துவரை,வாழை,ஆரஞ்சு,பப்பாளி இவைகளில் இஞ்சக்சன் ஊட்ட மருந்து முறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்தார். (குட்டை ரக) விதையில்லா ஆரஞ்சு, பப்பாளி இன்றைக்கும் விவசாயிகள் மத்தியில் ஒரு ஆச்சர்யமான விளைச்சல்.
வாழைப்பழம் போல் ஆரஞ்சை தோலுரித்து அப்படியே சுவைக்கலாம்(விதை இல்லை)
திருமதி.லக்ஷ்மிபாய் அம்பேத்கர்,திரு.அம்பேத்கர்,திரு.ஜி.டி.நாயுடு
அவருடைய கோபால் பாக் இல்லத்தில் 18-1/2 அடி உயர சோளச்செடி 26 கிளைகளுடன் 39 கதிர்கள் உருவாக்கி அசத்தினார். 11 அடி உயரம் வளர்ந்த ராட்சச பருத்தி செடி 24 ராத்தல் பருத்தியை கொடுத்தது. ஜெர்மானியர் இதற்கு “நாயுடு காட்டன் “ என்று பெயர் வைத்தனர். இந்த டெக்னாலஜியை ரகசியமாக வைத்திருந்தார் ஆனால் ஒரு கட்டத்தில் அமெரிக்க பல்கலைக் கழக நண்பருக்கு தொழில் ரகசியத்தை சொல்லி விட்டார். நினைத்திருந்தால் பெருந் தொகைக்கு அந்த இரகசியத்தை விற்றிருக்கலாம்.
பின்புலத்தில் 15 அடி உயர தினை மற்றும் 11 அடி உயர பருத்தி செடி
ஒரு துவரை செடி ஆறடி உயரமும் எட்டு அவுன்ஸ் துவரையும் கொடுக்கும் ஆனால் நாயுடு வளர்த்த செடி ஒரு மரமாக வே வளர்ந்தது அது 65 அவுன்ஸ் துவரை கொடுத்தது.
ராட்சச செடிகளை பார்த்து பிரமித்த சர்.சி.வி.ராமன் இது "தாவரவியல் விநோதம் (Botanic marvels) " என்று குறிப்பிட்டார்.
"மினி கார்"
இந்தியாவிலேயே முதன் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை இவரால் ஆரம்பிக்கப்பட்டது(நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ்). பல தொழில் ஸ்தாபனங்கள் இவரை பின்பற்றின. தற்போது வரைக்கும் கோவையின் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு வடநாட்டில் கிராக்கி உண்டு முக்கிய காரணம் அதன் உழைப்பு மற்றும் தரம்.
அரசாங்க அனுமதி அப்போது மறுக்கப்பட்டதால் வெளிநாட்டு கம்பெனிகளுடனான ஒப்பந்தங்களை இவர் நிறைவேற்ற முடியாமல் போனது. அப்போதே நானோ கார் ரகங்கள் (டாட்டா நானோ), அதிக மைல் ஓடக்கூடிய டயர்கள். மெசின் டூல்கள், ரேடியோ இப்படி பலதும் அடங்கும். ஆட்டோமொபைல் சம்பந்தமாக இங்கிலாந்தில் இருந்து இங்கு வந்து இவரிடம் குறிப்பு எடுத்து கொண்டு போனார்கள்.
தற்போதும் சொல்லப்படும் ஒரு கருத்து இந்நாடு ஒரு ஜீனியஸை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.
முனிசிபல் தேர்தலில் இருந்து பாராளுமன்ற தேர்தல் வரை போட்டியிட்டார். காமராஜரை எதிர்த்து போட்டியிட்டவர் தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டபின் நண்பருக்கு அனுப்பிய தந்தி “சக்ஸஸ்புல் டிபீட் இன் எலெக்ஷன்”
எதிர்த்து நிற்பவருக்கே ஓட்டு போடுங்கள் என்றால் இவர் எப்படி ஜெயிப்பது? அப்படிபட்ட வித்தியாசமான மனிதர்.
பல கருவிகளுக்கு இவர் பேடண்ட் உரிமை கோரவில்லை.
1948 லேயே பூமிக்கடியில் எலெக்ரிக் வயர்கள் (கன்சீல்ட்) இணைப்பு கொண்ட கட்டிடம் இன்றும் கண்காட்சியாக உள்ளது.
விருந்தின் முதல் சாப்பாடு இவருக்கே பரிமாரப்பட வேண்டும் ருசி இல்லாத உணவு விருந்தினருக்கு கொடுக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு.
கண்டுபிடிப்புகள் :
நுணுக்கமாக அளவிடும் கருவி
இரும்பு சட்டத்தில் உள்ள நசுக்கல்களையும், வெடிப்புகளையும் கண்டறியும் கருவி (magno flux testing unit)
விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்டுகள்
மோட்டாரின் அதிர்வை சோதிக்கும் இயந்திரம் (auto vibrator testing machine)
காசை போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் (slot singing machine)
ஆரஞ்சு பிழியும் கருவி
மண்ணென்னையில் ஓடும் மின் விசிறி
''1952 ல் 70 ரூபாய்க்கு ரேடியோ''
கேமரா லென்ஸ் டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர்
எடிசன் செய்து பார்க்க முயன்ற ஒரு கருவி “வோட் ரெக்கார்டிங் மெசின்” அப்படி ஒரு கருவியை நாயுடு உருவாக்கிக் காட்டினார். இது தலையிட்டு கெடுக்க முடியாத (tamper-proof) பாதுகாப்பு தன்மை கொண்டது.
ஒரு அங்குலத்தில் இருநூறில் ஒரு பாகம் (1/200) அளவுள்ள மெல்லிய பிளேடு. இதற்கு நார்வே நாட்டு உருக்கு பயன்படுத்தப் பட்டது. இதை கொண்டு ஓர் ஆண்டிற்கு சேவ் செய்து கொள்ளலாம். நார்வே நாட்டு உருக்கை தருவிக்க அரசு அனுமதி தரவில்லை.
கையடக்க எலெக்ட்ரிக் ரேஸர்
நீரிழிவு நோய்க்கு ஒரு மருந்து
இது போல எண்பதிற்கு அதிகமான கண்டுபிடிப்புகள்.
டீசல் எஞ்சின், கார், ரேடியோ தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறுவ ஆசைப்பட்டார். அரசின் அனுமதி மறுக்கப்பட்டதால் அப்படியே கைவிடப்பட்டன.
பல்துறை வித்தகர் ஜீ.டி நாயுடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இவரின் கோவை அருங்காட்சியகத்தில் 1930 ' நாற்பதுகளில் பயன் படுத்த பட்ட எலக்ட்ரிக்,எலெக்ட்ரானிக்,கம்யூட்டர்கள்,போன்கள், கேமராக்கள், ப்ரொஜெக்சன் டி.விக்கள்,கம்யூட்டர்கள், பிரிண்டர்கள், டைப்ரைட்டர்கள், கார்கள்,(all in one) இயந்திரங்கள்...இன்னும் பல்வேறு பொருட்கள் இவரின் கலெக்சனில் உள்ளது நம்மை பிரமிக்க வைக்கிறது. நேரில் பார்க்க முடியாதவர்கள் சிலவற்றை இந்த லிங்கில் பார்த்து ரசிக்கலாம்.
தொடர்புடைய பதிவுகள்: பகுதி 1, பகுதி 2
source of book : உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு by மெர்வின் (1985)
source of some photos: http://site4preview.in/gm/index.php
தமிழ்மணம் இணைப்பதேயில்லை...
ReplyDeleteதமிழ்மணம் script-யை எடுக்க தொடர்பு கொள்ளவும்...
dindiguldhanabalan@yahoo.com or 9944345233
நன்றி
தகவலுக்கு நன்றி என்னாச்சு தெரியலயே..
Deleteஇப்ப தெரியுது.. பிரவுசரில் ஏதேனும் பிரச்சனையோ. மீண்டும் தொந்தரவு வந்தால் தொடர்பு கொள்கிறேன்.
Deletehttp://site4preview.in/gm/index.php
ReplyDeleteநன்றி...
இந்த சைட்டு பல பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. இன்னும் நல்லா டெவலப் செய்திருக்கலாம். வீடியோ பகுதியில் ஒன்றும் இல்லை. தளம் ஆங்கிலத்தில் உள்ளது.
Deleteஜி.டி நாயுடு குறித்து விரிவான அருமையான தகவல்கள்! ஒரு அருமையான மனிதர் விஞ்ஞானியை இந்திய அரசு புறக்கணித்தது காலத்தின் கொடுமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானி வெளிநாடுகளில் இருந்திருப்பாரானால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். நன்றி நண்பரே
Deleteஇங்க ஒன்னேமுக்கால் லட்சம் கோடி வேணுமின்னாலும் திருடலாம். ஆனால் நேர்மையான ஒரு விஞ்ஞானி தனது கண்டு பிடிப்புகளை வெளியிட முடியாது. அப்போ தான் எல்லா சட்ட வியாகியனமும் குடுத்துகிட்டு இருப்பானுங்க. விளங்குமா இந்த நாடு?
ReplyDeleteஅமெரிகர்களாகட்டும், இங்கிலாந்து,ஜெர்மன்.. காரர்களும் இவரின் அருமையை உணர்ந்திருந்தார்கள். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அதற்காக அவர் இந்தியாவை வெறுக்க வில்லை. தமிழ் தமிழரின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருந்தார். நன்றிங்க ஜெயதேவ் !
Deleteஜி.டி. நாயுடு பற்றி தெரியாத பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன்... நன்றி..
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ஸ்கூல் பையன்!
Deleteநல்லதொரு தொடர் பதிவு ...!
ReplyDeleteஒட்டு மொத்த இந்தியாவே இப்ப நுகர்வோராகத்தானே மாறிட்டு இருக்கு . கண்டுபிடிப்புகள் ரெம்ப குறைஞ்சு போச்சு .. அப்டியே யாருனாச்சும் ஏதாவது முயற்சி செஞ்சாலும் முளையிலேயே கில்லி வீசிடுறோம் .
ஜி.டி நாயுடு அவார்ட்ஸ் அப்டின்னு எதுனா தமிக அரசு கொடுத்தா , அது அவரின் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கும் காலம்கடந்த பெருமையாக இருக்கும் .