அப்ப பத்து 12 வயசிருக்கும் வானத்தில் வட்டமா டார்ச் ஒளி சீரான
வேகத்தில சுத்திட்டு இருக்கும் என்ன விட பெரிய பசங்களுக்கு அது
என்னன்னு தெரிஞ்சிருந்தது. நாங்க இருக்கும் பகுதி நகரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர்ங்கரதால அந்த வட்ட டார்ச் ஒளி அமாவாசை இருட்டில் பளிச்சுன்னு தெரியும். ஜம்போ சர்கஸ், ஜெமினி சர்கஸ், ரஷ்யன் சர்கஸ் இப்பிடி பல சர்கஸ் கம்பெனிகள் அப்ப பிரபலமா இருந்தது. அவங்க கூடாரத்தில் இருந்து ஒளிவட்ட சமிங்சை தான் அது.
கயித்து கட்டில் போட்டு வாசலில் படுத்துப்போம். சிறுவர்களான எங்களுக்கு அது ரொம்ப சுவாரஸ்யமான அனுபமா இருந்துச்சு. வானத்தின் நட்சத்திர சிமிட்டல்களை ரசிச்சுகிட்டே பல கதைகள் பேசி மகிழ்வது ஏகாந்த அனுபவம் இப்போதைய சிறுவர் சிறுமிகளுக்கு இல்லாம போச்சு.
சர்கஸ் காரங்களும் அந்த ”சர்ச் லைட்டை” இப்ப அடிக்கராங்களான்னு தெரியல... அப்ப இருந்த வீதி விளக்கு வெளிச்சங்கள் முன்ன மாதிரி மஞ்சளா மினுக்கு மினுக்குன்னு இல்லாம பளீர்ன்னு இருப்பதால சர்ச் லைட் தோத்துப் போச்சானும் தெரியல...
அவங்களோட பெரும்பான்மையான இரவு வாழ்க்கை வீட்டுப் பாடம் (ஹோம் வொர்க்) செய்வதிலும் மீதி டி.வி பெட்டியும் எடுத்துகிச்சு. என் வீட்டுக்கு உறவு குழந்தைகள் வந்து தங்கினால் அவங்களுக்கு மொட்ட மாடி அனுபவத்த கொடுகிறேன். நிலாச்சோறு சாப்பிடுவது குழந்தைகளுக்கும் ஏன் பெரியவங்களுக்கும் பல சிந்தனை ஓட்டங்களை ஏற்படுத்தும் அட்வெஞ்சர்னு சொல்லலாம்.
சரி கேள்விக்கு செல்வோம்...பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?
நிலாவின் மேற்பரப்பு கண்ணாடி போல ஒளியை பிரதிபளிக்க செய்யும் வகையில் அமைஞ்சிருக்கு. சூரிய கதிர்கள் நிலவின் மேற்பரப்பில் பட்டு எதிரொளிப்பது தெரிந்ததுதான். சினிமா திரையை போல பெரிய திரைன்னும் சொல்லலாம். அமாவாசை காலங்களில் பூமியில் இருந்து சர்ச் லைட் மாதிரி பெரிய லைட்ட அடிக்கமுடியுமா ? முடியும். பெரிய பவர் லேசர் புரொஜெக்டர் வெச்சு 4 லட்சம் கிலோ மீட்டருக்கு ரீச் ஆகரமாதிரி ஒளி கற்றைகளை பாய்ச்சினா அது நிலவில் பட்டு எதிரொளிக்கும். என்ன அந்த செலவு “அஸ்ட்ரானாமிகளா” இருக்கும் அம்புடுதான்.
குழந்தைக்கால அனுபவங்களோடு அறிவியல் தகவலையும் சுவாரசியமாகப் பகிர்ந்தமைக்கு நன்றி கலாகுமரன்.
ReplyDeleteநன்றிங்க கீதா... இந்த கால பிள்ளைங்க இழந்ததில் ஒன்னு இரவு வான ரசிப்பு லயப்பு இல்லிங்களா.
Deleteஅருமையான அறிவியல் தகவல்
ReplyDeleteநன்றிங்க ஜெயக்குமார் ஐயா.
Deleteசுவாரஸ்யமான அனுபவம் இனி கிடைக்காது போல...!
ReplyDeleteஉண்மைதான் டி.டி குழந்தைகளோட வானத்த ரசிப்பீங்களான்னு கேட்டா பெரும்பாலானவங்க பதில் அதெல்லாம் எதுக்குங்க என்பது போல இருக்கு. குழந்தைகளோட மனசு விசாலமாகனும்னா இந்த மாதிரியான ரசிப்பு அவசியம்ன்னு நினைக்கிறேன்.
Deleteசூரியனுக்கே டார்ச் அடிக்கிற திறமைசாலிகள் நம்மகிட்டே இருக்காங்க கலா குமரன் ஜி !
ReplyDeleteதம+1
தோ..பின்னாடியே வருவர் பாருங்க...
Deleteகலா குமரன்,
ReplyDelete//நிலாவின் மேற்பரப்பு கண்ணாடி போல ஒளியை பிரதிபளிக்க செய்யும் வகையில் அமைஞ்சிருக்கு. சூரிய கதிர்கள் நிலவின் மேற்பரப்பில் பட்டு எதிரொளிப்பது தெரிந்ததுதான். சினிமா திரையை போல பெரிய திரைன்னும் சொல்லலாம். அமாவாசை காலங்களில் பூமியில் இருந்து சர்ச் லைட் மாதிரி பெரிய லைட்ட அடிக்கமுடியுமா ? முடியும். பெரிய பவர் லேசர் புரொஜெக்டர் வெச்சு 4 லட்சம் கிலோ மீட்டருக்கு ரீச் ஆகரமாதிரி ஒளி கற்றைகளை பாய்ச்சினா அது நிலவில் பட்டு எதிரொளிக்கும//
இப்போ இருக்கும் லேசர் பவருக்கு அது சாத்தியமில்லை எனலாம்.
மேலும் நிலவின் பரப்பு கண்ணாடி அளவுக்குலாம் துல்லியமா ஒளியை பிரதிபளிக்காது, சூரியனின் ஆற்றல் அதிகம் என்பதால் தான் பிரதிபளிப்பு கிடைக்குது. நாம அனுப்புற லேசர் எல்லாம் திரும்ப வராது.
நாசா ரொம்ப காலமா நிலவுக்கு டார்ச் அடிச்சிட்டு தான் இருக்கு , ஆனால் அதுக்கு என நிலவில் சிறப்பு வகை ரெப்ளக்டர்களை மூன்று இடங்களில் பதிச்சு இருக்கு, ஆர்ம்ஸ்ட்ராங்க் நிலவுக்கு போனப்போது ரிப்ளக்டரும் கொண்டு போனார். அப்படி ரிப்ளக்டர் மூலம் பவுன்ஸ் ஆகி வரும் லேசரும் ரொம்ப பலவீனமானது தான் , டெலஸ்கோப் வச்சு பார்த்தால் தான் தெரியும்.
நிலவை விட பூமி ரொம்ப பிரகாசமா பிரதிபளிக்கும், நிலவில் இருந்து பார்த்தால் நீல நிலாவாக பூமி பளிச்சுனு மின்னும்!
பூமியில் 71% தண்ணீர் இருப்பதால் நல்லா பிரதிபளிக்குது.
அமெரிக்காவில் ,லேசர் ரேஞ்சிங் டிடெக்ஷன் McDonald Observatory இல் இயங்குது ,அங்கே இருந்து நிலவுக்கு அவ்வப்போது டார்ச் அடிச்சு , தூரம் ,மற்றும் நிலவு பூமி சுழற்சியில் ஏதேனும் மாற்றம் இருக்கானு ஆய்வு செய்றாங்க.
http://science.nasa.gov/science-news/science-at-nasa/2004/21jul_llr/
# வருங்கால தொழில்நுட்பம் என முன்னர் டிஸ்கவரியில் ஒரு நிகழ்ச்சியில் செயற்கை கோள் மூலம் பெரிய கண்ணாடிகளை வானில் நிறுத்தி இரவில் சூரியனின் ஒளியை தேவையான இடத்தில் பாய்ச்சி "இரவில் ஒரு பகல்" உருவாக்கலாம்னு கிராபிக்சில் காட்டினாங்க , அதெல்லாம் கனவு திட்டம் , வருங்காலத்தில் சாத்தியமாகலாம்.
# சர்க்கஸ் லைட் லாம் சின்ன வயசில் பார்த்தது ,இப்போ தான் சர்க்கஸை எல்லாம் இழுத்து மூடியாச்சே அவ்வ்!
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி வவ்வால். கோடு போட்ட விசயத்து ரோடே போட்டுட்டீங்க. கண்ணாடி மாதிரின்னு சொல்லி இருக்க கூடாது தான் ஒரு புரிதலுக்காக அப்படி சொன்னேன். 40 ஆண்டுகால ஆய்வுப் படி வெறுங்கண்ணால் லைட் ரிப்லெக்ஸன பார்க்க முடியாவில்லை ஆயினும் எதிர்காலத்தில ஏதுனா அதிசயம் நடக்கலாம். நிலவுக்கு ஹை ரேஸர் பீம் ஆய்வில தொய்வுன்னா அது ஒளியின் பரப்பு அவ்வளவுக்கு அதிகமாக்கும் வாய்ப்பு இல்லாம போனதும் ஒரு காரணம் இல்லையா. இருப்பினும் நிலவுக்கு டார்ச்சில் பூமியின் ஈர்ப்பில் இருந்து வருசத்தில 2 அரை இன்சுகள் விலகிப் போவதை கண்டுபிடிச்சங்க. அறிவியலை பொருத்த அளவில் விஞ்ஞானிகள் கற்பனையையும் நிஜமாக்க செய்யும் முயற்சில தான் ஒவ்வொன்னொயும் கண்டுபிடிச்சிடறாங்க.
Deleteநிலாவுக்கு டார்ச்சா? ஹி ........ஹி ........ஹி ........ அதுசரி, இந்த கட்டுரைக்கான அடிப்படை என்ன?!!
ReplyDeleteநிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்-ஆல்ட்ரின் ஒரு Laser Reflector- ஐ அங்கே வைத்துவிட்டு வந்துள்ளதாகவும் தற்போது பூமியிலிருந்து லேசரை அனுப்பி அதனை மூலம் எதிரொளிக்கச் செய்து வரும் நேரத்தை வைத்து நிலவுக்கும் பூமிக்குமிடையேயான தூரத்தை கணக்கிடுவதாக சொல்கிறார்கள்.
http://science.nasa.gov/science-news/science-at-nasa/2004/21jul_llr/
மற்றபடி, நிலவில் படும் சூரிய ஒளியில் பிரதிபலிப்பது 7% அல்லது 8% மட்டுமே, கண்ணாடி போல எதிரொளிக்கும் என்பது சரியல்ல.
Deleteஆமாம் கண்ணாடி போலன்னு சொல்லி இருக்க கூடாது... சாதாரண கற்பனையையும் விடாது 40 வருசம் முயற்சி செஞ்சிருக்காங்க. எதிர்காலத்தில் ஏதாவது அதிசயம் நடக்கலாம். வெறுங் கண்ணால் பார்க்கும் சாத்தியக்கூறு குறைவுதான்.
அதும் ஒருவகையில நல்லதாப் போச்சு இல்லன்னா அங்கேயும் விளம்பரம் போட ஆரம்பிச்சுடுவாங்க
சுவாரஸ்யமான தகவல்கள்! வவ்வாலின் பின்னூட்டமும்தான்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete