நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..)
ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( ...நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)
தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.
இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.
மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.
குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம்
(....அதான் எங்களுக்கு தெரியுமெ ....புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )
அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும். (...யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்...)
மூன்றுவார கருவிலிருந்தே இதயம் இயங்க ஆரம்பித்து விடும். உங்களது இதயம் ஒரு ஆண்டில் 30 மில்லியன் தடவைகள் துடிக்கிறது.
புருவமுடி 10 வாரங்களில் விழுந்து விடுகிறது. உங்கள் தலையில் உள்ள ஒரு முடி ஐந்து ஆண்டுகள் விழாமல் இருக்கும் ( ...ஆண்களில் சிலர் தலையை தடவி ...கதை உடாதபா !!)
உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.
மனிதன் ஏதும் சாப்பிடாமல் ஒருமாதம் வாழலாம் ஆனால் ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும். ( ...உண்ணாவிரதம் இருப்பவர்கள் கவனிக்க..!)
நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.
கொஞ்சம் இருங்கள் ... ஒரே ஒரு தகவல்.
அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.
\\இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.\\ Heart is the organ that develops first after the insemination.
ReplyDelete