பென்குவின்கள் பறக்க இயலா பறவை இனம், தெரிந்ததுதான். இவைகளில் உலகத்தில் 17 விதமான வகைகள் உண்டு பெரும்பாலும் அண்டார்டிகா பனி பிரதேசத்தில் கூட்டமாக வாழும். நீருக்கடியில் இதன் நீச்சல் வேகம் மணிக்கு 24 கி.மீ இதன் துடுப்பு போன்ற கால்களும் றெக்கையும் வேகமாக நீந்த உதவுகிறது.
ராஜ வகை [ Emperor ] பென்குவின் பெயருக்கு ஏற்றார் போல் பிரமாதமான உடல் அமைப்பு கொண்டது. பெரிய தலை மற்றும் நீளமான அலகு கொண்டது. 3.7 அடி உயரமும் 41 கிலோ எடையும் கொண்டது. சிறிய வகை 16 இன்சுகள் தான் இதன் எடை ஒரு கிலோ மட்டுமே.
குடும்பமாக வாழும் விலங்குகளுக்கு சிறந்த உதாரணம் பென்குவின்கள் தான். தாய் பறவை ஒரே ஒரு முட்டையை தந்தை பறவையிடம் கொடுத்துவிட்டு இரைதேட கடலுக்குள் சென்று விடும். அது கொடுத்த முட்டையை குஞ்சு பொறிக்கும் வரை அதை பத்திரமாக பாது காப்பது மற்றும் மிதமான சூட்டிற்கு தன் கால்களுக்கு இடையே அடைகாக்கும் பவுச் பகுதியில் வைத்துக் கொண்டிருக்கும் தந்தை பறவை. பசியாயினும் பொறுமை காக்கும், தாய் பறவை ஏதேனும் உணவு கொண்டுவரும் வரையிலும். குஞ்சு பொறிக்க 60 நாட்கள் வரை அது காத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பெரும்பாலும் குஞ்சை வளர்க்கும் பொறுப்பும் அதற்கு உண்டு.
இவற்றின் உணவு மீன்கள், ஸ்கிவிட் எனும் கடல் உயிரி. உணவை லாவகமாக தூக்கி போட்டு பிடித்து சாப்பிடும்.
அண்டார்டிகா உறைபனியில் எப்படி வாழ்கிறது?. இதன் உடல் அமைப்பு அதற்கு தகுந்தார்போல் திடமான கொழுப்பு உடல் கொண்டவை. மேலும் அடர்த்தியான ரோமமும் இதை கடும் குளிரில் இருந்து பாதுகாக்கிறது. வால் பகுதியில் ஒரு சிறப்பு உறுப்பில் எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது இது உடல் நீரால் நனையாமல் வாட்டர் புரூப் போல பாது காக்கிறது.
//தாய் பறவை ஒரே ஒரு முட்டையை தாய் பறவையிடம் கொடுத்துவிட்டு இரைதேட கடலுக்குள் சென்று விடும். குஞ்சு பொறிக்கும் வரை அதை பத்திரமாக பாது காப்பது மற்றும் மிதமான சூட்டிற்கு தன் கால்களுக்கு இடையே அடைகாக்கும் பவுச் பகுதியில் வைத்துக் கொண்டிருக்கும். பசியாயினும் பொருமை காக்கும், தாய் பறவை ஏதேனும் உணவு கொண்டுவரும் வரையிலும்//
ReplyDeleteபுரியல...எதாவது பிழையா?
ஆமாம் மனசாட்சி, எழுத்துபிழை "தந்தை பறவையிடம் கொடுத்துவிட்டு" என இருக்க வேண்டும். தவறை திருத்திவிட்டேன். கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு எனது நன்றி.
Deleteஅடேங்கப்பா - நன்றி நண்பா அறிந்து கொண்டேன்
ReplyDeleteதந்தை பறவையின் பொறுமை - அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
நன்றி தனபாலன் சார்.
Deleteபெங்குயின் பற்றிய சிறப்பாக அறிந்துகொள்ள வைத்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html
நன்றி சுரேஷ்...
Deleteபகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே. தந்தையின் பொறுமை வியப்பில் ஆழ்த்துகிறது.
ReplyDeleteவருக ரஷன் நன்றி.
Deleteதகவல்கள் அருமை நண்பரே! தொடர்ந்து கலக்குங்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteநான் பார்க்க ஆசைப்பட்ட பறவையினம்.
ReplyDeleteசிங்கப்பூரில் ஒரு கண்காட்சியில் பார்த்தேன்.
மைனஸ் டிகிரியில் ஏர்கண்டிஷன் பண்ணி சிறை வைத்திருந்தார்கள்.
குற்ற உணர்வுடன்தான் பார்த்தேன்.நிச்சயம் ரசிக்கமுடியவில்லை.
‘மார்ச் ஆப் த பென்குயின்’ என்ற ஆவணப்படம் பென்குயினை பற்றிய தகவல்களை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும்.
நான் அந்த ஆவணப்படத்தை நூற்றுக்கணக்கில் விற்றிருக்கிறேன்.
இப்போது என்னிடம் காப்பி இல்லை.
பல பள்ளிகளில் திரையிட இப்போது தேவைப்படுகிறது.
யாராவது தந்து உதவுங்கள்.தொடர்புக்கு...90039 17667
சிறு வயதில் சென்ரல் அல்லது மாருதி தியேட்டரில் பென்குவின் பற்றிய டாக்குமென்றி படம் பார்த்திருக்கிறேன்.
Deleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteவாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
இங்கே கொஞ்சம் கூடுதல் விவரம் இருக்கு. நேரம் இருந்தால் பாருங்கள்.
ReplyDeletehttp://thulasidhalam.blogspot.co.nz/2009/02/blog-post_04.html
தங்கள் வருகைக்கு நன்றி கோபால் சார்,
Delete2009ல் ஆண்கள் பொல்லதவர்களா எனும் தலைப்பில் பென்குவின் பற்றிய சுவாரசிய அலசல் படித்தேன். ஸ்காட் பேஸ்'' Scott Base எனும் இடத்தில் நேரில் பார்த்த பென்குவின்களை பற்றி சுவாரசியமான பதிவு. இதை படிக்காதவர்கள் அவசியம் படிக்க கேட்டுகரேன்.
//ஸ்கிவிட் எனும் கடல் உயிரி// தமிழில் கணவாய் என்பர்.
ReplyDeleteவால் பகுதியில் ஒரு சிறப்பு உறுப்பில் எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது இது உடல் நீரால் நனையாமல் வாட்டர் புரூப் போல பாது காக்கிறது.//இந்த நெய்ச்சுரப்பி பொதுவாக அத்தனை பறவையினத்துக்குமுண்டு. அப்பப்போ இறகுகளைக் கோதும் போது அவதானித்தால், முதுகின் கீழ்ப்புறத்தில் வால் பகுதியின் தொடக்கத்தில் இச்சுரப்பியை தம் அலகால் பிசுக்கு வரும் நெய்யை தம் கன்னத்தில் தடவி பின் அதை இறகுகளுக்கு பூசுவதை அவதானிக்கலாம். பளபளப்புடன், நீர் வழிந்து ஓடுவதற்கு ஏதுவாகவும். இதைப் பறவைகள் செய்கின்றன.
உலக வெப்பமாதலுக்கு பலியாகும் பறவையினத்தில் முதலிடம் வகுப்பதே, இந்த பென்குயின்களென்பது வருந்தமான செய்தி!
La marche de l'empereur-2005 , உலக சினிமா ரசிகன் நீங்கள் கூறுவது இந்த விபரணச்சித்திரமாகத் தான் இருக்கவேண்டும். நான் அரங்கில் பார்த்தேன். இது இணையத்தில் இருக்குமே!
//உலக வெப்பமாதலுக்கு பலியாகும் பறவையினத்தில் முதலிடம் வகுப்பதே, இந்த பென்குயின்களென்பது வருந்தமான செய்தி!//
Deleteஆம் வருத்தப்படும் செய்திதான். யோகன் சார் அழகான விளக்கம் கொடுத்திருக்கீங்க ரொம்ப நன்றிங்க.
ஆண்கள் பொல்லாதவர்களா என்ற இடுகையை எழுதியது கோபால் ஸாரின் பெட்டர் ஹாஃப்:-)))))
ReplyDeleteநன்றி துளசி மேடம், தெரியாம போச்சே...
Deleteஅறிந்துகொண்டேன்
ReplyDeleteநல்ல தகவல்..
ReplyDeleteநன்றி!
பொறுப்புள்ள அப்பா.... விலங்குகளில் இது அரிது.......!!
ReplyDelete