நீங்கள் கனவு காண்பது உண்டா? இதை படித்தபிறகு கூட உங்களுக்கு கனவு வரலாம் !.
கனவு கண்டுதான் ஏராளமான கதைகளும், கவிதைகளும், பாடல்களும்,விஞ்ஞான ஆராய்சிகளும், எண்ணற்ற கண்டுபிடிப்புகளும், ஏன் திரைப்படங்களும் உருவாகின.
கனவு என்பது என்ன?, மனிதன் ஏன் கனவு காண்கிறான்?, கனவுகளுக்கும் மனித உள்ளத்திற்கும் என்ன சம்பந்தம்? கனவுகள் நம் வாழ்க்கையின் உட்பொருளை உணர்த்துகின்றனவா? கனவு மனித வாழ்க்கையில் எப்படி எப்போது ஏற்பட்டது? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடினார் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு.
தூங்கும் மனம் தன் நினைவுகளை படமாக்கி பார்கிறது அதுதான் கனவு. படமாக்குவதும் மனம்தான் பார்பதும் மனம்தான் என்ற உண்மையை இங்கே நினைவு வைத்துக் கொள்ளவேண்டும். மனிதன் எப்போது சிந்திக்க தொடங்கினானோ அப்போதிருந்தே கனவு தொடங்கிவிட்டது.
நினைவு மனத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. கனவுகள் மனதின் விருப்பமே அடிப்படை நம்மனது அதாவது நினைவுகள் போகும் போக்கிலேயே கனவு தொடரும் அல்லது தடைபடும்.
கனவு வயது அடிபடை அடிபடையில் பல வகைகளாக பிரிக்கபடுகிறது.
(குழந்தை கனவுகள்) : விருப்பம் காரணமாக ஏற்படுவது ,அச்சம் கவலை பரபரப்பு காரணமாக ஏற்படுவது, தண்டணை அனுபவிப்பதாக ஏற்படுவது.
பெரியவர்களின் கனவுகளின் வகைகள் : நிர்வாணகனவுகள் அல்லது அரைகுறை ஆடை அணிந்திருப்பதாக தோன்றுவது, பரிட்சை கனவுகள், உருவககனவுகள், கனவில் தோன்றும் எண்கள் மற்றும் பேச்சுகள், அர்த்தமற்ற கனவுகள்.
கனவுகள் வெளிப்படையாக ஆராயாமல் அதன் ஆழத்தில் உள்ள உண்மையை ஆராய வேண்டும். உண்மையில் கனவு காணும் போது மனிதன் தூங்கி கொண்டு இருந்தாலும் விளித்திருக்கும் அவன் மனம் கனவுகளை தணிக்கை செய்கிறது. வேண்டாத உணர்ச்சிகள் வெளிப்படாமல் மனத்தடையிடுகிறதாலேயே வெளிப்படையான கனவு அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.
கனவுகள் மனதின் நிறைவேராத ஆசைகள் பூர்த்தி செய்து வைப்பதற்காக உண்டாகின்றன. உறங்குகின்ற மனதின் வேலையே கனவு தான். நமது உள்மனதில் அமுங்கி கிடக்கும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே கனவு. குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நமக்கே மறந்து போன விஷயங்கள் கனவாக வெளிப்படுகிறது. நாம் விரும்பாத நிகழ்வுகளை தடை செய்வதும் மனது தான். மனது தணிக்கையை மீறி தான் நினைக்கும் விசயத்தை உருவங்களாகவோ சங்கேத குறிகளாகவோ வெளிப்படுத்துகிறது.
கனவுகள் குறித்த ஆராய்ச்சி மருத்துவ உலகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
நிறைய புத்தகங்கள் கனவுகளை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டன.
கனவுகள் எதிர்காலத்தைப்பற்றிய சுசகமான அறிவிப்பை மனிதனுக்கு உண்டாக்குகிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
[கனவை பற்றிய ஆராய்ச்சி செய்தவர் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு (Sigmund Freud) பற்றிய சிறுகுறிப்பு அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "the interpretation of dreams" அதாவது "கனவுகளின் உட்பொருள் விளக்கம்" ( ஆண்டு 1900 ). யுகோஸ்லெவேகியா நாட்டில் பிறந்தவர். அவர் ஒரு யுதர் என்பதால் ஹிட்லரின் நாஸிப்படையால் வயதான காலத்தில் சொல்லெனா துன்பங்களை அனுபவித்தவர். பின் ஆஸ்திரிய நாட்டை விட்டு துரத்தப்பட்டார் தனது 83வது வயதில் இங்கிலாந்தில் (1939) மரணமடைந்தார்.]
இனியவை கூறப்பட்டுள்ளது. நன்று. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
Thanks, for your comments.
Delete