இறந்த மனித உடலின் மூளையில் சிறு சிறு எலக்ட்ரிக்கல் சப்ளை கெமிக்கல் ரியாக்சன் ஆல் ஏற்படும் இது 37 மணி நேரங்களுக்கு நீடிக்கும்.
சாதிக்காய் (Nutmeg) மருந்தாக பயன் படுகிறது அதுவே உடலில் உட்செலுத்தப்பட்டால் விசம் (Poison).
நம் உடலில் சக்தி வாய்ந்த தசை நாக்குதான் !. [அரசியல் வாதிகளின் முதலீடு..!]
300 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை நீங்கள் படிப்பதாக கொண்டால் உங்கள் கண்கள் முக்கால் கிலோமீட்டருக்கு பயணம் செய்திருப்பதாக கருதலாம்.
பாம்பு மட்டுமே சட்டை உரிப்பதில்லை மனிதனும் தான் அவனின் தோல் லேயர்கள் 27 நாட்களுக்கு ஒருதடவை புதுப்பிக்கப் படுகிறது. அது போல் மொத்தமாக அல்ல சிறு சிறு பகுதிகளாக.
நமது உடல் குடல் பகுதியில் ஆசிட் உள்ளது தெரியும் அதே ஆசிடில் ஒரு ஆணியை போட்டுவைத்தால் கரைந்துவிடும்.
உலகில் நூற்றில் சில பேருக்கு மட்டுமே H H வகை ரத்தம்[பாம்பே ப்ளட் குரூப்]
உள்ளது. இந்த ரத்தம் உள்ளவர்களுக்கு எந்த ரத்த வகையும் சேராது. அதனால் ஆபரேசன் செய்வதற்கு முன் அவர்களின் ரத்தமே பாதுகாக்கப்படுகிறது.
சங்கை காதில் வைத்தால் சத்தம் சங்கிலிருந்து வருவதாக நினைக்கிறோம். ஆனால் காதில் பாயும் ரத்த ஓட்டத்தின் ஓசை தான் அது !.
2007 ஆம் ஆண்டுவரை குடல் வாலினால் எந்த பயனும் இல்லை என்றே கருதப்பட்டது. உடல் நிலை சரியில்லாத போது அழிந்து விடும் நல்ல பாக்டீரியாக்கள் திரும்ப உருவாக உதவுகிறது.
கால் பாதத்தில் வெள்ளைப் பூண்டை தேய்த்தால் சிறிது நேரத்தில் நம் சுவாசத்தில் இதன் வாசனையை உணர முடியும். சாறு தோலினுள் ஊடுருவி ரத்தத்தில் கலப்பதே காரணம்.
அலர்ஜியால் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் வாய்விட்டு சிரித்தால் காய்ச்சல் குறைந்து விடும். [வாய்விட்டு சிரித்தா நோய்விட்டு போகும்...! ]
அநேக கனவுகள் 2 முதல் 3 செகண்டுகள் மட்டுமே நடக்கும். ஒரு ராத்திரியில் 7 கனவுகள் கூட வருவதாக சொல்கிறார்கள். அணைத்தும் ஞாபகம் இருப்பதில்லை.
சுயிங்கம் மென்று கொண்டே வெங்காயம் உரித்தால் கண்களில் கண்ணீர் வருவதில்லை. [ சில சமயங்களில் விலை ஏறும் போது கண்ணீர் வருவது ? அது வேறு..!! ]
குட்டித்துணுக்குகள் ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி சகோதரி!
Deleteநிறைய தகவல்கள் .., நன்றி நண்பா பகிர்வுக்கு ..!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா 50 ஆவது பதிவுக்கு ..!
ReplyDeleteபஃக்ரைன் நண்பருக்கு எனது நன்றி!!
Delete