ஓவிய கலைஞன் தான் கண்ட காட்சியை ஓவியமாக்கும் போது அவன் கைக்கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன? குறிப்பாக மனித உருவங்களை வரையும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன?
ஒன்னும் பெரிய விசயம் கிடையாது போட்டாகிராபிக் கண்ணு நமக்கு வேணும் பார்த்தவுனடே நாம என்ன பார்கிறமோ அத மனசில பதிஞ்சிருக்க வேனும், பதிவானது அப்படியே மேல போயி அப்படியே சுத்திட்டு இருக்கும் (தலையை தொட்டு காட்டுகிறார்)
உதாரணமா இந்தியாவில 127 கோடி பேரு இருக்காங்கன்னு சொல்றோம் அத்தன பேரோட முகத்த போட்டோ எடுத்து இந்த ஹால்ல இருந்து ஏர்போர்ட் வரை மொத்தமா ஒட்டிவெச்சு பார்த்தோம்னா... எல்லாத்திலேயும் ரெண்டு கண்ணு, மூக்கு, இரண்டு காது இருக்கும்.. இந்த முகங்கள்ள எந்த ஒரு பேஸ் கூட ஒரே மாதிரி இருக்காது. புருவங்கள்,மூக்கு தூவாரங்கள் இதில எதுவுமே ஒன்னுபோல இருக்காது. இது தான் இயற்கையோட அற்புதம்.
இறைவனோட படைப்பு. அதுமட்டும் இல்ல ட்வின்சுன்னு சொல்றோம். ராமன் லச்சுமன்னு பேர் வைப்போம் தனியா பார்த்தா யார் ராமன் யாரு லட்சுமன்னு குழப்பமா இருக்கும். ரெண்டு பேரையும் நேரா நிக்க வைச்சு பார்த்தம்னா. இரண்டு பேர்த்துல சின்ன டிபரண்ட் இருக்கும், கலர் வித்தியாசம் இருக்கும், ஒருத்தன் ப்ரைட்டா இருப்பான் ஒருத்தன் டார்க்கா இருப்பான். முடில வித்யாசம் இருக்கும், ஹைட்ல சின்ன வேரியேசன் இருக்கும். புருவ முடில சின்ன சேஞ்சஸ் இருக்கும்,பேசும் போது தொண்டை சவுண்ட்ல வித்யாசம் இருக்கும்.
அதுக்கே நீங்க போகாதீங்க...ஸ்டெயிர்ட்டா எடுத்த உங்க போட்டோவுலயே பாஸ்போர்ட்லேர்ந்து 12 x 10 பெரிசா எடுத்துக்கிட்டு நெற்றியில் இருந்து ஒரு நேர் கோடு போட்ட மாதிரி கட் பன்னி எடுத்து வெச்சு பார்த்தம்னா ..சூரியாவுக்கு கூட வலது கன்னு பெரிசா இடது கண்ணு சின்னதா தெரியும், அதேமாதிரி ரஜினிக்கு; மூக்கு தூவாங்கள், உதடுகள் இப்படி பகுதிக்கு பகுதியே வித்தியாசம் இருக்கும். எம்ஜியார்,சிவாஜிக்கு வலது தாடை பெருசா இருக்கும் (யாராவது கவனிச்சிருக்கீங்களா), எந்த தாடையை அதிகமா பயன் படுதரமோ அது வலிமை மிகுந்து பெரிசாயிரும். நூத்தில 85 பேருக்கு இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா, நாகேஷ், நான் மூனுபேருக்கும் இடது தாடை பெரிசா தெரியும். இந்த மாதிரி உலகத்திலேயே சின்ன வயசிலேயே மோசமான தோற்றம் உடையவங்க இரண்டுபேரு ஒருத்தர் மஹாத்மா காந்தி இன்னொருத்தர் லிங்கன் சந்தேகம் இருந்தா ஜீவா கிட்ட கேட்டு பாருங்க (ஓவியர் ஜீவா) காது எலி காது மாதிரி பெரிசா இருக்கும், நெஞ்சு குறுகலா இருக்கும் (கிண்டல் பன்றதா எடுத்துக்காதீங்க... பெயின் டரா சொல்றேன்) ரெண்டு கன்ன எழும்பும் துருத்திட்டு இருக்கும் அப்படியான முகம் வாழ்க்கையில் மேம் படும் போது அவங்க முகம் அழகாகிடுது. நான் வரைஞ்ச காந்தி போர்ட்ரேய்ட் பாருங்க தெரியும்.
லிங்கன் போர்ட்ராய்ட் பார்த்தீங்கன்னா தெரியும் கன்னம் எல்லாம் ஒடிங்கிப் போய் இருக்கும் தாடி வெச்சு இருப்பாரு, கண்ணு உள்ள போன கண்ணு நீண்ட கைகள்...
அழகான முகம்னா நேரு, இந்திரா காந்தி தீட்சயமான கண்கள், நீளமான மூக்கு, நேரா போட்டோ எடுத்தா மூக்கின் தூவாரம் தெரிய கூடாது இரண்டு கண்களும் ஒரே அளவாக,இடைவெளி (டிவைடர் வெச்சு மெஸர் பன்னீங்கன்னா) சமமா இருக்கனும், நெற்றி,மூக்கு, உதடு தாடை இவைகளுக்கு இடையேயான இடைவெளி சரிசமமா இருந்தா அந்த முகம் அழகானதா தெரியும். இதுதான் சாமுத்ரிகா லட்சனம். கோவில் சிலைகள் இதன் அடிப்படையில் கண்டிப்பா இருக்கும், இந்த அளவுகள் கரெக்டா இருக்கனும். காது புறப்பட வேண்டிய இடம் கண்ணுலிருந்து நேரா கோடு போட்டீங்கன்ன கொஞ்சம் மேலிருந்து காதுமடல் ஆரம்பிக்கும். அதுக்கு மேல வரஞ்சீங்கன்ன அது மொராஜி தேசாய் காது( பெரிசா இருக்கும்). அதே மாதிரி பக்கவாட்டு பகுதியில் இருந்து பார்க்கும் போது, மேல் உதடு கொஞ்சம் வெளியேயும் கீழ் உதடு கொஞ்சம் உள்ளேயும் இருக்கனும், உள்டாவும் இருக்கும், சந்தரகலான்னு ஒரு நடிகை இருந்தாங்க அவங்களுக்கு மேல் உதடு சின்னதாகவும் கீழ் உதடு பெரிசாகவும் இருக்கும், இது இயற்கையோடு படைப்பு.
ஹூயூமன் பாடில..உடம்புடைய அளவு பார்த்தீங்கன்னா, பத்மினி, வைஜெயந்திமாலா இருவரும் அழகானவங்க ஆனா சிலைபோன்ற அழகு உடையவங்க வைஜெயந்திமாலா. ஒரே உயரம் உடைய கணவன் மனைவி ரெண்டு பேர்ல தனியா பார்த்தா அம்மா கொஞ்சம் உயரமா இருப்பாங்க போலிருக்கேம்பாங்க இதுக்கு காரணம் உடை. ஆண்களுக்கு முதுகெலும்பு நீளம் ஜாஸ்தி, பெண்களுக்கு குறைவு, சிம்பிள் தியரி யாருக்கு கால் நீளமா இருக்கோ அவங்க உயரமா தெரிவாங்க. இந்த மாதிரி உருவ அமைப்பை ஸ்டடிபன்னிதான் வரையனும்.
இயற்கை காட்சிகளை வரையும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன?
கொடைக்கானல் போரீங்க எந்த பகுதியை வரையனும் தெரியாது.. அப்படியே பார்த்துட்டு போனீங்கன்னா குறிப்பிட்ட பகுதி அழகா இருக்கும் வரையலாம்னு உங்களுக்கே ஐடியா கிடைக்கும். அடிப்படை விசயம் என்னன்னா நாலு முனைப் பகுதில எந்த பகுதியும் சொட்டையா இருக்க கூடாது. காட்சியோட அமைப்பு உங்க மனசுல பதிஞ்சு வெச்சுகனும். திருவண்ணாமலை கோயில வரையப் போயிருந்தப்ப ஒரு வீட்ல பர்மிசன் வாங்கி வரைய ஆரம்பிச்சேன். வரைய ஆரம்பிச்ச உடனே மேகங்கள வரைந்தேன் ஏன்னா மேகம் 3 நிமிசத்தில மறைஞ்சி போயிரும்... அதுக்கப்புரம் கோவில் மலைகள வரைஞ்சேன். இதுமாதிரி ஸ்பாட்ல முடிவெடுக்க வேண்டிய விசயங்கள் இருக்கும். அதே மாதிரி தஞ்சாவூர் கோவில் வரைந்தப்ப காலை 6 மணிக்கு ஆரம்பிச்சு மத்தியானம் 2.30 மணிவரைக்கும் சிங்கில் சிட்டிங்ல 8 மணிநேரம் வரைஞ்சேன். காலைல ஆறரைமணி..ஏழு..ஏழரைமணில சூரிய உதிச்சு கோயில் மேல அடிக்கும் உச்சி நேரத்துக்கப்புரம் ஷேடோ விழ ஆரம்பிச்சுடும்
மூனுமணிங்கும் போது கருப்பா விழ ஆரம்பிச்சுடும்...அதுக்கப்புரம் வரையறது கஷ்டம். 6 மணிக்கு வரையும் போதே பேசிக்கல் லைட் அண்ட் ஷேடிங் வரைஞ்சிடனும்..மத்த டீட்டெய்ல்கள அப்புரம் வரையலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையும் இதுபோல வே வரைஞ்சேன். 10 மணிநேரம் ஆச்சு. திருப்பதி கோயில் வரையும் போது பாதில மழை வந்திடுச்சு. ஷேடிங் ஞாபகம் வெச்சு வரைய வேண்டியதாப் போச்சு. இந்த மாதிரி லேண்ட் ஸ்கேப் வரையும் போது சிக்கல்கள் இருக்கு.
ஓவியர் நடிகரான போது சந்தித்த சங்கடங்கள் என்னென்ன?
அவற்றை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்.
ஓவியர் வாழ்நாள் பூரா பேச வேண்டியதில்ல கை பேசுதில்ல. நடிகனுக்கு வேற வழி இல்ல பேசியே ஆகனும். 1950 - 60 கள்ள சினிமாவில் நல்ல தமிழ் இருந்தது அதை மறுக்க முடியாது. 45 பைசா குடுத்தாலே படம் பார்க்க முடிந்தது, நடிகனுக்கு அடிப்படை விசயம் உச்சரிப்பு, மேடை பயம் இருக்கக் கூடாது, நினைவாற்றல் இருக்கனும். சிவாஜி எம்ஜி ஆர் நாடகங்கள்ல நடிச்சு வந்தவங்க அவங்களோட நடிக்கனும்னா நாடகத்தில நடிச்சு பயிற்சியும் அவசியமா இருந்தது. 7 ஆண்டுகள் நாடகத்தில் நடித்தேன். கந்தனென்பார், கடம்பனென்பார்,கார்திகேயனென்பார்,குகனென்பார்,சண்முகனென்பார் உம்மையும் படைத்தபின் சூரனையும் வதைத்த திண் தோள்கலெங்கே...ன்னு வசனம் பேசும் போது வீட்டுக்கே ஓடிப் போயரலாமான்னு தோனும். (கட்டபொம்மன் முழுநீள வசனம் பேசி காட்டுகிறார்...கிஸ்தி திறை வரி வட்டி வேடிக்கை வானம் பொழிகிறது பூமி விழைகிறது,... யாரிடம் கேட்கிறாய் வரி மானம் கெட்டவனே... ) நல்ல புள்ளயா இருந்தாலும், கெட்ட புள்ளயா இருந்தாலும் பொட்ட புள்ளய பார்க்கக்கூடாது என்கிற கண்டிசன்லயே சினிமாவுக்கு வந்தேன்.
"கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா" நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது
#நடிகர்சிவகுமார்_அனுபவம்_பகுதி 1
தொடர்கிறேன்...
நன்றி , கலாகுமரன்

அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்...
Deleteஒரு நல்ல மனிதனின் அனுபவ பகிர்வு ... நன்றி
ReplyDeleteநன்றி நண்பா
Deleteபொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றிங்க... உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
Delete