கேன்சருக்கு நானோபாட்கள் - கத்தியில்லா அறுவை சிகிச்சை(புதிய தகவல்)
”கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை ” இது உண்மையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வியாதிகளில் இருந்து இருந்து விடுபட அணுப்பரிமாண நுண்கருவிகள் உடலின் உள் செலுத்தப்பட்டு நோய் நீக்கப்படும். இத்தகைய மருத்துவம் மருத்துவ உலகில் ஒரு மைல் கல்.
நானோபாட்கள் (Nano Bots) / “நானோ கிருமிஅழிபான்” / ”நானோபாட்ஸ்” (Nanobots)
நானோ தொழில் நுட்பத்தாலும், மைக்ரோ சிப்புகளாலும் மிக மிக குட்டியாக வடிவமைக்கப்படும் நுண்கருவிகள் நானோபாட்ஸ். இவைகள்
உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள், கேன்சர் மற்றும் நோய் கிருமிகளை போரிட்டு அளிக்ககூடிய மைக்ரோ ரோபோக்கள்.
விஞ்ஞானிகள் இது எப்படி இருக்கவேண்டும் இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டும் என்று டிசைன் செய்துவிட்டார்கள், ஒரு மருத்துவ டூல் பாக்ஸ் போன்ற இதை மேட்டார் மற்றும் உலவிக்கருவிகள் இணைத்து இன்னும் மேம்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
இதை வைத்து எப்படி சிகிச்சை செய்வார்கள் ?
இரண்டு மில்லியன் நானோ ரோபோட்டுகள் மருந்துகளோடு சேர்க்கப்பட்டு ஊசி மூலமாக இரத்த நாளங்களில் ஏற்றப்படும். இவற்றின் செயல்பாடு மற்றும் கட்டுப்பாடுகள் கணினி மூலமாக கண்காணிக்கப்படும். இந்த நானோபாட்கள் கட்டளைக்கு தகுந்த வாறு ஒவ்வொரு வேலையை செய்யும். உதாரணமாக சிலதுகள் ரத்தக் குழாயில் அடைந்து இருக்கும் கொழுப்பு அடைப்புகளை நீக்கும், சிலதுகள் அந்த கொழுப்பு துகள்களை சேகரிக்கும், இன்னும் சிலதுகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்தை செலுத்தும், சிலது திசுக்களை ஒட்டும், இது போல பல பணிகளை இவை செய்யும் திறன் பெற்றவை. வேலை முடிந்ததும் இவை செயல் இழக்கச் செய்ய முடியும். இறுதியில் உடலை விட்டு வெளியேற்றப்படும். சுமார் அரை மணியில் கச்சிதமாக சர்ஜரி முடிந்துவிடும்.
கேன்சரால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இவை செலுத்தப்பட்டு பக்கத்து திசுக்களுக்கு பாதிப்பிலாமல் கேன்ஸர் நுண்கிருமிகளை மட்டும் அழிக்கும் திறன் பெற்றவையாக இருக்கும், இந்த நுண் ரோபோக்கள்.
நானோ என்பது கிரேக்க வார்த்தையில் இருந்து பிறந்தது, ஒரு நானோ என்பதன் அளவீடு “பில்லியனில் ஒரு பங்கு” ஒரு நானோ மீட்டர் nanometre (nm) என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10−9) ஒரு பங்கு. ஒரு நானோ அப்ஜெக்ட் 100nm வரை அளவிடக்கூடியது. அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது
புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்.
ஒரு தலை முடியின் குறுக்கு வெட்டு 90000 nm கொண்டது.
ஒரு செல்லின் குறுக்களவு 25000 nm. டி என் ஏ மூலக்கூறின் குறுக்களவு 2 nm.
பாதிக்கப்பட்ட திசுக்களை மட்டும் சரிசெய்வது எப்படி என்பது டாக்டர்களின் கனவு ப்ராஜெக்ட். தொடர்ந்த ஆய்வுகள் இதை மெய்பிக்க போகிறது. கலிபோர்னிய மருத்துவ ஆய்வு பல்கலைகழகத்தை சேர்ந்த பால் ரோத்மௌண்ட் 2006 இல் டி.என்.ஏ வை மடக்கி காட்டினார். இந்த அடிப்படையே நானோரோபோட் களை கட்டமைக்க காரணமாக இருந்த ஒரு தியரி எனலாம்.
நானோ டெக் வல்லுனர்களின் சவாலான பணி இந்த நானோபாட்களை உடலின் உள்ளே இயங்கச்செய்வது. 2010 ல் கலிபோர்னியா யுனிவர்சிட்டியை சேர்ந்த லியான்ஃபான் சாங் மற்றும் ஜோஸ்ப் வாங் ஆகியோரின் முயற்சியால் நானோபாட்களை ஹைட்ரோஜன் பெராக்ஸைட் (H2O2) இதன் எரிபொருளாக பயன் படுத்தியது தான் இதன் இயக்கமுறை தொடக்கம்.
இதன் இயங்கு வேகம் செகண்டுக்கு 2 mm என்றால் இவ்ளோதானா என்றே தோன்றும், ஆனால் இதனுடைய அளவை கருத்தில் கொண்டு பார்த்தோமானால் ஒரு கார் மணிக்கு 600 கிலோமீட்டர் போனால் எப்படி இருக்கும் அந்த வேகம்.
நானோ ரோபோட்டுகள் உருவ அமைப்பு மூன்று கால்களை கொண்ட சிலந்தி போன்றது இதன் அளவு 2 nm. இது டிஎன் ஏ வடிவமைப்பை ஏற்றி செய்யப்பட்டது. மிலன் ஸ்டொஜனொவிக் என்பவர் (கொலம்பியா யுனிவர்சிட்டி - நியூயார்க்) இதை 2012 ல் செயல்படுத்தி காட்டினார்.
2011 ல் இந்திய விஞ்ஞானிகள் (indian institute of science) கண்டுபிடித்த ஒரு செய்முறை இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் அழுத்தமானது அதிக மாக இருக்கும் நானோ வயர் பொருத்தப்படும் போது இவை அந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஈர்த்து செல்லும் என்பது (மேக்னடிக் தத்துவம் போல) இந்த டெக்னாலஜி இதன் உருவாக்கத்தில் பெரிதும் பயனளிக்கும் ஒரு ஆக்கம்.
எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் நானோ தொழில் நுட்பம் இன்னும் பல மகத்தான சாதனைகளை செய்ய இருக்கிறது.
தொடர்புடைய பதிவுகள் :
கொலைகார வைரஸ்கள்..அழிக்க வருகிறது ட்ரகோ [DRACO]
கேன்சர் சிகிச்சைக்கு நானோ டெக்னாலஜி..
//ஒரு கார் மணிக்கு 600 கிலோமீட்டர் போனால் எப்படி இருக்கும் //
ReplyDeleteபிரேக் கழண்டது போல் இருக்கும்.. ஹிஹிஹி ..
அருமையான தகவல்.
புதிய தகவல்கள் நன்றி நண்பா
ReplyDeleteபுதிய தகவல்கள் நன்றி நண்பா
ReplyDeleteஒரு பக்கம் அறிவியல் கண்டுபிடிப்புகள் பிரச்சனைகளை உண்டு செய்கிறது மறுபக்கம் அதற்கான தீர்வுகளைக் கொடுக்கிறது... நல்ல தகவல்..
ReplyDelete