The Bermuda Triangle - Facts and Myths
அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடா இவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [" சாத்தானின் முக்கோணம்" ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி.
இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின.
எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு வழியாக திரும்பி விட்டதாக மாலுமி கிறிஷ்டோபர் கொலம்பஸ் தம் அனுபவத்தில் தெரிவித்துள்ளார். மேலும் "நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்" உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என இப்பகுதியை வர்ணித்துள்ளார்.
அனேக பத்திரிக்கையாளர்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள் பெர்முடா முக்கோணம் 500 ஆண்டுகளாக இதன் மர்மம் பற்றி கதை கதையாக எழுதியுள்ளார்கள். புத்தகங்கள் எழுதப்படுட்டுள்ளன. 1950 முதல் 1975 குள்ளாக மட்டும் சிறிதும் பெரிதுமாய் 428 கப்பல்கள் மாயமாய் மறைந்துள்ளன.
பல்வேறுவிதமான அனுமானங்களும் ஆராய்சிகளும் விடை தெரியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவற்றில் சில ;
கடலினுள் மூழ்கிப்போன அட்லாண்டிஸ்
ஆர்கியாலஜிஸ்ட் (Edgar Cayce )எட்கர் கெயிஸ் [1968] கடலில் மூழ்கி அழிந்துபோன அட்லாண்டிஸ் நிலப்பரப்பின் மலை முகடு பெரிய சுவர் போல பைமினிக்கு அருகில் அதாவது பெர்முடா முக்கோணப் பகுதிக்குள் இருப்பதாக கண்டுபிடித்தார். பாகாமாஸில் மேலும் பல தடயங்கள் அழிந்து போன அட்லாண்டிஸ் நகரத்தை பற்றி கூறுகிறது. அட்லாண்டிஸ் நகரத்தில் இருந்தவர்கள் மேலான அறிவு மிக்கவர்கள் அவர்களிடம் சக்தி மிக்க கிரிஸ்டல் இருந்ததாகவும், இன்னும் இவை தான் சக்தி அலைகளை பரப்பிக்கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாகவே ஏரியா 51 எனும் இபபகுதிக்குள் நுழையும் எவையும் (விமானம், கப்பல்கள்) எவ்வித சுவடும் இன்றி மறைந்து விடுவதாக நம்பப்பட்டது.
இப்பகுதி ஏலியன்ஸ் வந்து போகும் தள மாக செயல்படுவதாகவும் இங்கு எப்போதும் கண்ணுக்கு தெரியாத அதிக டிராபிக் இருப்பதாகவும் இப்பகுதியில் கடந்த நூற்றாண்டில் மட்டும் 50 கப்பல்களும் 20 விமானங்களும் காணாமல் போன தாகவும் 1000 பேர் கடந்த 500 ஆண்டுகளில் தொலைந்து போனதாகவும் U.S. நேவி மற்றும் கடலொர பாதுகாப்பாளர்கள் கூறுகிறார்கள். இந்த பகுதியில் ஒரு நீல நிற பெருஞ் சுழற்குழிகள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் ராப்மெக்கெரிகர், புரூஸ்கெனான் இதையே எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் (electronic Fog) என சொல்கின்றனர்.
1945ல ஃப்லைட் 19 எனும் போர்விமானம் வழக்கமான பயிற்சியில் இருக்கும் போது இப்பகுதியில் காணாமல் போய்விட்டது அதில் 19 பேர்கள் இருந்ததாகவும் இதை தேடி சென்ற 14 பேர் அடங்கிய குழு 5 டார்பிடோக்களும் அதே பாணியில் மறைந்து விட்டதாகவும் ஒரு ரிக்கார்டு இருக்கிறது. மேலும் இந்த விமானங்கள் செவ்வாய் கிரகத்திற்கு வேற்று கிரக வாசிகளால் கடத்தப்பட்டிருக்கும் என்ற கற்பனையும் உலவுகிறது.
இப்பெரிய பரப்பில் நீர்மேல் பகுதிகளிலும் வானப்பகுதிகளிலும் மீத்தேன் வாயுக்கள் அடர்த்தி அதிகமா இருப்பதால் நீர் பரப்பை மிக லேசாக்கி இதனுள் செல்லும் கப்பல்களை மூழ்கடித்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது இதற்கான ஆதாரமும் இன்றி இக்கூற்றும் மறுக்கப்படுகிறது.
இப்பகுதியில் திசைமானிகள் ஒழுங்காண திசை காட்டுவதில்லை. சில இடங்களில் கர கரவென சுழழுவதாக கூறுகிறார்கள். பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து பார்க்கப்ட்டதில், காந்த புல மாறுதல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பூமியில் இரண்டு இடங்களில் மட்டுமே காந்த புல மாற்றம் உள்ளது ஒன்று சரியான பூமியின் வடக்கு பகுதி மற்றொன்று காந்தபுல வடக்கு நேர் கோட்டுப்பகுதி. இந்த இடங்களில் மட்டுமே திசைகாட்டி [காம்பஸ்] தவறுகிறது. சக்திவாய்ந்த எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடலினுள் மெக்சிகோவில் தொடங்கும் கல்ப்நீரோட்டம் புளோரிடா கணவாயினூடாக வட அட்லாண்டிக் வரை செல்கிறது. இதன் அகலம் 40 முதல் 50 மைல் தொலைவு பரந்துபட்டது. மேலும் இதன் வேகம் மிக அதிகம். தட்ப வெப்பநிலை மாற்றம் நிகழ்த்துவது இந்த வெப்ப நீரோட்டம்.
பெர்முடா முக்கோணப்பகுதியில் 28000 அடி ஆழம் கொண்ட பெரிய நீர் சுழல், 80 அடி உயரே எழும்பும் பிரம்மாண்ட அலைகள் இப்பகுதியினுள் நடப்பவகைகளை மறைக்கின்றன. சாட்டிலைட் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்துகிறது.
இப்பகுதியில் நிலையற்ற காலநிலைமாற்றம் நிலவுகிறது. கரீபியன் அட்லாண்டிக் கூம்பு புயல் எப்போது வேண்டுமானலும் சுற்றி சுழன்று வரும்.
மனித தவறுகள் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
எது எப்படியோ உலகத்தின் விடை தெரியாத மர்ம பகுதி இது. காலம் தான் பதிலளிக்க வேண்டும்.
இப்பகுதியில் மாயமானவைகளின் லிஸ்ட்
{பெரிய பட்டியலில் இருந்து சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகிறேன் அடைப்புகுறிக்குள் காணாமற்போன ஆண்டு }
282 டன் எடைகொண்ட மேரிசெலஸ்டி எனும் கப்பல் [1872]
USS சைக்ளோப்ஸ் 309 பயணிகளுடன் மாயமானது [ 1918 மார்ச் 4]
ராய் ஃப்கு மரு ஜப்பானியக்கப்பல் [1921]
டக்ளஸ் PC 3 மியாமி நோக்கி சென்றது இதில் 32 பேர் இருந்தனர். [1948 டிசம்பர் 28 ]
அமெரிக்க பிரிடிஸ் ஏற்வேஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம்[1948], மற்றும் ஜமைக்காவிலிருந்து கிங்ஸ்டன் நோக்கி சென்ற விமானம் [1949]
SS மரைன் சல்பர் குயின் எண்ணெய் கப்பல் புளோரிடா வழியாக சென்றது இதில் 39 பேர் இருந்தனர் [1963 பிப்ரவரி 4]
அங்க என்னதான் இருக்குன்னு இது வரை தெரியலையே தலைவா.., என்ன இருக்கும் ..?
ReplyDeleteஆமாம், அறிவியல் இவ்வளவு முன்னேறி இருந்தாலும் இது போன்ற விடை தெரியா மர்மங்கள் ஏராளம்.
Deleteநாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்" உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என இப்பகுதியை வர்ணித்துள்ளார்.
ReplyDeleteமிகவும் மர்ம்மாய் பயமுறுத்தும் பகுதி!
தங்களின் கருத்துக்கு நன்றி
DeletePERMUDA....
ReplyDeletepera kettale summa athiruthille!!!
கருத்திற்கு நன்றி கார்த்தி
Deleteஅருமையான தகவல்கள். நன்றி திரு.குமரன்
ReplyDeleteகாம்ப்ஸ் தவறினாலும் நாம் பிழைத்து கொள்ளலாம் அல்லவா! அங்கு வேறு ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது. நானும் இதை பற்றி நிறைய தகவல்களை சேகரித்து வைத்துள்ளேன். ஒரு புதிய கூற்று கிடைத்தவுடன் மற்ற கூற்றுகள் பொய்யாக மாறுகிறது. காந்த புல மாற்றம் நிகழும் ஒரு இடம் இதுவென்று கூறுகிறீர்கள். அப்பொழுது மற்றொன்று? அங்கு கடல் பரப்பா இல்லை நில பரப்பா? தங்களுக்கு தெரிந்த தகவலை கூறுங்கள்.
ReplyDeleteபெர்முடா ரகசியம் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ளது இது பெர்முடா ப்ளோரிடா, போர்டேரிகோ பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு முக்கோண வடிவ கடல் பகுதியாகும்
ReplyDelete