"tks to artist Jeeva"
" விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்தியமாகிறது."
மின் அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.
கிருஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிதகோரஸ் என்ற கணித மேதை, உலகில் நாம் காணும் அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன என்று குறிப்பிட்டுச் சொன்னார். இந்த உண்மையை அணு விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.
அணைத்து பொருள்களும் அலை வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. நமது எண்ணங்களும் அலை வடிவில் நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.
எனவே வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும். ஆழ் மனதை பயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயாராக இருக்கிறது.
ஆழ்மனதை பெரிய மகான்களும் தலைவர்களும் மட்டும் தான் பயன் படுத்த முடியும் என எண்ண வேண்டாம் ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
மனிதனின் எண்ண அலைகள் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' என்று அழைக்கப்படுகிறது.
நீண்ட நெடுங்காலமாக மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ இந்த சக்தியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
மழையை வரவழைக்க மேகராகக்குறிஞ்சி என்ற ராகத்தை வாசிப்பது பண்டைய தமிழகத்தின் ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது.
கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியை நம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.
தனிமனிதனானாலும் சமூக மானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நடைபெறத் தொடங்குகின்றன.
மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை.
நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணத்தை உருவாக்கி கொள்கிறபோது அந்த வேலை கிடைப்பதற்கான வழிவகைகள் தானாக தென்படும் அதற்காக மனதில் நினைத்தால் வேலை கிடைத்துவிடும் என பொருள் இல்லை.
எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காண தீர்வு வழிமுறைகள் உங்களுக்கு தென்படும் அந்த வேலையை பெறுவதற்கான ஆற்றலை ஆழ்மனம் உங்களுக்கு கொடுக்கும்.
இதற்கு அடிப்படைத் தேவை 'image creation' தான் நீங்கள் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஈடுபடும் காரியங்கள் வெற்றி கண்டிருப்பதை நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடு அணுகுகின்ற
காரியங்கள் தோற்றுப் போய் இருப்பதையும் நீங்களே உணர்வீர்கள்.
உள்ளபடியே மனப்பூர்வமாக அந்த காரியத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று நீங்கள் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? என்பது தான் முக்கியம்.
நல்ல எண்ணங்களையே எப்போதும் சிதறவிடுங்கள்...அது பூமராங் போல உம்மிடமே திரும்ப வரும்.
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!
by Kalakumaran
அற்புதமான காலை சிந்தனை.புதிய வழிபாடு போல பதிவு செய்துள்ளீர்கள் .நன்றி .
ReplyDeleteகண்டிப்பாக யாராக இருந்தாலும், தன்னை... தன் உள்மனதை உணர ஆரம்பித்தால் உயர்வான நிலையை அடைவார்கள்... பல உண்மையான கருத்துகளுக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அருமையான சிந்தனை மிகுந்த புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி கலாகுமரன்
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல சிந்தனை... எளிமையாக விளக்கியுள்ளீர்கள்...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!
ReplyDelete