கல்ஃப் வெப்ப நீரோட்டம்.
கடைகண் ஓட்டத்தை கண்டாலும் பெண்னின் மனவோட்டத்தை யாரறிவர்.
அட்லாண்டிக் கடலின் உள்ளே செல்லும் ஒரு நீரோட்டம் தான் கல்ஃப் நீரோட்டம். இந்த நீரோட்டம் ஒரு வெப்ப நீரோட்டம். அது தான் ப்ளோரிடா முதல் வட யுரோப்பா வரையுமான தட்ப வெப்ப சுழ்நிலையையும் நிர்ணயிக்கிறது. ப்ளோரிடா கடற்பகுதியில் தொடங்கி ப்ளோரிடா மற்றும் க்யூபா கடல் கணவாய் வழியாக பயணித்து செல்கிறது என ஆராய்ச்சி செய்தவர் அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் ப்ராங்கிளின். இன்று வரை இது போன்ற நீரோட்டங்கள் குறித்த ஆராய்ச்சி மர்மமாக நீண்டு கொண்டே செல்கிறது.
நம்மை ஆச்சர்யப்படவைக்கும் அதன் ஓட்டமானது எப்படி இருக்கும் என்றால் நீங்கள் புவியியலில் படித்த பெரிய ஆறுகள் மிசிசிபி, நைல், காங்கோ, அமோசான், வோல்கா, யாங்ட்ச் போன்றவற்றின் ஒட்டு மொத்த கூட்டணியாக ஓடிக்கொண்டிருக்கும் என்பது தான் அதன் பிரம்மாண்டம்.
( சரி கவிதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ங்கரீங்களா? அது தாங்க இந்த மாதிரியான கண்ணுக்கு தெரியாத எதையுமே கண்டு பிடிக்கும் விஞ்ஞானிகளால முடியாத ஒன்னு தான் பெண்ணின் மனசு )
மூங்கில் இனத்தில் சில வகையினை ஆராய்ந்தார்கள். அவற்றில் சில வகை மூன்றடி வளர்ந்தது. இதில் என்ன ? ஆச்சர்யம் என்கிறீர்களா ? அந்த மூன்றடி வளர்ச்சி என்பது ஒரு நாளுக்கு.
இருவகையான கதிர்கள் (ray) இன்ஃப்ராரெட்(IR), அல்ட்ரா வயலெட் (UV)
IR ஐ அதாவது முன்சிகப்பு (InfraRed) கண்டறிந்தவர் பெரெடரிக்ஹர்சல் (Frederic Herschel). 2000 ஆண்டுகள் கடந்த பின் புதிய கோள் - யூரேனசை கண்டுபிடித்தவர் இவர் தான்.
IR ஆனது திருட்டை தடுக்கும் அலாரம், தீ தடுப்பு கருவி, போலீஸ் பயன்படுத்தும் தேடுபொறி களில் மற்றும் விளம்பர தொல்லை வரும்போது சேனல்கள் தாவி செல்ல பயன் படுத்தும் ரிமோட்- ல் பயன்படுத்த படுகிறது.
அல்ட்ரவயலட் (UV) கண்டறிந்தவர் ஜோகன் ரிட்டர் (Johann Ritter) இவரும் ஹர்சலை பின்பற்றி கண்டுபித்த கண்டுபிடிப்பு இது. இவர் ஆராய்ந்தது கெமிக்கல் துறையில். இன்றைய புகைப் படகலைக்கு முன்னோடி இவர் தான். இந்த UV ஆனது சோலார் பற்றிய அராய்ச்சி மற்றும் சூரிய சக்தியாக்கம்,
மைக்ரோ வோவண்கள், எக்ஸ் -கதிர் கள் மேலும் காமாகதிர் பற்றிய ஆய்வு இவற்றில் பயனாகிறது.
மேலும் ஒரு செய்தி IR - UV கண்டுபிடித்த இருவரும் ஜெர்மானியர்கள்.
அனஸ்தீசியா எனும் மயக்கவியல் மருத்துவம்
அறுவை சிகிச்சையின் போது வலியில்லாம இருக்க பல வகையான மருந்துகளை உபயோகிச்சாங்க. சீனர்கள் உபயோகிச்ச டெக்னிக் அக்கு பஞ்சர் (உடம்புல சிறிய ஊசிகளை குத்தி வைப்பது). ஆதிகால ரோமன் மற்றும் எகிப்தியர்கள் மந்த்ரேக் எனும் மந்த்ரகோரா செடி வேர். ரொம்ப காலத்துக்கு இது தான் ஐரோப்பிய மருத்துவர்களின் வர பிரசாதமா இருந்தது.
அப்புரம் கோக்கோ தலைய கடிச்சு சாப்பிடச் சொன்னாங்க. கோக்கோ திரவத்தை புண்ணின் மேல தடவுனாங்க.
ராணி விக்டோரியா தனது 7ஆவது குழந்தை வலி இல்லாம பிறக்கனும்னு சிம்சனைக் கூப்பிட்டு கேட்டுகிட்டாங்க. அவர் குலோரோ பார்ம் உபயோகிச்சார் (1838).
ஜார்ஜியா மருத்துவர் கிராஃப்போர்ட் ஈதர் உபயோகப்படுத்தினார் (1842). இத சரியா உபயோகிக்கம அபரேசன் பாதில நோயாளி எந்திரிச்சு கத்தினாங்க.
ஆங்கில விஞ்ஞானி ஹம்ப்ரி டேவி 1801-ல் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இவைகளின் கலவையான நைட்ரஸ் ஆக்சைட் கண்டுபிடிச்சார். இது தான் சிரிப்பூட்டும் வாயு. இத கண்டுபிடிக்கறதுக்குள்ள அதோட பாதிப்புல பல தடவை மயக்கம் போட்டு விழுந்துட்டாரு.
பேச்சடக்கி இருந்தாலும் இருக்கலாம் மூச்சடக்கி இருப்பது கடினம் தான்.
மனிதனுக்கு பயோலெஜிக்கல் இறப்பு என்பது ஆக்ஸிஜன் இல்லாமல் மூன்று நிமிடங்கள் இருந்தால் இறப்பு நிச்சயம். ப்ரீ ஸ்டைல் நீச்சல் வீரர் ஒருவர் பிப்பின் பெராஸ் இவர் ஒரு உலக வெற்றியாளர். இவர் நீரினுள் மூச்சடக்கி புரிந்த சாதனை நேரம் 8 நிமிடம் 58 நொடிகள்.
நல்ல பதிவு.சினிமா சகதியில் இவ்வகை அத்திப்பூக்கள் பூப்பது அபூர்வம்.இவ்வகை அறிவுப்பூர்வமான பதிவுகளுக்கு தேன்மழையின் ஆதரவு எப்பொழுதும் உண்டு.Wordverification ஐ நீக்கினால் மேலும் பல பின்னூட்டங்கள் வரலாம்.
ReplyDeleteதேன்மழையின் ஆதரவுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன்.
DeleteWord verification -ஐ நீக்கிவிட்டேன். நன்றி.
Deleteதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி திரு.ரத்தினவேல் அவர்களே.
ReplyDeleteஅருமையான தகவல்கள். மூங்கில் எத்தனை வேகமாக வளர்ந்தாலும் கோலாகரடிகள் தின்று தீர்த்து விடுமாமே?
ReplyDeleteஉண்மை தான் கோலா கரடிகள் மிக சாதுவான, கூச்ச சுபாவமுள்ள விலங்கு. மூங்கில் மற்றும் இலை மட்டுமே அதன் உணவு.
Delete