கோவையை பற்றிய வருத்தம் எனக்கு எப்பவுமே ஒன்று உண்டு. 1917 லேயே ஊமைப் பட காலத்திலேயே கோவை மண்ணைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர்தான் திரைப்படங்களை மக்களுக்கு போட்டு காட்டினார். பட்ஷிராஜா ஸ்டுடியோ, சென்ரல் ஸ்டுடியோ இருந்தது இப்ப காணாம போயிடுச்சு. தொழில் துறை வளர்ந்த அளவுக்கு கலைகள் இங்க வளர்த்தப் படவில்லை, ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கு ஒருதரம்...அமெச்சூர் நாடகம் போடுவாங்க. கலைக்காக இந்த மண்ணில் பர்மனெண்ட்டா ஒரு கல்சுரல் சென்டரை உருவாக்கிய கலைஞன் திரு.சீனிவாசன் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஓவிய கல்லூரியில் படித்தபோது பார்த்த ஓவியங்கள்..18ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை, இங்கு நிறைய காட்சிப் படுத்தப் பட்டு இருக்கு. எகிப்து, இந்தியா, தாய்வான்,ஜப்பான் தயாரிப்பு ஓவியங்கள் இங்கு வெச்சு இருக்காங்க..வேர்ல்ட் பைன் ஆர்ட்ஸ் தனியா இருக்கு, அது போக 2003 லிருந்து கடந்த பத்து ஆண்டுகளில் 125 எக்ஸிபிசன் நடத்தி இருக்காங்க. என்பது உண்மையிலேயே ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. வாழ்நாள் முழுக்க இவங்க பணி தொடரனும்.
ஓவிய கல்லூரி வாழ்க்கை...அந்த நாட்களில், ஆசிரியர்கள், மாணவர்கள்...இனிய நினைவுகள் பற்றி சொல்லுங்கள்.
இன்னொரு பிறவி இருந்ததென்றால் பழையபடி அதே ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அப்ப எனக்கு வீட்டில் போடப் பட்டு இருந்த கண்டிசனச் சொல்லனும் எந்த பொட்ட புள்ளயையும் பார்க்கக் கூடாது நல்ல புள்ளயா இருந்தாலும் கெட்டபுள்ளயா இருந்தாலும் பொட்ட புள்ளய பார்க்கக் கூடாது என்று பட்ட போட்டு அனுபிச்சாங்க..பார்த்தா கொண்டே போடுவேன் என்று சொன்ன காலம். ஆனா ஏகப்பட்ட பொண்னுங்க வருவாங்க பெங்காலி,மார்வாடி,குஜராத்தி,மலையாளி,ஆந்திரா...இங்கிருந்தெல்லாம்..ஆனா ஒன்னும் பன்னமுடியாது அம்மா அப்பா குறுக்க வந்திட்டே இருப்பாங்க...வாத்தியாருங்களே பொன்னுங்கள லவ் பன்னி கல்யாணம் பன்னிக்கிட்டாங்க. நடிகனானேன் அதுக்கப்புரம் 14 வருசம் கழிச்சு ஓவியர் கோபுலு அவர்களை அப்ப சந்திச்சேன்...
இந்தியாவில் பீஷ்மர் பிதாமகர் மாதிரி ஓவியர் கோபுலு அவரை,(90 வயதை தாண்டிய மனிதர்) பார்க்கிறேன். நடிகன்னு என்ன அறிமுகப் படுத்திக்க எனக்கு அவமானமா இருந்தது நான் வரைஞ்ச ஓவியங்கள காந்திபடத்தையும்,மதுரை,தஞ்சாவூர் படத்தை அவருகிட்ட காட்டினேன். தஞ்சாவூர் படம் 8 மணிநேரம் ரோட்ல உட்கார்ந்து வரைஞ்ச படங்கள்னு சொன்னேன்.
யேசுநாதர் பிறப்பு படத்தை ஒரு நாளைக்கு 4 மணிநேரம் பத்துநாட்கள்ல வரைஞ்சேன்னு சொன்னேன். வாங்கி பார்த்திட்டு அப்படியே என் கைய தடவுனாரு,..வாட் எ ஒண்டர்புல் ஹாண்ட்ஸ்னு சொன்னாரு படக்குன்னு என் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.
" ஏன் என்ன ஆச்சுன்னு " கேட்டாரு...சாகும் வரை பெயிண்டரா இருக்கனும்னு ஆசைப் பட்டு மெட்ராஸ் வந்தேன் விதி வசத்தால “நடிகனாயிட்டேன் அவமானமா இருக்குதுன்னு சொன்னேன்”
அவர் சொன்னாரு ”யூ டேக்கன் எ ரைட் டெசிஸிசன் ” ஏன்னா இந்தியாவில ஓவியருக்கு மரியாதை கிடையாதுன்னாரு. ஓவியன்னு சொல்லிட்டு வீட்டு வந்திருந்தீனா உள்ளயே விட்டு இருக்கமாட்டேன்..நீ வேறு துறையை தேர்ந்தெடுத்ததால காருல வந்திருக்கே..
ஓவியரா இருந்திருந்தா பெட்ரோல் போட முடியாத சூழல் இருந்து இருக்கும். ஏன் நீ ஸ்கூட்டர் கூட வாங்கி இருக்க முடியாது, அப்பரம் எங்கே பெட்ரோல் போடுவேன்னாரு. அந்த வாழ்க்கை ப்ரமாதமா இருந்தது.
அப்ப தேவைகள் ரொம்ப குறைவு, எவன் ஒருவனுக்கு தேவைகள் குறைவோ அவன் தான் நிறைந்த செல்வந்தன். இரண்டு வருசம் இந்தியா பூரா சுத்தி படம் வரையரதுக்கு 7500 ரூபா இப்ப முடியுமான்னு யோசிச்சு பாருங்க.
திருப்பதி கோயிலுக்கு மக்களோட மக்களா கோயிந்தா போட்டுட்டு ரோட்ல படுத்துப்பேன்... சாப்பிடுவதற்கு வாங்கிய மசால் பூரி வாங்கிட்டுப் போய் மலை மலையா சுத்திப்பார்த்து வரைஞ்சிட்டு இருப்பேன் வாங்கி வெச்சது , கெழங்கு கெட்டு போயிருக்கும் தூக்கி வீசிட்டு வெறும் பூரிய மட்டும் சாப்பிட்டுக்குவேன். இப்படியெல்லாம் ஓவியம் வரைஞ்சேன்.
இந்தியாவில் ஓவியனா பிறக்கனுமான்னு தோனும். ஏன் இந்தியாவிலே பிறக்கனுமானு தோனும்...இப்ப இருக்கற சூழ் நிலை அப்படி.
"கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா" நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது
#நடிகர்சிவகுமார்_அனுபவம்_பகுதி 2
தொடர்கிறேன்...
நன்றி , கலாகுமரன்

படத்தில் ஓவியர் ஜீவா, சிவகுமார் (tks to photos from artist Jeeva)
"கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா" நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது
#நடிகர்சிவகுமார்_அனுபவம்_பகுதி 2
தொடர்கிறேன்...
அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துகள் !!
நன்றி , கலாகுமரன்
நாளைய சூழ்நிலை எப்படியோ...? ம்... தொகுப்பிற்கு நன்றி... தொடருங்கள்...
ReplyDelete//ஏன் இந்தியாவிலே பிறக்கனுமானு தோனும்...இப்ப இருக்கற சூழ் நிலை அப்படி.
Delete// சூழல்கள் நம்மை இப்படியும் யோசிக்க சொல்கிறது... நன்றி D.D
தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களுக்கும் ..உங்கள் குடும்பத்தாருக்கும் ... பொங்கல் தின நல் வாழ்த்துகள் !!
Delete