ககபு [KaKapo ] எனும் பறவையின் வாழ்விடம் நியூசிலாந்து.
ககபு வால் பறக்க இயலாது. இதன் அதிக எடை. மற்றும் தகவமைப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் இவை பறக்கும் தன்மையை இழந்தன. இவை கிளி இனம். ஆந்தையை போன்ற அலகுகள் கொண்டது. இதன் வழுவான கால்களால் அடர்ந்த காட்டில் நடந்தே இறை தேடுகிறது, இரவில் மட்டுமே. கால்களை கொண்டே உயரமான மரங்களிலும் இவை ஏறுகின்றன.
200 வருடங்களுக்கு முன் பரவலாக இருந்த இவை மனிதர்களாலும், மற்ற விலங்குகளாலும் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய 50 பறவைகளை 1995 ல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிக எடைகொண்ட பெண் பறவை இடும் முட்டையில் இருந்து ஆண் குஞ்சுகளே பொறிக்கும். மேலும் வருடத்திற்கு ஒரிரு முட்டைகளை மட்டுமே இடும்.
இவற்றின் இனப்பெருக்கத்திற்காக இவைகளை ஆஸ்கர், கோட்பீஸ் போன்ற சிறு தீவுகளில் காட்டில் விடப்பட்டன. இவற்றில் ரோடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு கண்கானிக்கப்பட்டன. பறவை ஆர்வளர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது இரவில் இவற்றை கண்காணித்தனர். இவற்றின் குஞ்சுகளுக்கு எலெக்ட்ரிக் போர்வை, போதுமான ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்பட்டன இவை அனைத்தும் இரை தேட சென்ற தாய் பறவை திரும்புவதற்குள்ளாக.
18 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது ஆதாவது மூன்று மடங்கு.
பறவை ஆர்வலர்கள் செய்த சேவை பாராட்டத்தக்கது.
பறவை ஆர்வலர்கள் செய்த சேவை பாராட்டத்தக்கது.
ReplyDeleteஅபூர்வமான தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !
ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி
Deleteஇந்த மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தாத்தான் எதிர்காலத்தில பறவைகளையும் உயிரினங்களையும் உயிருடன் பார்க்க முடியும் இல்லாட்டி போட்டோவிலதான் பார்க்க முடியும்.!
ReplyDeleteஅந்த பறவைகள் ஆர்வலருக்கு நன்றி.!
சரியா சொன்னீங்க நன்றி.
Deleteஆபூர்வ பறவை இனத்தை வளர்க்கும் ஆர்வலருக்கு பாராட்டுக்கள்.. பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி
ReplyDeleteநன்றி தனபாலன் சார்.
Delete