ஜீரோ டிகிரி புத்தகம் பற்றி பர பரப்பான செய்திகள் வந்த போதும் ஏனோ என்னைக் கவர வில்லை. புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆவலும் இல்லாது போய் விட்டது.
அவ்வப்போது ஊடகங்களில் இதைப் பற்றி பேசப்படும் போதெல்லாம் சுவாரஸ்யம் அதிகமானது. வெயிலில் மழைமாதிரி அவ்வப்போது இந்த எண்ணத்திற்கு திடீர் தாக்கம் ஏற்படும். சமீபத்தில் தோழர், தோழிகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அதன் பிறகு திரும்பும் போது ஒரு பேராசிரியையுடன் (ரயில் சினேகிதம் !) நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு சுவாரஸியமாக போய்கொண்டிருந்தது. சொந்த முயற்சியில் ஒரு குறும்படம் எடுத்திருக்காங்க (பேர் ஞாபகம் வரல) பேசும் போது "சீரோ டிகிரி” என்று வாய் குரழ...குழர, ஹையோ அதப் பற்றி நினைச்சாலே...என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டார்.
ஏதோ விசயம் இருக்கு எனப் புரிந்து போனது. பேச்சு வேறு தலைப்புகள் மாறி சென்று மீண்டு வந்தது. உங்க மனசில் இருக்கிறத சொல்லிருங்க என்ற என் நச்சரிப்பு தாங்க முடியாமல் சொன்னார்...
“என்னுடன் பணிபுரியும் தோழி ஒருத்தி, இந்த புத்தகத்தை படியுங்க என என் கையில் திணித்துவிட்டு போய்விட்டாள். நானும் வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஒரு பத்து பதினைந்து பக்கம் படிச்சேனுங்க...முடியல வெச்சிட்டேன்... வீட்டுக்கு வர்ரவங்க யாரும் இந்த புத்தகத்தை பார்த்திர கூடாதேன்னு எனக்கு பெருங்கவலை வந்திருச்சு.
ஏகப்பட்ட கவிதை, கதை, இலக்கிய புத்தகம் படிச்சிருக்கேங்க... இத படிச்ச எனக்கு ஏன் இந்த கவலை வந்ததுன்னு தெரியல.., பழைய நியூஸ் பேப்பர்ல போட்டு சுத்தி வெச்சிட்டேன்.
திரும்ப இத எடுத்துட்டு போய் தோழியிடமே கொடுத்தேன் இல்ல.. நீங்களே வெச்சுக்குங்க, அவசர ஜோலி இருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டா...
“நானும் படிக்கனும்னு இருக்கேன் கொடுங்க... ” இது நான்.
ஆனா இத மேல படிக்க எனக்கு தோனல வீட்லேயும் என்னால வெச்சுக்க முடியல..ஏன்னா இத படிக்கிறவங்க நீ.. இதெல்லாமா படிக்கிற என கேட்டுடக்கூடாதே..அப்பவும் மீறி வயசு வித்தியாசம் பாக்காம இந்த புத்தகம் பல பேர் கண்ணுல பட்டுடிச்சு...ஒவ்வொரு தடவையும் அவுங்கள திசை திருப்பி இதை காப்பாத்திட்டு வந்தேன்.
“ஏங்க கஷ்டப்படுறீங்க எங்கிட்ட குடுத்திருங்க...” மறுபடியும் நான்.
அதைவிட புத்தகம் கொடுத்த தோழியின் அட்டகாசம் தாங்க முடியல... பொழுது போகாதப்ப எல்லாம் என்ன வெச்சு காமெடி பன்ன ஆரம்பிச்சுட்டா.. சமயம் கிடைக்கும் போதெல்லாம், இந்த புத்தகம் எங்கிட்ட இருக்குன்னு சொலிடுவா.
இத யாருகிட்டையாச்சும் கொடுத்திரலாம்னா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க எனும் எண்ணத்தினால அந்த முடிவை கைவிட்டுட்டேன்.
நல்ல வேலையா...போகி பண்டிகை வந்ததுங்க சந்தோசமா இந்த புத்தகத்தை போட்டு கொழுத்திட்டேன் என்று சொல்லி ' முற்றும் ' போட்டார்.
வடை போச்சே ! என நினைத்த போது " எஹே..என்னப்பா... இது, நவீன இலக்கியத்திற்கு வந்த சோதனை... வேதனை...நடிகர் பாலையாவின் அசரீரி கேட்டது.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பள்ளிக்கு அருகில் நடமாடும் புத்தக கடை இயங்கியது , ஒரு வாகனத்தில் புத்தக விற்பனை நியூசென்சுரியால நடத்தப்பட்டதுன்னு நினைக்கிறேன். அப்ப ரஷ்ய புத்தகங்கள் எனக்கு அறிமுகம் ஆச்சு. எதுக்குமே லேசுல பைசா தாராத அப்பா...புத்தங்கள் வாங்கனும்னா கொடுத்திருவாரு, ரஷ்ய புத்தகங்கள் நல்ல பைண்டிங்கில் அருமையான படங்களோட கிடைக்கும். அப்ப என்னை கவர்ந்த ஒரு மொழி பெயர்ப்பு புத்தகம் "மக்சீம் கோர்க்கி கதைகள்" அதில் இருந்த ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த புத்தகம் அப்பவே பழசு தான்.
இதில் உள்ள ஒரு கதை "கிழவி இஸெர்கீல்" இச்சிறுகதை மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. தனிமை எல்லாவற்றிலும் பெரிய துன்பம், சாவு கூட அதைவிடக் குறைந்த தண்டனையே என்று போதிக்கிறது லாராவின் வாழ்க்கை வரலாறு. தான்கோவின் எரியும் இதயம் பற்றிய கதையின் கடைசிப் பகுதி மக்களின் விடுதலைக்காகத் தன்னைப் பலி கொடுப்பது எத்தகைய இன்பம் என்பதை விவரிக்கிறது. இஸெரிகீலின் நாடோடி வாழ்க்கையும் அவளின் மனோதிடமும் சுவாரசியமாக விவரிக்கிறது. இஸெர்கீல் நம்முடன் மிகவும் ஒன்றிப் போகும் ஒரு கதா பாத்திரம்.
"புரட்சியின் வரவை முன்னறிவித்த புயற்பறவை மக்சீம் கோர்க்கி " சொன்னவர் வி.இ. லெனின்
மல்தாவிய நாடோடிக் கதைகளின் அடிப்படையில் கோர்க்கி படைத்த மரபு வழி கற்பனைக் கதை. அந்தோன் சேகவுக்கு எழுதிய கடிதத்தில் ருஷ்ய எழுத்தாளர் கோர்க்கி பின்வருமாறு குறிப்பிட்டார்
"கிழவி இஸெர்கீல் கதையைப் போல இசைவான வடிவமைப்புடனும் அழகாகவும் எதுவும் எழுத மாட்டேன் என்று தோன்றுகிறது..” (1892)
ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கிய மக்சீம் கோர்க்கி (இயற்பெயர் : அலெக்சேய் பெஷ்கோவ்) என்னும் புனை பெயர் கொண்ட எழுத்தாளரின் முதல் படைப்பு ஜிப்ஸி. 1898 முதல் இவரது கட்டுரைகளும், சிறுகதைகளும் பெருத்த வரவேற்ப்பை பெற்றன. அந்தோன் சேகவ், லேவ் தல்ஸ்தோய் வரிசையில் கோர்க்கியை வைத்தன.
1892 ல் சாலை போடும் தொழிலாளியாக இருந்த போது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாதையில் பேறுகால வேதனையில் தவித்த ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். நிஜ நிகழ்வை கதையாக வடித்தார் அது தான் “பிறந்தான் மனிதன்”
கிழவி இஸெர்கீல் கதையை படிக்கும் ஆர்வம் இருப்பவர்கள் இங்கே தரவிறக்கி படியுங்கள்.

*****

புக்கர் பரிசு பெறப்போகும் பின்நவீனத்துவ நாவல் போகியில் கொளுத்தப்பட்டதா ?
ReplyDeleteஅக்கினி தேவனுக்கே அஜீரணமாகி,
வாந்தி - பேதியானதுக்கு அதான் காரணமா !.
உங்கள் தோழி தப்பித்து,
உங்களையும் காப்பாற்றி இருக்கிறார்.
அட தேவுடா! நன்றி நண்பரே
Deleteநல்ல வேளை இந்த மாதிரி இலக்கியத்தரமான?!புத்தகங்களை நான் படிப்பது இல்லை! மாக்சிம் கார்க்கியின் சில சிறுகதைகள் படித்துள்ளேன்! நன்றி!
ReplyDeleteஇந்த மாதிரி இலக்கியத்தரமான? ஹா..ஹா..நன்றி நண்பரே
Deleteகொடுத்த இணைப்பிற்கு நன்றி...
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்... மொழி பெயர்ப்பு என்றாலும் அவர் மொழியில் அவர் சொல்ல வந்த கருத்தை இன்னொரு மொழிக்கு எந்த மாற்றமும் இல்லாமல் கொண்டு செல்வது சுலபமானது இல்லையே!
Deleteஎனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு. என்னிடம் ஜியே பப்ளிகேசன்ஸ் வெளியிட்ட பதிப்பு உண்டு. நான் காசு போட்டு வாங்க வில்லை. என் நண்பன் கல்லூரி காலத்தில் கொடுத்தது. அவன் வீட்டில் ஆபாச புத்தகம் என்று அப்பா அடித்து வீடுவார் என்று பயந்து கொண்டு விடுதியில் இருந்த எனது அறையில் கொண்டு வந்து போட்டு விட்டு போனவன் தான் அதனை திரும்ப எடுத்துக் கொள்ளவேயி்ல்லை... வீடுதியில் இருக்கும் போது புதியவர்கள் வரும் போது அவர் படிப்பதற்கா தருவோம்... ஆபாச புத்தகம் இல்லாத போது... மேலும் ஜுனியர் மாணவர்களை ரேக்கிங் செய்வதற்காக கொடுத்துப் படிக்க சொல்லுவோம்... இப்படி பல பயன்களைத் தந்த அந்த புத்தகத்தை இதுவரை நான் முழுமையாகப் படித்ததே இல்லை..... எனினும் என் புத்தக அலமாரியில் இன்னும் இருக்கிறது... ஏனெனில் நான் போகி கொண்டாடுபவன் இல்லை....
ReplyDeleteபுத்தகத்தை படிக்கச் சொல்லி ரேக்கிங்கா! புத்தகத்தை எப்படி எல்லாம் உபயோகமா பயன்படுத்தி இருக்கீங்க ! சுவாரசியமான உங்கள் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கார்திக்.
Deleteஏதோ வில்லங்கமான புத்தகம் பற்றி பேசுகிறீர்கள் எனப் புரிகிறது....
ReplyDeleteஎனக்கு சின்ன வயதில் அப்பாவுடன் னூ நூலகத்திற்கு செல்லும் காலங்களில் அப்பா என்னை (சோவியத் ருஷ்யா எனும் ஞாபகம்) அப்புத்தகத்தைப் படிக்கச் சொல்வார்..வளவளப்பான பேப்பர்களுடன் அருமையான புகைப்படங்களுடன் ... கார்க்கியின் கதையை தரவிறக்கம் செய்துவிட்டேன் படிக்கிறேன் ... நன்றி...
எனக்கு இந்த ஒரு கதையை முழுவதும் டைப் செய்து முடிக்க 5 மணி நேரம் ஆனது..இதை மொழியாக்கம் செய்து,பின் ப்ரூப் முடித்து அழகாக அச்சிட எவ்வளவு மணித்துளிகள் உடல் உழைப்பு தேவைப்பட்டிருக்கும். அதிக எழுத்து பிழைகள் இன்றி இப்புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அப்பொழுது பெரியார் சீர் திருத்த எழுத்துக்கள் இல்லை, நன்றி ezhil.
Delete