorrow the birds will sing!" and "Be brave! Face life!"
தற்கொலை செய்து கொள்ள வரும் மில்லியனர், சாப்ளினை சாவில் இருந்து காப்பாற்றும் காட்சி, குடி போதையில் இருக்கும் போது மட்டுமே இவரை நண்பராக ஏற்றுக் கொள்ளும் பணக்காரர்.(Harry Myers)
எதிர்பாராமல் விசில் தொண்டையில் மாட்டிக்கொள்ள விக்கலும் விசிலும்... அந்த இறுதிகாட்சியில் நாய் ஒன்று இவர் விசில் சப்தத்திற்கு அவரோட மூஞ்சிக்கு முன்னாடி நிற்கும் பாருங்க...ஹா..ஹா
குதிரை லத்திக்கு பயந்து ,பக்கத்து தெருவில் செல்வார் அங்கு யானை லத்தி போட்டு கடந்து செல்லும்....காட்சி.
காதலியின் கண் அறுவை சிகிச்சைக்காக தன் உயிரையே பனையம் வைக்கும் பாக்ஸிங் காட்சி நம்மை சீட்டின் நுனியில் இருத்தி வைக்கும்.
இது என்ன பிதற்றல் என்று உங்களுக்கு தோன்றலாம்... நிச்சயமாக சொல்லலாம் இந்த படத்தை நீங்கள் பார்த்து முடித்திருக்கும் நீங்கள் வயதானவரென்றால் இளைஞராகவும், இளைஞர் என்றால் குழந்தையாகவும் உரு மாறி இருப்பீர்கள். (குழந்தை யென்றால் ? இந்த குசும்புதானே வேண்டாங்கரது)
படத்தை பார்க்க வேண்டும் என்று விருப்பப் படுபவர்கள் உங்கள் மின் அஞ்சலை என்னை தொடர்புகொள்ள என்ற பக்கத்தில் உள்ள பெட்டியில் போடவும் லிங்க் தருகிறேன்...
ஐன்ஸ்டீன் உடன் சாப்ளின்
நடிகர் நடிகையர் City Lights (1931), "A Comedy Romance in Pantomime,"
Charles Chaplin (the tramp), Virginia Cherrill (the blind girl), Harry Myers (the drunken millionaire), Florence Lee (grandmother), Allan Garcia (butler), Jean Harlow, Henry Bergman, Albert Austin,
by kalakumaran
எப்ப பார்த்தாலும் குபீர் சிரிப்பை வரவழைக்கும் படம் அது!! சாப்ளின் ஒரு ஜீனியஸ்!
ReplyDeleteசகோதரனுக்காக தன் காதலை தியாகம் செய்தவர் அவர். அவர் காதலியின் சாயலில் இப்பட நடிகை இருப்பதாக சொல்கிறார்கள். அவருக்கு 3 மனைவியர் இருந்தாலும் முதல் காதலை அவரால் மறக்க முடியல போல....
Deleteஎன்றும் ரசிக்கலாம்...!
ReplyDeleteஆமாம்..எந்த வயதினரும் ரசிக்கலாம்... கதாபாத்திரதோட நம்மை ஒன்ற வைக்கும் வசீகரம் அவரிடம் இருந்தது
Deleteநானும் பார்த்து இருக்கிறேன்....
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஇளங்கோ கூட ஒரு முறை அவர் தளத்தில் இந்தப் படத்தைப் பற்றி சிலாகித்து எழுதி இருந்தார் . jeevansubbu@gmail.com
ReplyDeleteநானும் படித்தேன் நன்றி சுப்பு... போட்டாச்சு போட்டாச்சு
Deleteசாப்ளின் பற்றி பல விஷயங்கள் சொல்லியுள்ளிர்கள் நன்றி . நானும் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளேன்
ReplyDeleteநன்றி ராஜா
Delete\\அவள் விரைந்து அவர் களில் புது ரோஜாவை கொடுத்து\\ "அவர் கைகளில்/கையில் புது ரோஜாவை கொடுத்து" என்று இருந்திருக்கலாம்.
ReplyDeleteபடத்தின் கிளைமாக்சை நீங்க விவரித்துள்ள விதம் அருமை. ரோஜா உதிவது அவரது உள்ளம் நோருங்கவதைக் கட்டுகிறது என்பதை நான் இப்போது தான் நினைத்துப் பார்த்தேன், அது உண்மை தான். படம் முழுவது வயிறு குலுங்க சிரித்தாலும், இறுதிக் காட்சி கண்ணீர் நீரை வரவழைத்தது.
எம்ஜிஆர் ஒரு படத்தில் குருட்டு சரோஜா தேவிக்கு கண் பார்வை கிடைக்க பணம் கொடுத்து விட்டு ஜெயிலுக்கு செல்வாராம், விஜயும் சிம்ரனுக்கு அதே மாதிரி ரோலில் நடித்திருக்கிறார். நம்மாளுங்களுக்கு காபி தானே, சுய சிந்தனை கிடையாதே...............
சாப்ளின் நிறைய இடங்களில் குறியீடு வைத்திருக்கிறார். நமக்கு சிக்குனது சிலது தான். காட்சியோடு ஒன்றி போனவங்களுக்கு நெசமா இறுதி காட்சியில் ஒரு சலனம் கண்டிப்பா வரும். ஒரு தேர்ந்த டைரக்டரின் பணி, டச்சிங்
Delete
ReplyDeleteCharlie Chaplin "City Lights" Full Movie - HD
http://www.youtube.com/watch?v=2TKsHpW6r2E
ஒ..இது HDயா. நன்றிங்க.
Deleteஇப்போது தான் இவர் Morden Times , இங்குள்ள ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. நான் சுமார் 25 வது தடவை பார்த்துக் குலுங்கினேன்.
ReplyDeleteஅதன் பின் அவர் வாழ்க்கை வரலாறும் ஒளிபரப்பானது.Laurel and Hardy மூலம் புகழ் பெற்ற Stan Laurel , ஆரம்பத்தில் இவருடனும் இணைந்து நாடகங்கள் நடித்துள்ளார்.
சார்ளி 4 திருமணம் செய்துள்ளார்.
நம்ம காந்தியில் இவருக்கு மிக மரியாதை உண்டு. அது போல் காந்திக்கும்- ஆனால்
காந்தி இவர் படம் ஏதும் பார்க்கவில்லையாம்.
என்றும் என் அபிமான நடிகர் பற்றிய அழகிய தொகுப்பு.