தமிழ் இலக்கணம் தெரிஞ்சவருக்கு மேலே இருக்கும் பாரா என்னத்தை எழுதறாங்க தப்பும் தவறுமா? என்று தோன்றும் ஏனென்றால் தமிழின் பேச்சு வழக்கம் வேறு எழுத்து கோர்வை வேறு. இதை உணர்த்துவது அவர் மூளை. இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல வருவது எழுத்து வழக்கம் இல்லை மூளை பழக்கம். அதாவது சிறிய வயதில் இருந்து அவர் மூளை இது, இதுக்கு இப்படி என்று கட்டுப்பாடுகளை அமைச்சிருக்கு அதனால தவறுகளை சுட்டிக்காட்டுது. சொற்களின் கையாடல் எளிமையா இருந்தால் அதுக்கு தகுந்த படி, படிக்க படிக்க நம் மூளை சோர்வு அடைவதில்லை. பல பேர் வலுவான எழுத்துக்கோர்வையோடு இருக்கும் புத்தகங்களை தொடாம போறதுக்கு இதுவும் ஒரு காரணம். பார்த்தீங்களா... நான் மூளையின் செயல் பாட்டை எழுதப் போகையில் மொழி மீதான கவனத்திற்கு திசை திருப்புது, மூளை.
நிலைக்கண்ணாடி (mirror) உருவத்தின் இடது வலது காட்டுது ஏன் கீழ் -மேல் தோற்றம் காட்டுவதில்லை?
அரிஸ்ட்டாடில் காலத்தில் (2300 வருடங்களுக்கு முன்பிருந்து ) இருந்து இந்த சந்தேகம் இருந்துகிட்டு இருக்கு. நிலைக்கண்ணாடி பிம்பத்தை அப்படியே பிரதி பளிக்குது ஆனா நம்முடைய மூளை தான் தவறா உணர்த்துகிறதா, இது திசை குறித்த செயல் தலை கீழ் செயல்.
உதாரணமா ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும் அறையில் கண்ணாடிய கவனித்து கொண்டிருக்கும் போது உங்களிடம் கை குலுக்கும் நண்பர் தவறான கையை (இடது) குலுக்குவதாக தோன்றும். உண்மையில் அப்படியில்லை...இல்லையா?
(பலர், சீலை உடுத்தி செல்லும் வடநாட்டு பெண்களை குறு குறுன்னு? பார்குறது இதனால தானோ !)
மூளைச் செல்கள் புதிதாக உருவாக்கப் படுகிறதா?
காலங்காலமா சொல்லப்பட்டு வரும் செய்தி என்னன்னா... பிறந்ததில் இருந்து உங்களோடு வளரும் மூளை செல்கள் அப்படியே தான் இருக்குது. மூளை செல்கள் புதிதாக உருவாக்கப்படுவதில்லை. அதாவது ஏதேனும் விபத்தில் பாதிக்கப்படும் மூளை செல்கள் இறந்து போனால் திரும்ப உருவாவதில் சிக்கல் இருக்கு.
இந்த எண்ணத்தை மாத்திக்க வேண்டியதா இருக்கு சில ஆய்வின் முடிவுகள்.
கலிபோர்னியா நியூரோ பயாலஜிஸ்டுகள் இறந்தவங்களோட (டிஷ்யூ) மூளை செல்களை தொடர் ஆய்வு செய்து, சில தகவல்கள் சொல்றாங்க. மூளையில் ஹிப்போ கேம்பஸ் எனும் பகுதியில் ஆயிர கணக்கான புது செல்கள் உருவாக்கப்படுது ஆனா அவை ஒரு சில வாரங்களில் இறந்து போகிறது அல்லது அழிக்கப்படுகிறது, நம் உடலின் இம்யூன் சிஸ்டத்தால். நியூரான்களின் இணைப்பு செயல் இதை தக்க வைத்துக் கொள்வதற்கும் தவிர்பதற்கும் காராணமாகிறது.
புதிதாக உருவாகும் மூளைசெல்களை தக்க வைத்து கொள்வது எப்படி என்பது குறித்து எதிர்காலத்தில் இந்த நுணுக்கமான ஆய்வு கை கொடுக்கும்.
சுருக்கமா சொன்னா, நாம மூளைக்கு எப்படிப் பட்ட வேலை கொடுக்கறமோ அதைப் பொருத்து அதோட வளர்ச்சி அமையுது. மனச் சோர்வு மூளையின் செயலை பாதிக்கிறது என்பது உண்மைதான்.
தலைவலி எதனால் ஏற்படுகிறது ?
(சுருக்கமா...)
தலைவலி ஏற்படக் கூடிய காரணங்கள் 200 வகை இருப்பதா குறிப்பிடறாங்க. தலை வலிக்கான முக்கிய காரணம் பதட்டம் மற்றும் வேலைப் பளு (tension & over work). இதில் மைக்ரைன் தலைவலி சில மணி நேரங்களில் இருந்து மூன்று நாட்கள் கூட தொடரும். அந்த மாதிரியான சமயங்களில் நாம் எதன் மேலும் கவனம் கொள்ள முடியாது. நல்ல ஓய்வு மட்டுமே மருந்து.
சில தலைவலிகள் நாமலாகவே உருவாக்கிக் கொள்வது அதாவது சரியான உடற் பழக்கம் இல்லாம கழுத்தை சாய்த்து பணிசெய்வது, ஜீரணமின்மை(டிஹைட்ரேசன்), அதிக பெயின் கில்லர் மாத்திரைகளை உட் கொள்வது.
மிக சிக்கலான தலைவலி மூளை மற்றும் மண்டை ஓட்டுக்கு இடையில் தலையில் ஏற்படும் நுண்ணிய ரத்த கசிவினால ஏற்படுவது, மூளை ப்ரைன் டியூமரினால பாதிக்கப் படுவது. மூளைக்கு சரியான ஆக்ஸிஜன் கிடைக்காம போறது, போர்வையால முகத்தை மூடி தூங்குவதினாலேயும் தலை வலி ஏற்படுது. சுற்றுபுற சீர்கேட்டினால் கார்பன் மோனாக்சைடால் நம் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு, கண் பாதிப்பும் ஒரு காரணம்.
சில விலங்குகள் பறவைகள் ஒரு குறிப்பிட்ட கண், காலை உபயோகிப்பதா இருக்கு, மனிதர்கள் மட்டும் இதுல வித்தியாசப்படுகிறார்கள் ஏன் என்பது சரியா தெரியலா. 90 சதவீதம் வலது கை பழக்கம் உள்ளவங்களா இருக்காங்க. மொழி நினைவாற்றலுக்கு ஒரு பக்க மூளை செயல் படுது, கட்டளைகளுக்கு இன்னொரு பாகம் செயல் படுது. வலது கை பழக்கம் உடையவங்களோட மூளையின் இடது பாகம் பேசுவது இன்னபிற செயல் கட்டளைகளை இயக்குது. அப்படி பார்த்தா இடது கை பழக்கம் உடையவங்களோட மொழி இயக்கம் மூளையின் வலது பக்கம் செயல்படனும் ஆனா அப்படி இல்ல பாதிப் பேருக்கு மட்டுமே இப்படி இருக்கு. டென்னிஸ், கிரிகெட், பாக்ஸிங் இந்த மாதிரியான விளையாட்டுகளில் இடது கைப் பழக்கம் உடையவங்களோட ஆதிக்கம் இருக்கு, அவுங்களுக்கு இது சாதகமான விசயம். இடது கைபழக்கம் உடையவங்க வரையும் ஓவியமும் ஒருவித ஸ்பெஷாலிட்டியோட இருப்பதும் கண்கூடு.
தொடர்புடைய பதிவுகள் :
நமது மூளை குறித்த நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!
தலை ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் !
நம்மை நாமே ஏன் கிச்சுக்கிச்சு மூட்டி கொள்ள முடிவதில்லை ?
மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! - ஒரு ஆய்வு
சுவையான அறிவியல் தகவல்கள்! நன்றி!
ReplyDeleteநன்றிங்க சுரேஷ்
Deleteவிளக்கங்கள் சூப்பர்... நன்றி...
ReplyDeleteநன்றிங்க DD :0)
Deleteபயனுள்ள தகவல்கள் அறிந்து கொண்டேன்
ReplyDeleteவாங்க சக்கர கட்டி நன்றி ...
Deleteதெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்..
ReplyDeleteநன்றிங்க எழில்
Deleteநீங்க சொன்னது எல்லாம் மூலை லே சாரி மூளைலே வச்சுக்கிறேன்..
ReplyDeleteநன்றிங்க ஆவி சரியா புரிஞ்சுகிட்டீங்க :-) :-)
Deleteஒற்றை வார்த்தை அர்த்தம் ஓராயிரம் நன்றிங்க!
ReplyDeleteStuff full post . Thanks Brother.
ReplyDelete