அண்டவெளியில் பூமியின் முகவரி சூரியகுடும்பம்(solar system), பால்வெளி(milkyway), விர்கோ திரள் (virgo cluster) , பிரபஞ்சம் (the universe) என்று சொல்லிவந்தோம். இனி
இந்த முகவரி விர்கோவில் இருந்து லேனியாக்கி (Laniakea) என்று மாற்றம் பெறுகிறது.
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் பூமி ஒரு மீச்சிறு புள்ளி.
விண்ணியலாளர் R Brent Tully (the University of Hawaii ) தலைமையில் உலக அஸ்ட்ரானமி குழு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக விண்ணியல் அமைவிடங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து வந்தது.
இந்த ஆய்வில் சுமார் 8000 பால்வெளி மண்டலங்கள் (Galaxies) ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.
the Name Laniakea means "immeasurable heaven"
லேனியாகி எனும் மாபெரும் திரள் (super cluster) ஒரு லட்சம் பால்வெளி மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் விஸ்தீரணம் ஒளியாண்டுகளில் சொன்னால் 522 + மில்லியன் ஒளியாண்டுகள் அல்லது நமது சூரிய குடும்பத்தின் விஸ்தீரணத்தில் 260 மில்லியன் மடங்குகள் விரிவானது எனக்கொள்ளலாம்.
நம் சூரிய குடும்பத்தில் ஜூபிடர் கோளின் குறுக்கு விட்டத்தில் பத்தில் ஒரு பங்கு தான் பூமியின் விட்டம். இதன் நீளம் சுமார் 12700 கி.மீ கள்.
கடந்த நூற்றாண்டுகாலம் விண்ணியலாளர்கள் இந்த பால்வெளி மண்டலம் விர்கோ எனும் மாபெரும் திரளில் உள்ளடங்கியது என்றும் றே இந்த திரளானது சுமார் 2000 பால்வெளி (கேலக்ஸி) மண்டலங்களை உள்ளடக்கியதாகவும் இதன் விஸ்தீரணம் 100 மில்லியன் ஒளியாண்டுகள் கொண்டது எனவும், நமது சூரியக்குடும்பத்தின் நீளத்தில் 50 மில்லியன் மடங்குகள் பெரிது எனவும் கருதிவந்தனர்.
சூப்பர் கிளஸ்டர்களின் விஸ்தீரணம் செக்ஸ்டில்லியன் கிலோமீட்டர்கள்.
ஹவாய் குழுவாளர்கள் நமது பால்வெளி மண்டலத்திற்கு வெளியே உள்ள ஆயிரம் பால்வெளி மண்டலங்களுக்கு இடையே யான ஈர்ப்பை, நகர்தலை ஆய்வு செய்தனர். அதன்படி சூப்பர் கிளஸ்டர் விர்க்கொ இல்லை என்ற முடிவிற்கு வந்தனர். இந்த சூப்பர் கிளஸ்டர்களின் விஸ்தீரணத்தை கணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
சூப்பர் கிளஸ்டரின் ஈர்ப்பு மையத்தை நோக்கியே மற்ற மண்டலங்களின் இயக்கம் இருக்கும். ஒரு கேலக்ஸியானது இந்த மைய ஈர்ப்பை ஒரு சுற்று சுற்றவே பல மில்லியன் ஆண்டுகாலம் ஆகும். ஒரு குறிப்பிட்ட கேலக்ஸியானது எந்த சூப்பர் கிளஸ்டரை மையத்தின் ஈர்ப்பு எல்லைக்குட்பட்டு இயங்கி செல்கிறது என்பதை நுண் கவனிப்பினால் கவனிக்க வேண்டி இருக்கும். ஒவ்வோர் கேலக்ஸியின் இயக்க வேகமும் மாறு படும்.
ஹப்பில் ஆப்டிகல் டெலஸ்கோப் உட்பட்ட உலகின் பல ஆப்டிகல் டெலஸ்கோப்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. சுமார் 8000 கேலக்ஸிகளின் ஒளி அளவீடுகள் ஆய்வுக்குட்பட்டன. ஒளி அளவீடுகள் அதன் இயக்க திசை மட்டும் அல்ல அவற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டது. இதை ப்ளூஷிப்ட், ரெட்ஷிப்ட் என குறிக்கிறார்கள். கேலக்ஸியானது உள் இயக்கத்தில் செல்கிறதா வெளி இயக்கத்தில் செல்கிறதா என்பதை இவை முடிவு செய்யும். இவற்றைக் கொண்டு பெரிய அட்டவணை தயார் செய்தார்கள்.
நமது சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் கோளும் தனக்கென்று ஈர்ப்பை கொண்டிருக்கும் அந்த ஈர்ப்பு கோள்வட்டத்திற்குள் (நீள்வட்ட)அந்த கோளின் ஆதிக்கம் இருக்கும். உ-.ம் பூமிக்கென்று அதன் துணைக்கோள் நிலா புவி ஈர்ப்பு எல்லைக்குட்பட்டது ஆனால் பூமி சூரியனின் ஈர்ப்பு மண்டலத்திற்குள் இருக்கிறது. அதே போல சூரியனின் ஈர்ப்பு இயக்கம் கேலக்ஸியின் கட்டுப் பாட்டிற்குள் வருகிறது.
சுழன்று செல்லும் நீரோடையில் வெவ்வேறு திசையில் தெறிக்கும் நீர் திவளைகள் எப்படி எப்படி திரும்ப அந்த சுழலில் சேர்கிறது இதுபோல் தான் கேலக்ஸிகளின் இயக்கமும் இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.
சுற்றிக்கொண்டு செல்லும் நமது சூரியக் குடும்பத்தின் வேகம் மணிக்கு சுமார் 7லட்சம் கி.மீகள்
*****
THE MILKY WAY is a barred spiral galaxy surrounded by spiral arms, where billions of stars and planets are united. They all orbit a central black hole called Sagittarius A*, with a mass four million times the Sun’s.
******
The centre of the galaxy is split by a bar. It isup to 16,000 light years long.
********
The Solar System rotates at a speed of around 700,000 KM/H*****
Compared to the Milky Way, the Solar System is a tiny dot. Our galaxy has a diameter of 100,000 light years, or 50,000 times the Solar System’s, and it is 1,000 light years thick. Distributed between 7 spiral ams, its 200 billion stars orbit a central black hole. Around the stars, even more planets are orbiting, and maybe 10 billion are inhabitable.
*****
In the Laniakea supercluster, all galaxies, including the Milky Way, are affected by the same gravity source. The galaxies move towards a com-mon gravity region, which astronomers have named the Great Attractor.
*****
The biggest galaxy we've spotted, IC 1101 has a diameter of six million light years – over 60 times the diameter of the Milky Way. Containing around 100 trillion stars, it is located in the Abell 2029 galaxy cluster.*****
as Laniakea contains 100,000 galaxies and stretches 522+ million light years, or 260 million times the width of our Solar System.
The light takes 170,000 years
to travel from the Sun’s core to the surface,
but only 8 minutes to travel from the Sun’s
surface to Earth.
*****
the Milky Way moves through space at a speed of 2.3 MILLION KM/H******
THE OBSERVABLE UNIVERSE contains
millions of superclusters such as Laniakea.
*****