சுவாமி விவேகானந்தரின் ஒரு அறிய புகைப்படம் | ( A Rare photo of Swamy Vivekananda ) |
வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருளை (பணம்)
சம்பாதிக்க வழி என்ன?
பின்வரும் வரிகளை சற்று பொருமையாக படிக்கவும்.
கருவிகள் உன் கையில் தான் இருக்கின்றன. நீயோ, கண்ணைக் கட்டிக்கொண்டு, "நான் குருடன், எனக்கு ஒன்றும் தெரியவில்லை, " என்கிறாய். கண்ணை கட்டியிருக்கும் துணிகளைக் கிழித்தெறி; நடுப்பகல் சூரியன் தன் கதிர்களால் உலகம் முற்றிலும் ஓளி பரப்புவதைக் காண்பாய். பிற நாட்டுக்குப் போக பொருள் கிடைக்க வில்லை எனில் கப்பலில் கூலி வேலை செய்தாவது போய்ச்சேர். ' இந்தியாவில் நெசவு செய்யப்பட்ட துணி, மூங்கிலால் செய்யப்பட்ட பொருள்கள், என்னும் இத்தகைய நம் நாட்டுப் பொருள்களைக் கொண்டு சென்று ஐரோப்பிய அமெரிக்க வீதிகளில் விற்பாயாக. வெளிநாட்டு வர்த்தக நிலையங்களிலே இந்திய பொருள்கள் இப்பொழுதும் எவ்வளவு நன்கு மதிக்கப் படுகின்றன என்பதை நீ காண்பாய். நிறைய பேர் அவ்வாறு வியாபாரம் செய்து பெரும் பணம் சம்பாதிப்பதை நான் கண்டேன்.
அடுத்த கேள்வி
நான் என்ன தொழில் செய்வேன் ? பணம் எங்கிருந்து வரும்?
என்ன வீண் கதை பேசுகிறாய் ? உன்னுள் ஒரு அபாரமான சக்தி இருக்கிறது. " நான் ஒன்றும் இல்லாதவன், நான் ஒன்றும் இல்லாதவன் " என நினைத்ததினால் நீ வலுவிலந்து போய் விட்டாய். ஏன் நீ மாத்திரமா ! இந்த ஜாதி முற்றுமே அப்படி ஆகிவிட்டது. ஒரு முறை உலகத்தைச் சுற்றிப்பார்; மற்ற ஜாதியாருடைய நாடி நரம்புகளிலே எவ்வளவு உறுதி இருக்கிறது என்பதை நீ காண்பாய். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கல்வி கற்ற பின்பும் பிறருடைய வாயிலண்டை போய் " எங்களுக்கு வேலை கொடுங்கள் ! " என்று அழுது ஓலமிடுகின்றீர்கள்; மற்றவர்களுடைய காலினால் மிதிபட்டு பிறகு அடிமை பூண்டிருக்கிறீர்கள். நீங்களும் மனிதரா ! ஒரு குண்டூசித் தலை அளவுக்கு இருக்கும் மதிப்பு கூட உங்களுக்கு இல்லை. நீர் வளமிக்க செழிப்பான நாட்டில் உண்ணுதற்கு உணவும் உடுப்பதற்கு உடையும் இல்லாமல் வருந்துகிறீர்கள். இந்நாடு பிற நாட்டிலே நாகரீகம் பரவுவதற்கு காரணமாயிருந்தது. உங்களுடைய நாட்டிலே உண்டாகிற பொருள்களைக் கொண்டு பிற நாட்டார் நிறைந்த பயனைப் பெருகிறார்கள். நீங்கள் பொதி சுமக்கிர கழுதைகளைப் போல் அவர்களுடைய சுமையைத் தாங்கிச் செல்லுகிறீர்கள். இந்தியாவில் இயற்கையாய் விளைகின்ற பொருள்களை அயல் நாட்டார் இறக்குமதி செய்து, தங்களுடைய புத்திக் கூர்மையால் அவற்றைப் பயன்படுத்திப் பெருமை அடைகின்றார்கள். நீங்களோ, உங்களுடைய புத்தியை அறையில் பூட்டி வைத்துவிட்டு, முன்னோர் வைத்துப் போன பொருளைப் பிறருக்கு கொடுத்துவிட்டு உணவுக்கு வருந்தி அலைந்து திரிகின்றீர்கள்.
மேற்கண்ட கேள்விக்குகளுக்கு பதில் அளித்தவர் சுவாமி விவேகானந்தர்
இடம் : பேலூரில் ஒரு திருமடம் காலம் : 1898
இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கருத்தில் உறைந்திருக்கும் உண்மையை உணருங்கள்.
இது ஒரு விதை அதை நாம் மரமாக வளர்க்க முயற்சிக்க வேண்டும் என்பதே என் கருத்து.
நன்றி : சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்
புத்தகம் வெளியிட்ட ஆண்டு : 1972
பரவாயில்லை எனக்கு உங்கள் இ-மெயில் அட்ரஸ் வேனும்....மேலும் என் தளத்தை பார்வைப்யிட www.naveensite.blogspot.com
ReplyDeleteஅவர் சொன்ன கருத்துகளை மாற்றாமல் குறித்துள்ளேன். வரலாற்றை வெளிப்படுத்தியுளேன்.
Deleteகாலத்தால் அழியாக் கருத்துகள்!
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி..வாழ்த்துகள்!
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇப்பதான் படிச்சீங்களா! நன்றி நண்பரே!
Delete