கி.மு. 10 ல் முதல் நாணயம் லித்தியன்களால் (இந்தோ- ஐரோப்பியன்) உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 900 ஆண்டுகளுக்குப்பிறகு தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்க தலையா, பூவா - டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது.
அதாவது, ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை (முகம்) ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் தூக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள்.
டாஸ் இல்லாத கிரிகெட்டை நினைத்துப் பார்க்க முடியுமா ?
ஏப்ரல் 1 - முட்டாள்களின் தினமானது எப்படி ?
1564 - வரை பிரான்சில் புதுவருட கொண்டாட்டமானது மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை நடந்தது. அதன் பிறகு அதாவது கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு அந்த கொண்டாட்டமானது ஜனவரி 1 க்கு மாற்றப்பட்டது. இந்த புது வருட கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய வேடமாக கோமாளி கட்டாயம் இருப்பார். பழக்கத்தை விடாமல் கொஞ்ச காலம் ஏப்ரல் 1 ல் புதுவருடம் கொண்டாடினர் இந்த பபூனோடு. எனவே இந்த தேதி முட்டாள்களின் தினமானது.
[ இதே போக்கில் நம் நாட்டிலும் அது தான் ...தமிழ் புத்தாண்டை இதே போல் ஒரு தினமாக மாற்றும் முயற்சியும் நடப்பது ... சுவாரசியமானது தான் !! ]
கருப்பு கண்ணாடி அணியும் வழக்கம் எப்போது ஏற்பட்டது?
தொப்பியும் கருப்பு கண்ணடியும் அணிந்த தலைவர், கருப்பு கண்ணாடி மட்டும் அணிந்தவர்.
ஏன்? ஒரு எழுத்தாளரின் சின்னமும் தொப்பியும், கண்ணாடியும் தான் (தமிழ்வாணன்)
இப்படி கண்ணாடி அணியும் பாரம்பரியம் தொடர்கிறது.
13ம் நூற்றாண்டில் சீனர்கள் கருப்பு கண்ணாடியை கண்டுபிடித்தார்கள். இதை அப்போது நீதிபதிகள் மட்டும் பயன்படுத்தினர். அவர் இதை அணிந்திருக்கும்போது அவரின் கண் பார்வை எங்கு செல்கிறது அவரின் கவனம் என்ன என்பதை பிறர் அறியாமல் தவிர்க்க இது பயன்படுத்தப்பட்டது.
ஆரம்பகாலங்களில் எஸ்கிமோக்கல் இரண்டு கண்ணாடிகளை கண்களின் மீது கட்டிக்கொண்டார்கள் வெய்யிலில் இருந்து பாதுகாக்க அல்ல பனி பொழிவில் இருந்து கண்களை பாதுகாக்க.
தற்கால குளிர் கண்ணாடிகள் 1932-ல், அமெரிக்கர்களால் போர் விமான ஓட்டிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் இது அமோகமாக பயன்படுத்தப்படுவது தெரிந்தது தான். ஹீரோ தனியாக கருப்பு கண்ணாடி போட்டு வந்து கலக்கினால், வில்லன்கள் கூட்டமாக போட்டு மிரட்டுகிறார்கள்.
அறியாத சுவாரசியமான தகவல்களுக்கு மிக்க நன்றி
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி.
Delete