உணவே மருந்து எனச் சொல்கிறோம் நாம் சாப்பிடும் உணவு பொருட்களிலும் நஞ்சு இருக்கிறதே.
கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதை தின்றவன் ? என்று கேட்பார்கள்.
இப்போதெல்லாம் காளான்கள் பெரும்பாளானவர்கள் விரும்பி சாப்பிடும் பண்டம் ஆகிவிட்டது. காளான்கள் உடலுக்கு நல்லது தான்.
காட்டுக்காளான்கள் எனச் சொல்லப்படுகின்ற மரணத்தொப்பி (Death Cap),
அழிக்கும் தேவதைகள் ( Destroying Angels), கொடிய வலைநிழம்பி (Deadly Webcap ) இவை எல்லாம் நச்சுக்காளான்கள்.
மேற்கு ஆப்பிரிக்க, ஜமைக்காவிலே அக்கி (அத்தி அல்ல) எனற பழம் இருக்கிறது. இது நச்சுடையது ஆனால் அதுவே நன்கு பழுத்து (சிவப்பு) வெடித்த பின்னால் உள்ளுக்குள் இருக்கும் மஞ்சள் சதைப்பகுதியை மட்டும் கவனமாக சாப்பிட வேண்டும். நல்ல சுவை உடையதாம்.
மற்ற பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிட்டால், இந்த பழத்தில் இருக்கும் நஞ்சு ஹைப்போகிளைசின் (hypoglycin)பாதிப்பால் வாந்தி பின் ஹோமா நிலைக்குப் போய் பின் இறந்து போய்விடவும் வாய்ப்பு உண்டாம். இன்னொரு
சுவையான ( ? ! )தகவல் அக்கி ஜமைக்காவின் தேசியப் பழம்.
மனிதர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள். ஆமாம் பாம்புகளை சாப்பிடுவார்கள் தெரிந்தது தானே என்கிறீர்களா..?
பலாபழத்தில் முள் இருப்பதற்காக சாப்பிடாமல் விடுகிறோமா.. ஆனால் ஜப்பான் நாட்டில் கொடிய விசமுள்ள மீனை சமைத்து சாப்பிடுகிறார்கள். ஃபூகு ( fugu ) எனும் மீன் கொடிய விசம் உடையது. சயனைடைக் காட்டிலும் 1200 மடங்கு விசத்தன்மை இதன் உடலில் இருக்கு. இந்த விசம் ட்ரொடோடோக்சின் [ tetrodotoxin ]. ஒரு மீனின் விசம் 30 நபர்களை கொன்று விடும். ஃபூகு விலை அதிகமானாலும் சுவைக்காக உயிரை பணயம் வைத்து சாப்பிடுகிறார்கள்...ஜப்பானியர்.
அதெப்படி விச மீனை சாப்பிட முடியும் ? அந்த மீனின் சில பல (eyes, intestines, ovaries and liver) உறுப்புகளைத் தவிர்த்து மற்ற பாகங்கள் விசம் இல்லாதவை. அந்த பாகங்களை பக்குவமாக எடுத்து மெலிதாக வெட்டி பல தடவை தண்ணீரில் கழுவி பின் சமைக்கிறார்கள். இதை எல்லோராலும் சமைத்து விட முடியாது அதற்கென்று 3 வருட படிப்பை முடித்து லைசென்ஸ் வாங்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர். அரசின் அனுமதி பெற்ற நிறுவனமே உணவை தயாரிக்க முடியும். விசமுடைய பாகங்களை எரித்து விடுகிறார்கள். ஃபூகு மீனில் 40 வகைகள் இருக்கிறதாம்..ஜப்பானியர்கள் வருடத்தில் 10000 டண் மீன்களை தின்று தீர்க்கிறார்கள்.
சமைப்பதற்காக வெட்டி பக்குவப் படுத்தும் ஃபூகு ... விருப்பம் இருப்பவர்கள் இந்த காணொலியை பார்க்கலாம்.
tuna, mackerel, bluefish , mahi-mahi இந்த மீன்களையும் ஃபூகு லிஸ்டில் சேர்த்துவிடலாம்.
டியூனா எனும் மீனை கர்பினிகள் மற்றும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிற்க வேண்டுமாம். இந்த மீனில் hypoglycin ஹைபோக்ளைசின் நச்சு இருக்கிறது. இதில் உள்ள மெர்குரி அளவு நரம்பு சம்பந்தமான எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்.