பரதகலை பற்றியது, பரத நாட்டியம் ஆடுவதில் மனிதர்களுக்கு கிடைக்கும் அனுபவம் பற்றி கூறுங்கள்.
மனிதன் கதை சொல்லியாக இருந்த ஆரம்ப காலத்திலே இது தோன்றி இருக்க வேண்டும். பின்னர் பொருளார ரீதியாக இது வளர்ந்தது. கதை சொல்லியே காலத்தை ஓட்டியிருக்கிறான். கதை சொல்ல ஆரம்பிச்சான், பாடிட்டு கதை சொன்னான்,பின்னாடி ஆடிட்டே கதை சொல்ல ஆரம்பிச்சான்.
கி.பி 2 நூற்றாண்டில் இருந்து கி.பி 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஏற்படுத்தப் பட்ட அஜந்தா எல்லோரா சிலைகள பார்த்தீங்கன்னா பரத நாட்டியம் எந்த அளவு வளர்ந்திருந்ததுன்னு தெரியும்.. அதுக்குமுன்னாடி கி.மு 2 லேயே இது இருந்திருக்கலாம். இந்த கலையை காப்பாற்றியவன் ராஜ ராஜ சோழன் கி.பி 10 நூற்றாண்டில் ஓவியமாகவும், சிலைகளாகவும் படைக்க வெச்சான்.
அவங்களுக்கு ஆதரவு கொடுத்தான், அதுக்கப்புரம் பல்வேறு ஆட்சியாளர்கள் வரும்போது அப்படியே குறைஞ்சு குறைஞ்சு போய், அந்த கலை சம்பந்தப் பட்டவங்க எல்லாம் கோயிலோடு வாழ்ந்து, திருமணம் செய்து கொள்ளாம போய், ”தேவதாசி” என்று முத்திரை குத்தப் பட்டு ஆடுவதற்கு தடை செய்யப்பட்டு அவமானப் படுத்தப்பட்டாங்க. நாடு சுதந்திரம் அடையரதுக்கு ஒரு ஐம்பது வருசம் முன்னாடி, பால சரஸ்வதி,ருக்மனி அன்னை போன்றவங்க எல்லாம் தமிழ்நாட்டில் மரியாதை செய்யப்பட்டாங்க.
பரத நாட்டியம் ஆடும் பொன்னுங்க எல்லாம் “தாயே யஷோதா..ன்னு” பாடிட்டு இருக்க அவங்க ஸ்மைலோட ஆடினா போதும். சினிமாவில் எனக்கு கொடுத்த அசைன்மெண்ட் பாடிட்டே ஆடனும்...பாட்டுன்னா எப்படி “ அனங்கன் நல் கஜநண்பன் வசந்தன் மன் மதனென்பன் வணங்கும் என் உயிர் மன்னவா...கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவி பொங்கும் தனித்தோங்கும் கயல் கன்னியே, ஆடலுடன் பாடல் இன்பம் ஊடலுடன் கூடல் இன்பம் தேடலும் உன் செயலல்லவா.... ( இணைந்திங்கே சிவம் கானுவோம்...மூச்சுவிடாமல் தொடர்ந்து பாடி முடிக்கிறார் பலத்த கைதட்டல்..என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை)”
இப்படி பாடிட்டே ஆடும் போது வாய் சரியா இருந்தா கை மூவ்மெண்ட் போயிடும்..
மூவ்மெண்ட் இருந்தா வாய் போயிடும்..முதன் முதலா டான்ஸ் ஆடும் போது கைய இப்பிடி இப்பிடி மூனு தடவை செஞ்சேன்..கவுண்டரே அளந்திட்டு இருக்கீங்களே எத்தனை முழம்னாங்க..
என்னோட ஸ்ரீவித்யா நடிச்சாங்க அவங்க ஐந்து வயசில இருந்தே ஆடிட்டு இருந்தாங்கலாமா.. கேவி மஹா தேவன் மியூசிக் காரைக்கால் அம்மையார்னு ஒரு படம் கே.பி. சுந்தராம்பால் 64 வயசுல பாடிட்டு இருந்தாங்க..
கே.வி.மாஹா தேவனுக்கு பதிலா சேஞ்சுகாக இருக்கட்டுமேனு ஒரு படத்தில குன்னக்குடி வைத்திய நாதனனை மியூசிக் டைரக்டரா போட்டாங்க. ஏ.வி.எம்.. குன்னகுடி வைத்திய நாதனா அவன் பெட்டி போடற பையனாச்சே அவன் எப்படி மியூசிக் போடுவான்னார். தயாரிப்பாளர் சீரியசா இருப்பார் போலிருக்கேன்னு சொன்ன உடனே ஆர்மோனிய பெட்டிய தூக்கிட்டு காலைலேயே அவர் வீட்டுக்கு போனாரு வைத்தியநாதன். என்னப்பா பில்லு ஏதாவது இருக்கா அம்பின்னாரு ஏவிஎம். இவரு இல்லீங்க சின்ன பாட்டு ஒன்னு சுரம் சேர்த்து கொண்டாந்திருக்கேன்... சரி போடு பாப்போம்...
தக தகவென தக தகவென ஆடவா.. சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா.. (பாடலை பாடிக் காட்டுகிறார் இந்த பாடல் 1972ல ) பாட்டை கேட்ட ஏவிஎம் சாகரவரைக்கும் நீதாண்டா மியூசிக் டைரக்டர்னாரு. தம் கட்டி பாடிய கே.பி. சுந்தராம்பாள் யப்பா (அவருக்கு அப்ப 64 வயசு ) என்னப்பா இந்தமாதிரி மூச்சு வாங்குதேன்னாங்க. யாரு பார்வதி...ஸ்ரீவித்யா, சிவன் யாரு...கோயமுத்தூர்லேர்ந்து வந்த பையன் டான்ஸ் ஆடுவானா... இல்ல இனிமேதான் தெரிஞ்சிக்க போறான் ...சரியாப்போச்சு..இனிமே இத கத்துக்கிட்டு ஆயுசு முடிஞ்சுடுமேப்பான்னாங்க. அதுக்கப்புரம் விடாம ஆடி கத்துகிட்டு அந்தப் படத்தில ஆடி நடிச்சேன் போதும் போதும்னு ஆயிடுச்சு. ஓவியனா இருக்கரது வேற விசயம்...நடிகனா இருக்கரது வேற.
மெல்லிசைப் பாடலுக்கும் கர்னாடக சங்கீதத்திற்கு வேறுபாடு எப்படிப் பார்கிறீர்கள்.
ஊருக்குள்ள கரண்டே கிடையாது அரிக்கேன் வெளக்கு வெச்சே படிசிக்கிட்டு இருந்தேன்.. ரேடியாவுல பாட்டு கேக்கரதெங்க.. பாட்டு கேட்காம கர்னாடக சங்கீதம் எப்படி தெரியும். விதி எப்படி விளையாடுது பாருங்க.
டைரக்டர் பாலசந்தர் படம், சிந்துபைரவி பாகவதர் கேரக்டர், ஒரு பாறைமேல பத்மாசனம் போட்டு உட்கார்ந்து பாடறமாதிரி ஒரு சீன்வரும் அவங்க செளரியமா மேட்டுமேல கேமரா வெச்சுகிட்டு உட்கார்ந்திருப்பாங்க நடுக்கடல்ல நான் மட்டும் பாறையல உட்கார்ந்து பாடனும்... சாட் எடுக்கும் போது பெரிய அலை வந்து பொத்துன்னு தூக்கி கடல்ல போட்டுரும்.. சட்டைய திரும்ப காயவெச்சு போட்டு எடுக்கனும்... இப்படியே மாத்தி மாத்தி உணர்ச்சிகரமா நான் நடிக்கனும்...அதோட வாயசைப்பு சங்கீத ஸ்ருதிமாறாம வாயசைச்சு பாடனும்.. நிசரிசசச நிச ரிசசச...பமப கமப நிசரி...பகம (பாடிக்காட்டுகிறார்) யோசிச்சு பாருங்க. நமக்கு ஸ்வரமே தெரியாதே..இந்த எழுத்துக்கள ஒன்னொன்ன பிரிச்சு மனப்பாடம் பன்னி அப்புரம், ஜேசுதாசோட பாட்டையும் மண்டகுள்ள போட்டு இமய மலமேல உட்கார வெச்சாலும் அழுத்திரோவோம்ல...
யோகாசனம் எத்தனை ஆண்டுகளாக செய்கிறீர்கள் ? ப்ரானாயாமத்தின் பயன் என்ன?
இப்பத்தான் இப்பத்தான் ஒரு 55 வருசமா பன்னிட்டு இருக்கேன்..
காபி டீ கூட சாப்பிடுரது இல்ல. ப்ரானாயாமம் இதை திருமூலர் அழகா சொல்லிட்டுப் போய்ட்டார்,...
ஊரார்கூடி ஒலிக்க அழவிட்டு
பேதமை நீங்கி பிணம் என்று பெயரிட்டு
சூரகன் காட்டிடை கொண்டுபோய்
சுட்டிட்டு நீரினில் மூழ்கி நிலை பெற்றோரே.
எப்பேர்பட்ட கொம்பனா இருந்தாலும் இறந்துபோன கடைசில
பிணம் -ன்னுதான் சொல்லுவார்கள்... சாருக்கு மூக்குல பஞ்சு வைன்னு சொல்லமாட்டான்.. பிணத்து மூக்கில ன்னுதான் சொல்லுவான். தூக்கிட்டு போவான் எரிப்பான் இல்லன்ன புதைப்பான். வாழ்க்கைல என்னத்த கண்ட மாப்ள என்று அழுவார்கள்... செத்துபோனவன் சம்பாரிச்ச சொத்து இதுதான்.
யாக்கைன்னா உடம்பு, யாக்கை நிலையாமை இந்த உடம்பு
காப்பாற்ற என்ன வழி.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடம்ப காப்பாத்து, தண்ணி அடிக்காத, பீடி சிகரெட் குடிக்காத, டயத்துக்கு சாப்பிடு, ஏழுமணி நேரம் தூங்கு இதத்தான் சொன்னாரு. அதுல ஒசத்தியான விசயம்னா ஒருமனுசன் சாப்பாடு இல்லாம ஒருவாரம் பத்துநாளு இருக்கலாம் தண்ணி குடிக்காம நலஞ்சு நாளு இருக்கலாம்...ஆனா சுவாசிக்காம இருக்க முடியாது. ப்ராணம் இல்லாம இருக்க முடியாது. இறந்து போனா ப்ராணம் போயிருச்சுன்னு சொல்லுவாங்க.
இடது பக்க நாசிவழியா காத்த உள்ளிழுத்து வலதுபக்க நாசிவழியா 172 முறை வெளிய விடுறது. இதேமாதிரி வலது நாசிவழியா காத்த உள்ளிழுத்து இடது நாசிவழியா 172 முறை வெளியே விடறது. இந்த மாதிரி செஞ்சா ஒருத்தன் 172 வருசம் வாழலாமாம். இதுமாதிரி நாஞ்சென்சுபார்த்தேன்.... பாழாப் போன உலகத்துல 172 வருசம் வாழனுமா 86 வருசம் வாழ்ந்தாப் போதும்னுட்டு பாதியா குறைச்சுட்டேன். ப்ராணாயாமம் கரது உயிரோட இருக்கறதுக்கான விசயம். தூங்கிட்டு இருக்காம காலைல நாலரை மணிக்கு எந்திருச்சு சூரியன பாருங்க... சூரியன பார்த்தா ரொம்ப வருசம் உயிரோட இருக்கலாம்.
அக்கால ஆசிரியர் மாணவர் உறவு இக்கால உறவு குறித்து சொல்லுங்கள்.?
இது கொஞ்சம் சீரியசான கேள்வி... மாணவன் டீச்சரை கத்தியால் குத்துவது, பல்லை உடைப்பது...பத்திரிக்கைகல்ல படிக்கிறோம். உலகம் இப்படி போயிட்டு இருக்குது. நான் கலங்கல்ல தான் படிச்சேன். கல்யாண சுந்தரம் வாத்தியார் ஒழுங்கா படிக்கலேன்னா கொன்னுடுவாருங்க... கொன்னே போடுவார். அப்படி பட்ட வாத்தியாரிடமே படிச்சேன். கால் அரைக்கால் காசுக்கு நாலரைக்கால் கத்திரிக்கான்னா ஒரு காலுக்கு எவ்வளோ... சொல்லி முடிக்கும் போது 3 பைசான்னு போட்டிருக்கனும், தங்கமான வாத்தியாருங்க.. எங்கூருக்கு போற வழில தோட்டத்தில குடி இருந்தாரு ஒருநாளு அவர போய் பார்த்தேன். (என்னோட ஒரிஜினல் பேரு...தண்டபாணி)
"தண்டபாணி மழை ஏமாத்திடுச்சுடா வெள்ளாம ஒன்னும் இல்ல, காட்ல ஒன்னும் விளைய மாட்டீங்குது. மாடு கன்னு தீவனமில்ல அதையும் வித்தாச்சு.. ஒன்னும் முடில நீ ஒரு தபா காட்டுக்குள்ள போய்டுவான்னாரு.." எனக்கொன்னும் புரியல... யோசிச்சேன். கால் பூமில படனும்கிராரு
"ஐயா ...நனொன்னும் ராமபிரான் இல்லே பூமி அகலிகை இல்லே "ன்னேன்... எலேய் ராமாயணம் நாங்க தான் உனக்கு சொல்லி குடுத்தோம் எனக்கே பாடம் எடுக்கறயா... போடா...போடா -ன்னாரு. பத்தடி போய்ட்டு வந்தேன். சாதாரண ஸ்டூடன்டு என் கால் அவரு பூமில படனுமேன்னு சொல்றாரே எனக்கு அழுகையா வந்திச்சு.
மூனு வருசம் கழிச்சு திரும்ப பார்த்தேன். தண்டபானி பரவாயில்ல இடத்த ப்ளாட் போட்டு வித்திட்டேன். பெரிய புள்ளக்கு 4 லட்ச ரூவா, சின்ன புள்ளக்கு 3 லட்ச ரூவா, பேங்கல 5 லட்ச ரூவா போட்டுவெச்சிருக்கேன்னாரு. இது நம்ம நால இல்ல...காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.
இப்ப ஏதுன்னாலும் வாத்தியார சஸ்பன்ட் செய்யராங்க இது நல்லா இல்ல. அப்ப பையன் கண்ணு ரெண்டையும் மட்டு விட்டுட்டு தோல உரிச்சுடும்பாங்க... அந்த உறவு போச்சு.
"கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா" நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது
தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு, ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.., நடிகர் சிவகுமார், அவரின் பேச்சை கேட்டவர்களுக்கு தெரியும் கட கடவென பேசுவார்...ஓரளவு அப்படியே கொடுத்திருப்பதாக என்னுகிறேன்.
தொடர்கிறேன்....
நன்றி
கலாகுமரன்.
தொடர்புடைய பகுதிகள் :
சிவகுமாரின் ஓவிய அனுபவம் -பகுதி 1
சிவகுமாரின் ஓவிய அனுபவம் -பகுதி 2
திருமூலர் சொன்னதாகட்டும், மற்றவைகளும் ஒருவரால் செயல்படுத்தி உணர்ந்தவர்கள் மட்டுமே சர்வ சாதாரணமாக சொல்லவும் முடியும்... அந்த விதத்தில் மார்க்கண்டேயன் (சிவகுமார்) அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை... சட சட, பட பட பேச்சையும் பகிர்ந்து கொள்வது சிறிது சிரமம் தான்... நன்றிகள் பல...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
இவ்வளவையும் எப்படி சார் நோட்ஸ் எடுத்துகிட்டீங்க?
ReplyDeleteதிரை உலகத்தில் இப்படியும் அபூர்வக் கலைஞன் !
ReplyDelete+1
மிக்க நன்றி.
ReplyDelete