அபூர்வ நீர் குமிழ் சிலந்தி [ Aqua Bell Spider ]
சிலந்திகளில் பல வகைகளை நாம் கேள்விபட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். தொன்னை மர சிலந்தி மற்ற வகையை காட்டிலும் பெரிதாக அதிக ரோமங்களுடன் இருக்கும். விச சிலந்திகளும் உண்டு.
புது வகை சிலந்திகள் பற்றி ஜெர்மன் மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆராய்சி மேற்கொண்டனர்.
அதில் நீரில் வாழும் ஒரு வகை சிலந்தி அபூர்வமானது. இதை நீர் மணி குமிழ் சிலந்தி என்று குறிப்பிடுகின்றனர்.
சிலந்தி வாழ்வதற்கு ஆக்ஸிஜன் அவசியம், அப்படி இருக்கும் போது இந்த சிலந்தி எப்படி நீரினுள் இருக்கும் ?.
அது நீர் குமிழ் [பப்பிள்] போன்ற கூட்டை நீர் மேல் மட்டத்தில் உருவாக்கி அதனுள் இருந்து கொண்டு நீருக்கு கீழே சென்று வாழ்கிறது. முதற்கட்ட ஆய்வில் 20 அல்லது 40 நிமிடங்கள் நீரினுள் இருக்கும் என அனுமானித்தார்கள். ஆனால் இந்த நீர் குமிழானது மீனுக்கு எப்படி செவுள் உபயோகித்து ஆக்ஸிஜன் பெறுகிறதோ அதே போன்று செயல்படுவதாகவும் 24 மணி நேரங்களுக்கு அது நீருக்கு வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் இறுதி கட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பறக்கும் ரோபோகோளம் [ Flying Robotic Sphere ]
ஜப்பானிய பாதுகாப்பு மைய எஞ்சினியர் (ப்யூமியூகி ) ஒருவர் புதுவடிவ ரோபோ கோளத்தை கண்டுபிடித்துள்ளார்.
இதன் பயன்பாடு சுரங்கம் மற்றும் இயற்கை சீரழிவினால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொள்பவர்களை காப்பற்ற உதவும் உழங்கு வான ஊர்தி போல பறக்கும் தானியங்கி ரோபோ கோளம்.
கூண்டு போன்ற இதனுள் அதி நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. ரிமோட்டால் இதை இயக்கலாம். இது மணிக்கு 37 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது எதன் மீதாவது மோதினாலும் சுதாரித்து பறக்கக்கூடியது.
பறக்கும் தானியங்கி ரோபோ கோளம் அருமையான பயனுள்ள கண்டுபிடிப்பு..
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
ஆமாம் ஆபத்து காலங்களில் இதன் பயன் அளப்பரியது. நன்றி
Deleteஒலகம் இப்போ எங்கோ போவுது....
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா
உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ஸ்பேம் பெட்டியில் கிடைத்தது. நண்பர் மனசாட்சிக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.
Deleteஎதிர்காலத்தில் எல்லா பயபுள்ளைகளும் பறந்துகிட்டே திரியபோகுது :D
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா :)
வானமே எல்லை..! நன்றி நண்பரே.
Deleteதகவல் அருமை..
ReplyDeleteதேங்க்யூ நண்பரே.
Deleteபுதிய தகவல்... நன்றி...
ReplyDeleteஇன்னும் புதிய தகவல்களை தர காத்திருக்கிறேன். நன்றி தனபாலன் சார்.
Deleteபறக்கும் ரோபோகோளம் புதிய தகவல். நினைத்துப்பார்க்க ஏதோ திரைப்படங்களில் வருவது போல ஒரு உணர்வு. அருமையான கண்டுபிடிப்பு.
ReplyDelete