விதையின ஈரால் வகையை சேர்ந்த "அஸ்ட்ரகோட்" (ostracods) எனும் கடல்வாழ் உயிரிகளில் 70000 வகைபாட்டியலில் உள்ளதாகவும் அதில் 13000 வகைகள் அழிந்து போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த உயிரினங்களில் சில , மின் மினியை போல ஒளியை சிதறுகின்றன. இதற்கெ இவைகளுக்கு சிறப்பு உறுப்புக்கள் உண்டு. இந்த உறுப்புகளில் ஒளியுமிள் வேதிப் பொருட்களை (luminescent chemicals)கொண்டிக்கின்றன. தம்மை பாதுகாத்துக் கொள்ள இவ்வுறுப்புகளின் மூலம் ஒளிச்சிதறலை ஏற்படுத்துகின்றன.
இவற்றில் இன்னும் சில வகை தம் இணைகளை கவர்வதற்காக இவ்வொளியை பயன் படுத்துகின்றன.
இந்த வேதி பொருட்களில் லுசிஃபெரின், லுசிஃபெராஸ் ( luciferin , luciferase) என்பவைகள் முக்கியமாவை. இந்த வேதிப்பொருட்களின் கூட்டு ஒளியை ஏற்படுத்துகிறது. இந்த வேதி மாற்றம் ஆங்கிலத்தில் (bioluminescence) பயோலுமினென்ஸ்.
கொசுறு தகவல் இவைகளில் ஆணினம் இரண்டு "ஆண் குறிகளை (penes) " கொண்டிருக்கின்றன.
கார்டினல் மீன்கள் "ப்ளேங்டான்" Plankton பாசிகளை விரும்பி உண் கின்றன. ஒரே கண்ணாடித் தொட்டியில் மேற்சொன்ன அஸ்ட்ரகோட் களை போட்டு வைத்தால் மீன்கள் அவற்றை விழுங்குகிறது. அந்த நொடியிலே அஸ்டகோட்கள் அவைகளிடம் இருந்து தப்பிக்க ஒளியை உற்பத்தி செய்கின்றன மீன்கள் தவறுதலாக விழுங்கிவிட்டதாக அவற்றை உமிழ்ந்து விடுகின்றன. இவை பார்பதற்கு மீன்கள் ஒளி உமிழ்வதாக தெரிகிறது.
பார்க்க படம் : (Image credit: BBC )
ஒளி உமிழும் மீன்கள் பற்றி அறிந்து கொண்டேன் சகோ நன்றி
ReplyDeleteவியப்பான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமிகவும் சிரமப்பட்டு செய்திகளைத் திரட்டித் தந்துள்ளீர்கள். நல்ல பதிவு. நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_26.html?s
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..