உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை உடற்பயிற்சி, நடைபயிற்சி முக்கியமாக உணவு கட்டுப்பாடு (டயட்). முதல் இரண்டை கடைபிடித்தாலும் மூன்றாவதை கட்டுப்படுத்த தான் பலரும் படாத பாடு படுகிறார்கள். (ஒரு சாண் வயிற்றிற்கு தானே இந்த பொழப்பு ! அதிலென்ன வஞ்சனை !!).
சரி இந்த டயட் அந்த கால குகை மனிதர்களிடம் இருந்திருக்குமா? என்று யோசித்தால் அப்ப அந்த குகை மனிதர்கள் உணவு பழக்கம் இப்போதிருக்கும் உணவு பழக்கம் போல் இருந்ததா ? என்றால் இல்லை (அப்ப ஏது பீட்சா ,பர்கர்,கேக்குகள்... !!)
பாலியோலித்திக் டயட்
பாலியோலித்திக் மனிதர்களின் உணவு என்றால் வேட்டையாடப்படும் விலங்குகள், பழங்கள், கொட்டைகள், அதாவது அம்மனிதர்கள் (2.5 million and 10,000 years ago ) டயட்டை கடைப்பிடித்து இருக்கிறார்களோ இல்லையோ அதுவே அவர்களின் உணவு பழக்கமாக இருந்து இருக்கிறது.
மனிதனின் வளர்ச்சி கட்டம் அதன் பிறகே உணவு பழக்கங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.
மனிதனின் மரபியல் கூறுகளும் மாற்றமடைய துவங்குகின்றன. விவசாயம் செய்யத்துவங்கிய மனிதனின் உணவு பழக்கங்களும் மாறின. தானியங்கள்,பால் அவனுடைய உணவில் இடம் பிடிக்கிறது. அதுவரைக்கும் கூட பிரச்சனை இல்லை. தானியங்களை மாவாக்கி பயன் படுத்த தொடங்கியதில் இருந்து அவன் செரிமான அமைப்பு முற்றிலும் மாற்றம் பெறுகிறது.
அப்படியாயின் குகை மனிதன் உணவுப் பழங்கங்களை பொறுத்த மட்டில் உணவு கட்டுப்பாட்டில்(டயட்டில்) இருந்து இருக்கிறான்.
அடுத்து உடலுக்கு தேவையான சத்துக்களை பொருத்த அளவில் சரிவிகித உணவு முறை அவன் உணவுப் பழக்கத்தில் இருந்ததா ?
நவீன உணவுப் பழக்கத்தினால் அவன் உடல் உபாதைகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டான்.
பரவலான நோய்நொடிகளான சக்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், புற்றுநோய் இவைகள் நம் உணவுகட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டவையா ? என்ற கேள்வி எழுவதில் வியப்பில்லை.
ஒன்றை நன்றாக கவனித்தோமானால் இளவயதிலேயே பால் பால் பொருட்டகளின்பால் நம் உடல் சுரப்பிகள் செரிவூட்டப் பட்டு விடுகின்றன. சிலர் மட்டும் விதி விலக்காக பால் ஆடைகள் ஒத்துகொள்ளாது. தயிர் மோர் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த ஒவ்வாமை ஏன் என்று சிந்தித்தோமானால் அது குகை மனிதர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
இன்னொருபுரம் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளும், பதப்படுத்தப்பட்ட பழரசங்களும், பதப்படுத்தப்பட்ட நான் வெஜ், ஜங்க் உணவு வகைகளும் உயர்தரமென்று எண்ணுவோர் அதிகமாகி வருகின்றனர்.
எனினும், கற்கால மனிதர்கள் போல் அல்லாமல் நமது மரபியல் கூறுகள், அமைவுகள் மாற்றப்பட்டு விட்டன என்பது மறுக்க இயலா உண்மைகள். நிச்சயமாக உணவு பழக்கத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாகவே உள்ளது.
அருமையான தகவல் பகிர்வு! உணவுப்பழக்கங்கள் மாற உடலும் பாதிக்கின்றது! நன்றி!
ReplyDelete