படுக்கை அறையில் சில பேருக்கு இரவு விளக்கு எரிந்து கொண்டிருந்தால் தான் தூக்கம் வரும், பலருக்கு சிறிதளவு வெளிச்சம் கொடுக்கும் விளக்காவது எரிய வேண்டும். சிற்சிலருக்கு மட்டும் வெளிச்சமே தேவை இல்லை. நிம்மதியான உறக்கத்திற்கு அறையின் விளக்கு வெளிச்சம் அதிகமாக இருப்பது பாதிப்பு என்று சொல்கிறார்கள். அது தூக்கத்திற்கு இடைஞ்சல் மட்டும் என்று இல்லாமல் "ஓபிசிடி" எனப்படும் உடல் பருமனை அதிகரிப்பது குறிப்பாக பெண்களுக்கு என்பது கண்டிப்பாக ஆய்வுக்கு உட்பட வேண்டிய விசயம் தானே.
அதுபற்றிய ஆய்வினை சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொண்டார்கள், 16 வயதிற்கு மேற்பட்ட பலதரப்பட்ட வயதில் உள்ள 1 லட்சம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டாது. அவர்களின் உணவு பழக்க வழக்கம், உடல் எடை, இடுப்பு அளவு அதிகரிப்பு, படுக்கை விளக்கு எரிவது குறித்த கேள்விகள் தொடுக்கப்பட்டன, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் என்ன முடிவுக்கு வந்தார்கள் ?
ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது என்றால் படுக்கை அறை வெளிச்சமாக இருப்பதோ, அல்லது இருட்டாக இருப்பதோ பெண்களின் உடல் எடை அல்லது ஓபிசிடி (obesity) பாதிப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே அது.
ஆனால் பொதுவில் மனிதர்களுக்கு உறக்கத்திற்கு வெளிச்சத்தினால் பாதிப்பு உண்டு. அதாவது "நம் உடல் கடிகாரம் " பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகிறது.
உடல் கடிகாரம் ( Body Clock )என்பது எல்லோருக்கும் இயற்கை கொடுத்து இருக்கும் வரம். குறிப்பிட்ட நேரத்தில் விளிப்பு ஏற்படும். ஒரு நாள் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது மாதிரியே அவர்கள் எழுந்திருப்பார்கள். இது சின்ன வயசில் இருந்தே சிலருக்கு அமைந்து இருக்கும். அவர்களுக்கு அலாரத்தின் தேவையே இருப்பதில்லை. நம் உடலில் மெலடோனின் (melatonin) எனும் ஹார்மோன் இந்த இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதுவுமே நமது பழக்க வழக்கம் தான் தீர்மானிக்கிறது.
* * * * * * *
தொடர்புடைய பதிவுகள் :
தூக்கம் வருவதற்கு எது முக்கிய காரணம்?
தூக்கமின்மை மரபணுக்களை பாதிக்கும்
தூங்கா நகரங்களின்...தூங்கா மனிதர்கள்
புதிய தகவல்
ReplyDeleteநன்றி.... @ராஜி
Deleteஇப்படிஎல்லாம் ஆராய்ச்சி பண்றாங்களா? தகவலுக்கு நன்றி!
ReplyDeletetks suresh
Deleteதெரிந்த செய்தியில் புதிதாய் ஏதோ இருக்குமென நினைத்தேன்...தகவலுக்கு நன்றி
ReplyDeleteபுதுசா என்னங்க சொல்லப் போறாம்.. அந்த மாதிரி ஆய்வே புதுசுதானே
Deleteஅறியாத தகவல்
ReplyDeleteநன்றி
படத்தையும் டைட்டிலில் இரண்டு வார்த்தையும் பார்த்து ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டீங்களே சார்.. ;-)
ReplyDeleteஎன்னமோ ஏதோன்னு நினைச்சிருப்பீங்க..அதுக்கு நான் பொறுப்பில்ல...ஹி..ஹி.
Deleteமெலடோனின் நிறத்தை நிர்ணயிப்பதாக தெரியும் .உடல் கடிகாரத்திற்கும் அதுதான் காரணமா?நல்லா விசாரித்து சொல்லுங்க !எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்!
ReplyDeleteத ம 3.
அதுவும் இதுவும் வேறு வேறு.
Delete//In humans, melatonin is produced by the pineal gland, a small endocrine gland located in the center of the brain //
மெலனின் உடல் நிறத்தை கொடுப்பது. மெலடொனின் மூளைப் பகுதியில் இருந்து உற்பத்தியாவது. கொழந்தைங்க 3 ஆவது மாசத்தில் இருந்து அதிக ஜொல்லு உடறத பார்த்திருப்பீங்க அதில அதிகமா இருப்பது மெலடோனின்..
//Melanin is produced by cells called melanocytes in a process called melanogenesis.//