மெல்லென மிதந்து வரும் எலுமிச்சையின் வாசனை நமது மனநிலையை ஒருமுகப்படுத்துகிறது. இதை ஒரு ஆராய்சிக்காக சிட்ரெஸ் வாசனை திரவம் உபயோகப்படுத்த பட்ட காரை ஆண், பெண் இருபாலரையும் தனி
தனியாக ஓட்டசெய்து சோதனை செய்தார்கள். முன் எப்போதையும் விட எந்த பிரச்சினையும் இன்றி வாகனத்தை நல்ல முறையில் ஓட்டினர்.
ஒரு காலத்தில் உப்பு ஒரு மதிப்புமிக்க பொருளாக இருந்தது. ரோமில் போர் வீரர்களுக்கு சம்பளமாக உப்பு அளிக்கப்பட்டது. salt -ல் இருந்துதான் salary என்ற வார்த்தை ஏற்பட்டதோ?
காபி (coffee ) முதன் முதலில் மருந்து கடைகளில் விற்கபட்டது அப்போது இது "அரேபியன் வைன் " என அழைக்கபட்டது.
ஜப்பானில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக வாழை மரப்பட்டையில் உடை தைத்து அணிந்து கொண்டிருந்தார்கள்.
நமக்கு எப்படி இடது வலது கை பழக்கமோ அது போல யானைகளுக்கும் இடது வலது தந்தங்களை உபயோகிக்கும் பழக்கம் உள்ளது.
good infomation. Thank you.
ReplyDeleteVetha.Elangathilakam.
நன்றி! அனைத்து பக்கங்களையும் படித்துள்ளீர்கள்.
Delete