மீன்பிடிக்கும் சிலந்திகளில் 18 வகைகள் இருக்கிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற கண்டங்களில் இவைகள் வாழ்கிறது.
ஆறு, குளங்கள்,நீரோடைகள் இவற்றின் வாழ்விடங்கள். மற்ற சிலந்திகளை போல இவை இரை பிடிப்பதற்காக வலை பின்னுவது இல்லை. முட்டைகளை பாதுகாக்க பெண் சிலந்திகள் வலைபின்னி கொள்கிறது. சிறிய மீன் குஞ்சுகள், தவளை குஞ்சுகள் இவற்றின் உணவு. சில நீர் சிலந்திகள் நீரினுள் மூழ்கியும் மீன் பிடிக்கின்றன.
கிரேட் ராப்ட் சிலந்தி (இங்கிலாந்து), ஆறு புள்ளி மீன் பிடி சிலந்தி(US)
[Great Raft Spiders,Dolomedes triton ]
இவை கரை ஓரப் பகுதிகளில் தண்ணீரின் மேல் மிதந்தபடி இருக்கும் இவை முன்காலை மட்டும் நீரினுள் விட்டபடி நின்று கொள்ளும் அதிர்வு கிடைத்த உடனே சட்டென இரையை கவ்வி கொள்கிறது. சில வகை இலை அல்லது பாறைகளில் தொத்திக் கொண்டு முன்காலை மட்டும் நீரில் விட்டு மீன் பிடிக்கின்றன.
துள்ளும் மீனின் மேல் கடித்து விசத்தை (நியுரொடாக்ஸின்) செலுத்துகிறது (lethal neurotoxins), மயங்கி பின் இறக்கும் மீனின் உடல் பகுதிகளில் அதன் சுரப்பு ரசாயனங்களை பாய்ச்சி செரிமானப் படுத்தி உறிஞ்சி உண்கிறது.
பெரிய சிலந்தி என்று எடுத்துக்கொண்டால் 7 கிராம் எடைகொண்ட சிலந்தி 30 கிராம் மீன் குஞ்சை பிடித்து தின்று விடுகிறது.
தொடர்புடைய பதிவு :
வாவ்.. புதிய தகவல்..
ReplyDeleteநன்றி அபராஜிதன் :-)
Deleteஅறியாததகவல்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசிலந்தி பற்றி அறியாத தகவல் அறிந்தேன் நன்றி
ReplyDeleteதம 1
வலை பின்னாத சிலந்திகள் என்பதே வியப்பான செய்தி. இதில் காலை நீருக்குள் தூண்டில் போல் இட்டு மீனைப் பிடிக்கும் சாமர்த்தியம் இன்னும் வியக்கவைக்கிறது. அறியாத தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி கலாகுமரன்.
ReplyDelete