முதலிரண்டு பகுதிகள்
உயர்ந்த மலை முகட்டில் இறந்த உடல்கள் :
சாம்ட்ஜோங் குகையில் (tomp 5) இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் (3 x 3 அடி) இருந்தது. உடைந்த நிலையில் இருந்த சவப்பெட்டியை ஏதென்ஸ் மற்றும் சிங்லாமா ஒழுங்கு செய்தனர். இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி வலுவான உயர்தர மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.
பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது விரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம். இளஞ்சிகப்பு மையால் வரையப்பட்டிருந்தது. இடதுபுரம் செழிப்பன ஒரு மரம் அதன் வலதுபுரம் காய்ந்து போன மரம். ( " வாழ்க்கையை சிம்பாலிக்காக உணர்த்துகிறதோ ! )
இந்த உடலுக்கு சொந்தக்காரன் உயர்ந்த அந்தஸ்தில் இருந்திருக்க வேண்டும். கழுத்தில் பதக்கம் போன்று வெண்கலத்திலான கண்ணாடி தொங்கவிடப்பட்டிருந்தது. முகத்தில் வெள்ளி மற்றும் தங்கத்திலான முக மூடி அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகமூடி நீளமான நாசி மற்றும் சிகப்பு நிறக்கண்கள் வரையப்பட்டிருந்தன. உதடுகள் கீழ் நோக்கி ஒரு சோக எக்ஸ்பிரசனில் இருந்தது. முகமூடியின் நெற்றிப்பகுதியில் வண்ண நீள் கண்ணாடி பாசி மணி மாலையால் சோடிக்கப்பட்டிருந்தது.
இந்த உடல் 1300 அல்லது 1800 ஆண்டுகளுக்கு முன் இறந்த உடலாக இருக்கலாம். (வருடங்கள் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை)
பத்து வயது ஆண்குழந்தையின் எலும்புக்கூடும் அருகில் கிடந்தது. அந்தகாலத்தில் பலியிடப் பட்டிருக்கலாம் என்பது ஏதென்சின் அனுமானம் அதன் நிலையை (பொஸிசன்) வைத்து இதை ஊகிக்கிறார் ; உறுதிப்படுத்தப் படவில்லை.
இன்னும் அந்த அறையில் இரும்பிலான குறுவாள்கள், ஒரு மண் தட்டில் பார்லி மாவு, ஒரு காலத்தில் பார்லி பீர் நிறப்பட்டிருந்த தாமிர பாத்திரம், சிறு பாத்திரம் மற்றும் அதை வைக்கும் இரும்பிலான சிறு முக்காலி (tripod), வட்ட கைப்பிடியுடன் கூடிய மரத்தாலான கோப்பைகள், எறுமை மாட்டு கொம்புகள், குதிரை மற்றும் ஆட்டின் தலை மண்டை ஓடுகள் கிடந்தன. இந்த குதிரை அவனது குதிரையாக இருந்திருக்க வேண்டும்.
ஏதென்ஸ் உண்பதை, தண்ணீர் குடிப்பதை கூட மறந்து இந்த ஆய்வில் ஒன்றி ஈடுபட்டது பாராட்டத்தக்கது.
ஆகாச புதைத்தல் (Sky burial) :
இதேபோல் மயான குகைகள் சிலவற்றில் அநேக வெட்டப்பட்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன. ( மனித எலும்பு துண்டுகள் 3 முதல் 8 நூற்றாண்டு காலத்தவையாக இருக்கலாம் என்பது அனுமானம் )
இறந்த சடலங்களில் இருந்து சதைகள் நீக்கப்பட்டு எலும்புத்துண்டுகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும். மீதமான எலும்புகள் மற்றும் சதைப்பாகங்கள் வல்லூறுக்கு இறையாக்கப் பட்டிருக்க வேண்டும்.
இது முஸ்டங் பகுதி மக்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.
76 சதவீதம் இம்மாதிரியான எலும்புகள் கிடைத்துள்ளன
இது கண்டிப்பக கேனிபுலிசம் [ Cannibalism - தன் இன ஊன் உண்ணுதல் ] ஆக இருக்காது.
இந்த " திபெத்திய ஆகாச புதைத்தல் வழக்கம் "
புத்த மதம் அங்கு பரவுவதற்கு முன்பிருந்த கால கட்டத்தில் இருந்திருக்கிறது.
முஸ்டங் மம்மிகள் :
இவை எகிப்திய மம்மிகளை ஞாபகப்படுத்துகின்றதா ?
முஸ்டங்கில் மெப்ராக் என்ற இடத்தில் 1995 ல் ஜெர்மன் மற்றும் நேபால் அகழ்வாராய்சியாளர்கள் ஒரு குகையில், ஒரு குழந்தை மற்றும் பெண்ணின் கால் பகுதி மட்டும் மம்மி யாக (பதப்படுத்தி பாது காக்கப்பட்ட உடலங்கள்) கிடைத்திருக்கிறது.
இந்த குகை ஒரு வசதியானவர்களுக்கான மயான குகையாக இருந்திருக்க வேண்டும். மேலே சொன்ன மம்மிகளுடன் 30 சிதைந்த மம்மிகள் கிடைத்தன. மம்மிகள் மரத்தாலான சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தன.
சுமார் 2000 வருடங்கள் பழமையான உடலங்கள் இவை. இவற்றின் உடலில் பட்டையான துணிகளால் சுற்றப்பட்டிருந்தன.
தாமிர கை வளையல்கள், கண்ணாடியாலான நீள் பாசிவடிவ மணி மாலைகள்,சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. இவைகளின் எண்ணிக்கை ஆயிரம் இருக்கலாம். இவைகள் பல்வேறு பகுதிகளை சேர்ந்ததாக அதாவது பாகிஸ்தான், இந்தியா, மற்றும் சில ஈரான் தேசத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.
இவைகள் இம் மக்கள் அந்த தேசங்களுடனான வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததை ; இம்மக்களின் செல்வ செழிப்பை பிரதிபளிக்கின்றன.
இந்த கடினமான பணியில் ஈடுபட்ட பெண் நுண் ஆய்வாளர் (Bio archaeologist) ஜேக்குலின் இங் கிடைத்த எலும்புகளை, சதைப்பகுதிகளை ரகம் வாரியாக பிரித்து ஆராய்கிறார்.
சில குடும்பங்கள் இன்றும் இங்கு குகைகள் வசித்து வருகின்றனர்.
எவை எல்லாம் இந்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவோ, அவை அனைத்தும் சாண்ட்ஜோங் கிராமத்து தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தன் சொந்த பணத்தை சிறு மியூசியம் அமைக்க கொடுத்து உதவியுள்ளார் ஏதென்ஸ் என்பது குறிப்பிடதக்கது.
தங்கள் மூதாதையரின் சிறப்பு மிக்க வாழ்க்கையை நினைத்து பிரம்மிப்போடு பெருமையும் கொள்கின்றனர் இம்மக்கள்.
இப்பகுதி மக்கள் இக்குழுவினரை மிக்க மரியாதையோடு நடத்தினர். அவர்களை பெருமையாக நினைவு கொள்கின்றனர்.
கிடைத்த மரத்துண்டுகள், துண்டு துணிகள், பற்களின் துகள்கள்
வண்ணங்கள் (எந்த தாவரங்களில் இருந்து தாயாரிக்கப்பட்டன போன்ற வேதியல் ஆய்வுகள்) பல இடங்களுக்கு கொண்டு செல்லபட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பற்கள், சில எலும்புகள் DNA ஆய்வுக்காக ஒக்லஹாமா பல்கலை கழகத்திற்கும் (University of oklahoma), உலோகங்கள் லண்டன் பல்கலைகழகத்திற்கும் (university of London) கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் முடிவுகள் பல உண்மைகளை வரலாறுகளை அறிவிக்கப்போகின்றன. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
Thanks for Mustang people ; archaeology team members : athans, mark Aldenderfer (university of california), Jacqueline Eng - western michigan University, Mohan singh Lama - Nepal's archaeology department and National Geography
=====================================================================
"இந்த தொடர் பதிவிற்கு ஆர்வத்துடன் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்திய உள்ளங்களுக்கும், தொடர் வாசகர்களான சைலன்ட் ரீடர்ஸ்களுக்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் இத் தருனத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்."
- கலாகுமரன்

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு )
திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - பகுதி 2

"குழந்தை மம்மி"

அழகான தொகுப்பு
ReplyDeleteசுவாரஷ்யமாக பகுதி பகுதியாக தொகுத்து தந்தது இன்னும் சிறப்பு
நன்றி சிட்டுகுருவியாரே...
Deleteபடத்துடன் சிறப்பான பகிர்வு...
ReplyDeleteமூன்று பகுதிகளும் அருமை...
நன்றி...
tm2
மூன்று பகுதிகளையும் வாசித்து முத்தாய்பான கருத்துக்களை பகிர்ந்த தனபாலன் சாருக்கு நன்றி :0)
Deleteபல தகவல்கள் ஆச்சர்யம் அளித்தன! சிறப்பான தொடர்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனது பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் அளித்து சிறப்பிக்கும் நண்பர் சுரேஷ்...நன்றிகள்.
Deleteநன்றி நண்பரெ..முயற்சிக்கிறேன்.
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎகிப்து பிரமிடுகளைப் போல இங்கேயும் இறந்தவர் உடல்களை பதப் படுத்தியிருக்கிறார்கள். விதம் விதமான நம்பிக்கை.....!!
ReplyDeleteஆம் இது எனக்கும் ஆச்சர்யம் கலந்த தகவல்தான். எகிப்தியர்களுக்கும், மாயன்களுக்கும் ஏன் திராவிடர்களுக்கும் தொடர்பு இருப்பதாக படுகிறது. பாடபுத்தகங்களில் அமெரிகாவை பற்றியும் ஆஸ்திரேலியாவைப்பற்றியும் புவியியல் பாடங்கள் இருப்பதை படித்தவர்கள் திபெத், நேபால் பற்றிய வரலாராயினும் புவியியல் ஆயினும் படித்து அறிந்து கொண்டது குறைவே. நேபாலிகள் ஆரியர் இல்லையே ?
Deleteமர்ம குகைகள் விரிவானஅலசல் நன்றி
ReplyDeleteவணக்கம் பழனிசாமி சார் ஜிபிளஸ் முகநூல் இப்படி எல்லா தளங்களினும் உங்கள் ஆதரவு எனக்கு தொடர்கிறது. உங்கள் பின்னூட்டம் எனக்கு நிரம்ப சந்தோசத்தையும் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை தரவேண்டும் என்ற உற்சாகத்தை தருகிறது ஒரு டானிக் போல..
Deleteஅறிந்து கொண்டேன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நண்பர் மனசாட்சி முத்தரசு, ஓரிரு வார்த்தை என்றாலும் உங்கள் கருத்துக்கள் உளப்பூர்வமானவை. நன்றி
Deleteமிக நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
ReplyDeleteநான் இணையத்தில் வரலாற்றினை தேடியப்பொழுது அஸ்ஸாம்,நேபால் பற்றி கொஞ்சம் படித்தேன் ,ஆனால் இந்த முஸ்டங்க் பற்றி படிக்காமல் தவறவிட்டுவிட்டேன், உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதி மனித இனக்குழுவில் முதலில் நாகரீகம் அடையப்பெற்ற மக்கள் எகிப்தில் வாழ்ந்தவர்கள்,ஆப்ரிக்க இனக்குழ்வில் ஒரு பகுதி இந்தியாவிற்கு வந்து சிந்து நதியில் இருந்து ஒட்டு மொத்த இந்தியாவிலும் பரவியதே திராவிட இனம் என்கிறார்கள். நேப்பாள், அஸ்ஸாமில் இருந்தவர்களும் திராவிடர்கள் என கூறுகிறார்கள்.
நேப்பாளில் இருக்கும் கூர்க்கா மக்கள் ஒரு காலத்தில் இப்போதைய பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் அருகே இருந்த மக்கள் ,கோரக்கர் என்ற முனிவரை குருவாக கொண்டவர்கள் என்கிறார்கள்.
உத்திர பிரதேசத்தில் உள்ள கோரக்ப்பூர் அவர் பெயரால் உருவாக்கப்பட்டது. கோரக்கரை பின்பற்றியவர்கள் கொர்க்காஸ் என சொல்லப்பட்டு இன்று கூர்க்கா என்கிறார்களாம்.
கோரக்கர் தான் திரு மூலர் என ஒரு வரலாறு சொல்கிறது,கோரக்கரின் சமாதி நாகை மாவட்டத்தில் உள்ளது.
எல்லாமே திராவிட இனக்கலாச்சாரம் , எகிப்தி,திராவிடம் ,இன்கா,மாயன் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என சொல்கிறார்கள்.
நான் எழுதும் பதிவிற்காக படித்தது இங்கே கொஞ்சம் பகிர்ந்துக்கொண்டேன், விரிவாக பின்னர் பதிவில் வரும்.
மூன்று பகுதிகளுக்கும் பதிவு சம்பந்தமான கருத்துகளை வழங்கி பல அறிய தகவல்களை பகிர்ந்து கொண்ட வவ்வால் சாருக்கு எனது நன்றி.
Deleteஎகிப்தியருக்கும் மாயன்களுக்குமான திராவிட தொடர்ப்பு பற்றி நானும் தகவல்கள் திரட்டி வருகிறேன் இதையே நீங்களும் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். இந்த இடத்தில் எனக்கு கிடைத்த தகவல்கள் ஆரியரை மையாமாக வைத்து மாயன்களை ஒப்புமைப்படுத்தி இருந்தனர். மாயன்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் அல்லது சிந்து நதி கரையில் வசித்தவர்கள் என்ற மேற்கோள் காட்டப்படுகிறது.
திருமூலர் குறித்த தகவல் தமிழர் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய கருத்தே!
மாயன்கள் குறித்த பதிவினை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். இது குறித்து எனது பதிவு வந்தாலும் அது பற்றிய தங்கள் கருத்துகளை அளிக்க வேண்டுகிறேன்.
பொதுவில் வெளவால் என்பவர் எதிர் கருத்துக்களை அளிப்பவர் என்ற எண்ணத்தை இங்கு உடைத்திருப்பதாக கருதுகிறேன்.
உங்களின் ஆக்கப்பூர்வமான ஆணித்தரமான பல பின்னூட்ட கருத்துகளை வாசித்திருக்கிறேன்.
என்னை பொருத்த வரை ஒரு கருத்து சரியோ தவரோ அவைகளில் அவைகளை ஏற்கும் மன பக்குவம் அவசியம். ஒரு கட்டத்தில் தவறெனப்படுவது இன்னொரு கட்டத்தில் சரி என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும் இல்லையா ?
கலாகுமரன்,
Deleteதங்கள் புரிதலுக்கு நன்றி!
//பொதுவில் வெளவால் என்பவர் எதிர் கருத்துக்களை அளிப்பவர் என்ற எண்ணத்தை இங்கு உடைத்திருப்பதாக கருதுகிறேன்.//
எனக்கு ஒன்றும் தலை எழுத்தில்லை எல்லா பதிவிலும் போய் எதிர் கருத்தோ அல்லது மாற்று கருத்தோ சொல்லிக்கொண்டிருக்க, நான் திரட்டிகளில் இருந்து கூட விலகி ரொம்ப நாளாச்சு, எனவே அனைவரையும் கவர பதிவு போடும் அவசியம் கூட எனக்கில்லை.
மாயன்கள் பற்றி நீங்கள் படித்திருப்பதால் நான் சொன்னதில் உள்ள தொடர்பை நீங்கள் புரிந்துகொண்டீர்கள், ஆனால் பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு (ஒரே ஒரு) இணைய தளத்தில் உள்ளதை காபி&பேஸ்ட் போல மொழிப்பெயர்த்தோ அல்லது அப்படியே எடுத்தோ எழுதிவிட்டு,அவர்களே கண்டுப்பிடித்து எழுதியது போல எழுதி இருப்பார்கள், அந்த சமயத்தில் அதற்கு மாற்றான கருத்தை நான் சொல்லப்போக ,என்னமோ நான் அவர்களை எதிர்த்து எழுதியது போல என்னை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
நீங்களே தென்னமெரிக்க மாயன்கள்,இன்கா ,அஸ்டெக்,பற்றி எழுதி திராவிட மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்குன்னு எழுதி பாருங்களேன், அது எப்படின்னு பலர் சண்டைக்கு வருவாங்க.
சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என உலகமே ஏற்றுக்கொண்டதை சொன்னாலும் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் ஓரளவுக்கு படித்து விட்டே சொல்கிறேன் , பேசுபவர்களும் படித்து விட்டு சொல்லாமல், எங்க தாத்தா சொன்னார் என்பது போல பேசுவார்கள் :-))
இணைய உலகில் கருத்து சுதந்திரம் வேண்டும் என்பார்கள், ஆனால் மாற்று கருத்து சொல்லிவிட்டால் எதிரி போல பார்ப்பார்கள் :-))
நன்றி!
மிகச்சிறப்பான தொகுப்பு.
ReplyDeleteதமிழ் பத்திரிக்கைகளில் வரவே வராத செய்திகளை...
அழகுத்தமிழில் அள்ளித்தரும் நண்பருக்கு பாராட்டும்...நன்றியும்.
சில பத்திரிக்கைகளும்,ஊடகங்களும் டப்பா படத்தை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து நடுநிலமைஅற்றே எழுதுகின்றன. நல்ல பல விசயங்களை மக்கள் அறிந்து கொள்ள ச்செய்வதில் அவர்களுக்கு அக்கரை இருப்பதாக தெரியவில்லை. அப்படி பட்ட நல்ல கருத்துக்களை எழுதினால் விற்றகாது என்ற என்னமோ தெரியவில்லை. இளைஞர்கள் பலரும் பொது அறிவு தகவல்களை படிக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே என் அவா. அறிவியல் தகவல்களை தாங்கி வரும் தமிழ் பத்திரிக்கைகளின் எண்ணிக்கை குறைவே. மிக்க நன்றி உலக சினிமா ரசிகரே !
ReplyDeleteஎன்ன பாஸ் அதுக்குள்ள முடிசிட்டிங்க, இன்னும் எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்
ReplyDelete