அந்தமான் நண்டுகள் !
பிரேட்ஸ் ஆப் கரீபியன் ஆங்கில திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் அதில் ஒரு காட்சியில் பெரிய கப்பலை நண்டுகள் கடலுக்குள் இழுத்துச் சென்று சேர்க்கும். இது கொஞ்சம் ஓவர் கற்பனையாக இருந்தாலும் ஒரு உண்மை உள்ளது. அந்தமான் தீவுகளில் ஒரு வகை நண்டு் இருபது கிலோ எடையை சுமக்கிறது. 30 கிலோ எடையை இழுக்கிறது.
(வாரே..வா...இருங்க ஒரு போன் "ஆன் லைனில் கிடைக்குமா சூப் வைக்கனும் கேட்டுச் சொல்லுங்க")
ஹிப்னாடிசம் :
தொலைநோக்கியை கண்டுபிடித்து வான வெளியின் இரகசியங்களை உலகறியச் செய்தவர் கலிலியோ தனது இறுதி காலத்தில் (1637) பார்வையற்றவரானார் தன் நண்பருக்கு அனுப்பிய கடிதத்தில் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்.
"எனது பார்வை இனி திரும்பாது.அண்டத்தையும், வானத்தையும் அதிலுள்ள அழகை மக்களுக்கு வெளிப்படுத்தினேன். நான் பார்வை இழந்த படியால் சுருங்கி அடக்க மாகிப் போய் விட்டது. இயற்கையின் சித்தம் அதுவாயின் எனக்கு மகிழ்ச்சி தான்"
பழமை விநாயகர் :
ஆரம்ப காலங்களில் விநாயகர் உருவமானது இப்போதுள்ளது போல் தொப்பை இல்லாமல் இருந்தார்.
எப்படி இது போல் தான்.
பசலி ஆண்டு :
தமிழில் பசலி ஆண்டு நடைமுறையில் உள்ளது. வட்டார வருவாய் துறையில் இந்த ஆண்டைத் தான் பின் பற்றுகிறார்கள். இது ஷாஜஹான் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. சரியாகச் சொன்னால் 1636 லிருந்து வழக்கத்தில் உள்ளது. பசலிக்கும் ஹிஜ்ரி ஆண்டுக்கும் தொடர்பு உள்ளது. பசலி ஆரம்பிக்கப் பட்டபோது ஹிஜிரா ஆண்டு 1046 எனவே பசலியும் இதே ஆண்டிலிருநது தொடங்கப் பட்டது என்கிறார்கள் இருந்தாலும் ஹிஜ்ரி 12 ஆண்டுகள் அதிகம்.
ஆங்கில ஆண்டில் 591 ஐ கழித்துவிட்டால் பசலி ஆண்டு கிடைக்கும்.
2012 ஆங்கில ஆண்டிற்கு பசலி ஆண்டு 1421
தமிழ் கல்வெட்டுகளில் மற்றும் ஓலைச்சுவடிகளில் சொல்லப்படும் யுகங்களின் வருஷங்கள்
கிருதாயுகம் - 17,28,000 திரேதாயுகம் - 12,96,000 துவாபரயுகம் - 8,64,000 கலியுகம் - 4,32,000 (தலை சுத்துதா ? ஹேட்ஸ் ஆப் முன்னோர் .)
இம்மியளவு :
கணவன் மனைவி இடையே சிலசமயம் அன்பு செலுத்துவது குறித்து சர்சை ஏற்படும். முக்கால் வாசி கணவன்கள் வசமாக மாட்டிக் கொள்வர். மனைவி இடித்து கூறும் கேள்வி கடுகளவாவது என்மேல் அன்பு வைத்திருக்கிறீர்களா? என்பதாக இருக்கும். இது பரவாயில்லை சிலர் இம்மி அளவுக்கு கம்பேர் செய்வார்கள். இம்மி அளவு எனபது ? 10,75,200 ல் ஒரு பங்கு தான்.
அறுவையர் :
அந்தாளு செம அறுவைப்பா.. விடாமல் பேசுபவரை குறிக்க இப்படி சொல்லுகிறோம். ஆனால் 'அறுவை ' என்பதன் பொருள் 'ஆடை ' எப்படி?
தறிகள் மூலம் ஆடைக்கள் உருவாக்கப்படும் அந்த ஆடையை அறுத்து எடுப்பதை அறுவை என்றும் அந்த வேலை செய்பவரை அறுவையர் எனறும் சொல் வழக்கு இருந்தது. நெசவாளர்கள் அதிகம் வாழும் வீதிக்கு அறுவையர் தெரு எனவும் அழைத்தனர். (...ரொம்ப அறுத்திட்டேனோ? )

ஹிப்னாடிசம் மூலம் ஒருவரை வசியப்படுத்தி அவரின் ஆழ்நிலை மனதில் உள்ளவற்றை அவர் வாயால் கூறக் கேட்கலாம் ஆனால் மனோவசியத்தால் ஒருவரை கொலை செய்ய தூண்ட முடியாது.கலிலியோ :

அனைத்து துணுக்குகளும் ரசிக்கவைத்தன . பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி, ராஜ ராஜேஸ்வரி.
Deleteஅட நிறைய மேட்டரு ...!
ReplyDeleteவரலாற்று சுவடுகளுக்கு எனது நன்றி !
Deleteஅடேங்கப்பா பல தகவலகள் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி பாஸ்
தங்களின் வருகைக்கு நன்றி ,மனசாட்சி
Deletearumaiyana thagaval
ReplyDeletethank you citizen !!
Delete