முகநூலில் நான் ரசித்த நகைசுவைகள்
டாக்டர் கணவன் உடம்பை பரிசோதித்துவிட்டு " இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் அதற்குள் உங்களுக்கு பிடித்ததை எல்லாம் செய்துவிடுங்கள்"
மாலை 5 PM : கண்ணீர் மல்க மனைவியிடம் செய்தியை பகிர்ந்தான் அவன் . துடித்தாள் அவள் ...
எனக்கு உன் கையால ரவா தோசையும் வெங்காய சட்னியும் குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கி ......
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு உன் கையால மீன் குழம்பு வச்சு குடும்மா இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும் பால்ல உன் கையால பாதாம் அரைச்சு கொஞ்சமா சர்க்கரை போட்டு குடு - இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு ..
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான் ...
அவள் : பேசாம படுங்க - காலைல எழுந்த உடன் எனக்கு ஆயிரம் வேலை கெடக்கு , சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பணும் ,அய்யர் ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்டுல booking பண்ணணும் , உங்களுக்கு எழுந்திருக்கற வேலை கூட இல்ல ?
thanks to Ramesh Guru
========================================================================
என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?
சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?
என்ன முனியம்மா சொல்றே..?
வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..!
************
உங்க மனைவி பார்க்குற புடவைகள் மேலே 1,2,3 -னு
நம்பர் ஸ்டிக்கர் ஏன் ஒட்ட சொல்றீங்க?
-
நூறு புடவை வரைக்கும் பார்த்துட்டு, நான் பார்த்த
39 -வது புடவைக்கு பில் போடுங்கன்னு சொல்லுவா…அதான்!
************
இந்த பேஷண்ட் அபாய கட்டத்தை தாண்டிட்டார்னு
எதை வச்சு சொல்றீங்க சிஸ்டர்…?
-
இவருக்கு ஆபரேஷன் தேவையில்லைன்னு டாக்டர்
சொல்லிட்டுப் போனது உங்க காதுல விழலையா…?
நீதிபதி :
இனிமே கோர்ட் பக்கமே வரக்கூடாதுன்னு போன தடவை
சொல்லியிருந்தேனே..?
கைதி :
குத்தம் செஞ்சுட்டு தலைமறைவா இருந்த என்னை
போலீஸ்காரங்கதான் பிடிச்சுட்டு வந்துட்டாங்க எசமான்..!
டாக்டர், உங்க பீஸை என்னால ஜீரணிக்க முடியலை..!
-
கவலைப்படாதீங்க, அதை ஜீரணிக்க தனியா ஒரு மாத்திரை
தர்றேன் சாப்பிடுங்க…!
************
என்னய்யா இது..சாப்பாட்டு ஐட்டத்தோட பேரையெல்லாம் எழுதி அந்த
ஆள் மனு குடுக்கறான்..?
தலைவரே…அது மனு இல்லை..’மெனு’..!
************
தலைவர் எப்பவும் சரக்கு ஞாபகத்துல இருக்கார்னு
எப்படி சொல்றே?
பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து
விட்டுட்டு அது பொங்கி வழியறதைப் பார்த்து
‘சியர்ஸ்’னு கத்திட்டாரே..!
மாணவன்: சார் வயிறு வலிக்குது சார்…
-
ஆசிரியர்: வயித்துல ஒண்ணுமில்லைன்னா, அப்படித்தான்
வலிக்கும்…
-
மாணவன்: அப்படின்னா, நேத்து நீங்க தலை வலிக்குதுன்னு
சொன்னீங்களே!
************
பால்’ பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதுடான்னா…
கால் பக்கத்துக்கு எழுதியிருக்கியே…?
-
இது சுண்டக் காய்ச்சின பால் சார்..!
************
ஆசிரியர்: மாணவர்களே, நீங்கள் படித்து முன்னேறி இந்தியாவுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்…
மாணவர்: ஏன் சார்? இந்தியான்ற பேர் நல்லா இல்லையா?
என் மனைவிக்கு ரொம்ப இளகிய மனசு…
-
அப்படியா?-
தலைவரே…உங்க மேலே ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு மக்கள்
பேசிக்கிறாங்க…!
'கறை நல்லது’னு ஏன் இன்னும் அவங்களுக்குப் புரியலை…!?
thanks to Venkatesan Subramanian
" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?
"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
************
ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது.
ஆனால்,அதற்கு முன் அவர்கள் வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.
ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.
பாகிஸ்தானி தன் முதுகில் இருதலையணை கட்டச் சொன்னான்; பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.
மூன்றாவது இந்தியன்.,
ஷேக் சொன்னார் ”எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்"
இந்தியன் கேட்டான். ”எனக்கு 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”
ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்.
அடுத்தது”…
”இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில் கட்டுங்கள்!”
இது எப்புடி இருக்கு... ??
thanks to Ramesh Guru
========================================================================
ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தேன்.. செவிலியர் (நர்ஸ்) அனைவரும் ஆப்பிள் டிசைன் போட்ட புடவை கட்டியிருந்தார்கள்.. எனக்கு தெரிந்த செவிலியர் ஒருவரைக் கேட்டேன்..
" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?
"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
____________________________________________
an Apple A Day Keeps Doctor Away...!
thanks to AR Raja
thanks to AR Raja
========================================================================
இம்சை அரசனும், Facebook-ம்..!!!
------------------------------------------
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "
" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "
" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன்
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "
" என்னாது போரா..? நாம் தான் அவன்
போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும்
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா
போருக்கு வருகிறான்.. "
" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு
ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
அனுப்பினீர்களாமே... "
" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு
எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய்
அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..
thanks to Kamal Kamalkvl
above picture : tks to Suresh Krishanan
அருமை நண்பரே!
ReplyDeleteகலக்கல் சிரிப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல நகைச்சுவை!
ReplyDeleteபாஸ் ...! எல்லாமே செம்மையா இருக்கு ....! ஆரஞ்சு ஆர்ட் அட்டகாசம் ...!
ReplyDeleteநானும் ரசித்தேன்
ReplyDeleteதொகுத்து கொடுத்தவைகள் :) ....பாவங்க அந்த கணவன்....
ReplyDeleteசெம காமடி போங்க..நன்றாக இருக்கிறது...
ReplyDeleteOrange..Super imagination!!
ReplyDeleteகொஞ்சம் அல்ல நிறையவே சிரிச்சோம் பாஸ் !
ReplyDeleteகொஞ்சம் காமெடி, கொஞ்சம் கலாட்டா
ReplyDeleteசிரிப்பு வருது...சிரிப்பு வருது...சிரிக்க சிரிக்க...சிரிப்பு வருது.
ReplyDeleteதலைப்பில் பிழை உள்ளது. நகைசுவைகள் ‘நகைச்சுவைகள்’ என திருத்த வேண்டுகிறேன்.
ReplyDeleteஇப்ப பதிவின் தலைப்பில் "இச்" கொடுக்க ! மன்னிக்க "ச்" சேர்க்க முடியாது உரல் (URL) பிரச்சனை ஏற்படும்னு நினைக்கிறேன். நன்றி நண்பரே
Deleteரசித்து சிரித்து பின்னூட்டம் இட்ட நண்பர்கள்
ReplyDeleteவினோத் August 27, 2013 at 2:13 PM
s suresh August 27, 2013 at 2:23 PM
உஷா அன்பரசு August 27, 2013 at 4:01 PM
ஜீவன்சுப்பு August 27, 2013 at 6:12 PM
குட்டன் August 27, 2013 at 7:11 PM
ezhil August 27, 2013 at 7:50 PM
கோவை நேரம் August 27, 2013 at 8:28 PM
Jayadev Das August 27, 2013 at 11:42 PM
Bagawanjee KA August 28, 2013 at 9:13 AM
பாலா August 28, 2013 at 10:46 AM
உலக சினிமா ரசிகன் August 28, 2013 at 11:00 AM
உங்கள் அனைவருக்கும் நன்றி. உண்மையில் இந்த பாராட்டுகள் நகைச்சுவையை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு போய் சேர்கிறது.
ஒவ்வொன்றும் அருமை. என் பெண்ணிற்கு ஆரஞ்ச் பழ பொம்மை செய்து கொடுக்கணும்
ReplyDeleteவேடிக்கை படைப்பு (creative for fun) நன்றி நண்பரே!
Deletesuper and thanks
ReplyDelete