குதிரையின் லாடம் ஆங்கிலத்தில் Horse shoe ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னம் எனச் சொல்லப்படுகிறது எப்போதிருந்து ? எப்படி ?
சில மூட பழக்க வழக்கத்தின் வடிவங்களில் இதுவும் ஒன்று. செயின்ட். டண்ஸ்டன் ஒரு கொல்லனாக இருந்த சமயத்தில் சாத்தான் ஒன்று அவரிடம் அதன் விலங்கு காலுக்கு ஏற்ற காலனி செய்ய சொல்லியது. வலியின்றி இதை செய்து தருவதாகவும் ஆனால் எந்த கதவின் மேல் லாடம் பொருத்தப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டினுள் நுழைய கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டாராம் இது மத்திய கால கட்டத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது.
அதனால் சாத்தான் நுழையாமல் இருக்க ஒரு தடுப்பு கவசமாக அக்காலங்களில் கதவு சட்டங்களின் மேல் லாடம் அடித்து வைத்திருப்பார்கள். பயம் காரணமாகவும் மூடப்பழக்கம் ஏற்படும்.
பழங்காலத்து வீடுகளை நீங்கள் பார்க்கும் போது இது (லாடம்) உள்ளாதாவென்று பாருங்கள்.
உப்பு கொட்டுவது கெட்ட சகுணம் என்று சொல்கிறார்கள். இந்த சகுனம் உப்பு கண்டு பிடிக்கப் பட்டதிலிருந்தே இருக்கலாம். உண்மையில் உப்பு ஒரு அரிதான விலைமதிக்கப்பட்ட பொருள்களில் ஒன்று. உப்பில்லா பண்டம் குப்பையிலே பழமொழியும் இருக்கு. உப்ப கால்ல மிதிப்பது தலையில போடுவது கூடாது. தீ மிதி குண்டங்களில் இறுதியில் உப்பு போடுவதை, தேர் மேல உப்பு பழம் வீசறத பார்த்திருப்பீங்க. புது வீட்டிற்கு முதலில் குடி போரவங்க வைத்து வணங்குவதில் முக்கியமானது உப்பு,மஞ்சள்,அரிசி[பால் காய்சுதல்]. கல்யாண சடங்காக உப்பு மஞ்சள் வாங்குவது. உப்ப பொருத்தவரை எல்ல மதங்களிலும் அதுக்கு தனிமரியாதை இருக்கு.
டாவின்சியின் கடைசி விருந்து (Last supper) என்ற புகழ் பெற்ற ஓவியம் அதில் ஜுடாஸ் இருக்கர பக்கமா உப்பு கொட்டிருப்பது போல சிம்பாலிக்க வரைந்துள்ளார். இதில் உப்பு கொட்டிருக்கிர திசையை கவனிக்கவும். அதில நல்லவங்க வலது புறமும் கெட்டவங்க இடது புறமும் இருப்பது போல வரைந்துள்ளார்.
ஏணியின் கீழே நுழைந்து செல்வது கூடாது அப்படின்னு ஒரு மூடநம்பிக்கை கிருத்துவர்களிடையே இருக்கு. ஒரு சுவற்றின் மேல சாத்தி வைக்கப்பட்ட ஏணிய கவனிச்சீங்கனா சுவரு ஏணி கீழ இருக்கர தரை மூன்றும் சேர்ந்தா ஒரு முக்கோணம் கிடைக்கும். முக்கோண பகுதியின் உள்ளே செல்லும் பாதை "விதியின் வழி" சாத்தானின் பாதை அப்படின்னு நம்பப்படுது. அந்த காலத்தில் உயிரை எடுக்கும் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை சாத்தி வைக்கப்பட்ட ஏணியின் கீழாக போகச் சொன்னாங்க.
எகிப்தியர்கள் முக்கோண பிரமிட் கட்டியதற்கு அதனுள்ள சக்தி வைப்ரேசனை அடைத்து வைக்க முடியும்ங்கர முக்கிய காரணம் இருந்திருக்கலாம்.
கடல் பகுதியில் பெர்முடா ட்ரையாங்கில் ஒரு மோசமான உதாரணம் இந்த ஏரியா உள்ள போன எதுவுமே விமானமாகட்டும், கப்பலாகட்டும் எதுவும் திரும்ப வரல மாயமா போயிடுச்சு. இந்த பகுதியில் இருந்த ஆதீத கதிர் வீச்சு அவற்றை மாயமாக்கிடுச்சு அப்படின்னு சொல்லராங்க ஆனா நிரூபிக்கப்படல.
[இதை பற்றி தனியாக பிறகு எழுதலாம் என்றிருக்கிறேன்.]
நம்பர் பதிமூன்று மோசமான எண்ணா கருதப்படுது. அதுவும் வெள்ளிக்கிழமை 13 மிக மோசமான தினமாம். வெள்ளி கிழமையில் நடந்த கடைசி விருந்தில் கலந்துகிட்டவங்க 13 பேர். நிறைய ஹோட்டல்களில் 13 நம்பர் அறை இருக்காது. வீட்டிற்கு யாரும் இந்த நம்பரை வைப்பதில்லை அப்படி இருந்தா அது பேய் வீடு. ஆனா இந்த 13 வைத்தே பல படங்களை எடுத்து பல கோடி சம்பாதிச்சவங்களும் இருக்காங்க. அந்த படத்தோட பூஜை 13 ஆம் தேதியா இருக்காதுன்னு நினைக்கிறேன்.
இறந்தவரின் சடலத்தின் முன் பொரி வீசி செல்வது. ஆவிகளுக்கு பிரியமானாதாம். இருட்டிய பிறகு தைப்பது கூடாது எப்ப மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன். வெள்ளி அன்று நகம், முடி வெட்டக்கூடாது. குழந்தைகளை தாண்டிச் செல்லகூடாது. தூங்குபவரை தாண்டிச் செல்லக்கூடாது.
இந்த மாதிரி நம்முன்னோர்கள் சில சடங்கு சம்பிரதாயங்கள நடைமுறைப்படுத்திருப்பாங்க. சிலவிசயங்கள அவை மூட பழக்கமா இருந்தாலும் சில பொருள்களுக்கு நம் முன்னோர் கொடுத்திருக்கும் மரியாதையை நம கொடுக்கரதுல எந்த தப்பும் இல்லைங்கரது என்னுடைய கருத்து.
பாலத்தின் மேல ரயில் போகும் போது அதன் கீழே கடந்து போகக்கூடாது. போகும் போது பூனை குறுக்கால கடந்து போனா, ஒத்தை பார்பனரை பார்பது கெட்டது. காரியம் ஊத்திக்கும்.கூட்டமா பார்ப்பது நல்லது. வெளியில் போகயில விதவையை பார்ப்பது கூடாது. கல் தடுக்கினா தண்ணி குடிச்சிட்டு போகனும். கழுதையை பார்த்தால் நல்லது.செவ்வாய், வெள்ளி காசு கொடுத்தா தங்காது. இந்த மாதிரியான மூட பழக்க வழக்கங்கல நம்பிக்கை வைக்கிறது சுத்த பேத்தல் வேஸ்ட்ங்கரது என்னோட கருத்து.
மதசம்பந்தமான மூட பழக்க வழக்கம் முதன்மையான இடத்தில் உள்ளது. இன்னும் ஏகப்பட மூடப்பழக்கவழக்கம் இருக்கு ஒரு டிக்சனரியே போடலாம். டெக்னாலஜி வர வர இதோட பரிமாணம் அதிகமாகுது வெப்பசைட் போட்டு பரப்பரதும் உண்டு. அணி அணியாய் உயிரை மாய்ச்சுகிட்டவங்க இருக்காங்க.
மூட பழக்க வழக்கம் ஊருக்கு ஊரு. நாட்டிற்கு நாடு வேறுபடுது.
கால ஓட்டத்தின் காரணம சில மூட பழக்க வழக்கம் காணாம போச்சு. அதே சமயம் புதுசு புதுசா கிளம்பரதும் உண்டு. அரசமரத்தடி விநாயகர் பால் குடிக்கிறார் இது மாதிரி. செய்யரத எல்லாம் செஞ்சிட்டு எதை தின்னா பித்தம் தெளியும்கர கதைதான்.
ஒருத்தரின் தனிப்பட்ட நம்பிக்கை வேற மூடநம்பிக்கைங்கரது வேறு. தனிப்பட்ட நபரின் நம்பிக்கை ஏன் என்னன்னு தெரியாமா எல்லோரும் பாலோ செய்யும் போதுதான் மூடநம்பிக்கையா மாறுது.
சில பல மூட பழக்க வழக்கங்கள காரண காரியம் தெரியாம நாம கடைபிடிப்பது தேவையில்லாதது.
படிச்சவங்க பலரும் இதுமாதிரியான மூட பழக்கவழக்கங்கள விடாம இருக்கிறாங்க. பல பெரியார் வந்தாலும் தீராத வியாதி இது.
இவ்வளவு இருக்கா இன்னும் இருக்குன்னு வேற சொல்றீக ஆத்தீ....அதுவும் உலகம் முழுக்க இருக்கு போல
ReplyDeleteஎத்துனை பெரியார் வந்தாலும்..........
நன்றி மனசாட்சி !!
Deleteஉலகிலேயே திருட மாட்டார்கள் என்று கடைகளில் open area களில் வைத்திருக்கும் ஒரே பொருள் உப்புதான் என்று நினைக்கிறேன் ..!
ReplyDeleteஅந்த காலத்தில் காஸ்ட்லி சரக்கு என்று திருடியிருப்பார்கள்.
Deleteபாலத்தின் மேல ரயில் போகும் போது கீழ போகாம இருக்கிறது புத்திசாலித்தனம்தான். எங்கட இஞ்சினியர்களை பற்றி தெரியும்தானே....ஹி ஹி ஹி
ReplyDeleteநன்றி கோபிநாத், ரயிலில் போரவங்க எதையாவது தூக்கி போட்டுருவானுங்க அதுக்காக கூட இருக்கலாம்.
Delete