கடல் குதிரை போன்ற ஒரு கடல் உயிரினம் "கடல் பல்லி" இவை சாதாரணமாக நம் வீடுகளில் காணப்படும் பல்லியை போன்றது கடலில் மட்டும் காணப்படும் இவை இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் இது "பைப் ஃபிஷ்" என்றே குறிப்பிடப்படுகிறது.
இந்த உயிரினம் இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக சீனா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தபட விருந்த உலர வைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் சமீபத்தில் பறிமுதல் செய்யப் பட்டது.
மீன்களை பிடிப்பது போல இவைகளை பிடிப்பதில் என்ன பிரச்சனை ?சரி இவைகளை தடை படுத்தப்பட வேண்டிய அவசியம் என்ன ?
கடல் குதிரை மற்றும் கடல் பல்லிகள் இந்திய வனவிலங்கு பாது காப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த கடல்பல்லிகள், கடற்சூழலியலில் முக்கியமானதொரு பங்காற்றுவதால் அவற்றை பாதுகாக்கவேண்டியது அவசியம் என்கிறார் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் கடல்வாழ் உயிரியல் வல்லுநர் டாக்டர் தீபக் சாமுவேல்.
இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீனவர்களால் பிடிக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட இந்த கடல்பல்லிகளின் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்றாக இந்த கடல்பல்லிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்காகவே இவை சட்டவிரோதமாக இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப் படுவதாகவும் தமிழக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தமிழக மீனவர்களிடமிருந்து ஒரு கிலோ உலரவைக்கப்பட்ட கடல்பல்லிகள் சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுவதாகவும், இங்கிருந்து இவை இலங்கைக்கு சென்றபிறகு அதன் மதிப்பு ஒரு கிலோவுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாயாக அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
விரிவான தகவலை இந்த BBC ஒலிப்பதிவில் கேட்கலாம்.
(இயக்குவதற்கு முன் ஒலி அளவை குறைத்துக்கொள்ளவும்...)
Source of News BBC dated 11 July 2013 17:29 ஜிஎம்டி

படங்கள் அருமை. ஆண்மைன்னு சொன்னா நம்மாளு எதையும் விட்டுவைக்க மாட்டான் போலிருக்கே.............:((
ReplyDelete