பிரபஞ்சம் 14.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பெரு வெடிப்பின் [BIG BANG ] மூலம் ஏற்பட்டது என்று அறிவியல் பூர்வமாக கணித்துள்ளார்கள். இதற்கு ஒரு பெரிய தியரியே உண்டு.
இந்த பெரு வெடிப்பினால் வெளியான ஒளியை காஸ்மிக் மைக்ரோவேவ் பின்புலம் [ cosmic microwave background - CMB ] என குறிப்பிடுகிறார்கள் அந்த ஒளி தோற்றத்தை தொலைநோக்கியால் இன்றும் நாம் காண முடியும்.
இதற்கென 1990ல் காஸ்மிக் பேக்ரவுண்ட் எக்ஸ்புளோரர் என்ற செயற்கை கோள் ஏவப்பட்டது. இது அளித்த தகவலின் படி CMB அகிலம் முழுவதும் சமச்சீராக நீக்கமர பரவியுள்ளது நிரூபிக்கப்பட்டது.
இந்த பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருப்பவை நட்சத்திரங்கள். நமது சூரியன் இந்த நட்சத்திரங்களில் ஒன்று. இது மற்ற நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமானதே என்ன ஒப்பீடு ஒரு நட்சத்திரதின் பிரகாசம், பொருண்மை(மாஸ்), ஈர்ப்புத்தன்மை, அது சுற்றி வரும் நட்சத்திரகூட்டம் இவைகளை வைத்து தரம் பிரிப்பார்கள்.
ஒரு நட்சத்திரமானது ஒன்றுமில்லாத நிலையில் இருந்து, அண்ட வெளியுள்ள வாயுக்கள் மற்றும் தூசு அயனிகளுடன் மின்னூட்டம் பெற்று ஒன்றுடன் ஒன்று மோதல் மற்றும் அணு பிளவு நடந்து பெருக்கமுற்று ஒரு மாபெரும் சக்தியாக உருப்பெற்று பெரும் சூறாவளியாக சுழன்று பிறப்பெடுக்க 10000 முதல் 10 இலட்சம் ஆண்டுகள் ஆகும்.
நட்சத்திரம் உருவாக மூலம் ஈர்ப்பு சக்தியும் அழுத்தமும் அவசியம்.
100 ஒளி ஆண்டு தூரமுடைய விட்டத்தை எடுத்துக்கொண்டால் அதில் சாராசரியாக 5 லட்சம் நட்சத்திரங்கள் இருக்கும்.
சரி ஒளியாண்டு என்பது என்ன ?
இதற்கு நாம் சூரியனில் இருந்து ஆரம்பிக்கலாம். சூரியனுடைய ஒளிகீற்றானது பூமியை அடைய சுமார் எட்டு நிமிடங்கள் ஆகிறது. அப்படியானால் இந்த நொடியில் நாம் பார்த்த சூரியனின் பிம்பம் இப்போது இருந்தது அல்ல 8 நிமிடத்திற்கு முன்பு இருந்தது என்ற முடிவிற்கு வரலாம்.
உதாரணமாக ஒரு நட்சத்திரம் 5 ஒளியாண்டு தொலைவில் உள்ளது எனும்போது அது 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தோற்றம் எனப் பொருள் கொள்ளலாம் இன்று அதன் தோற்றம் என்பது 5ஆண்டுகள் கழித்தே நாம் காணமுடியும் [ விளங்கிடும்..?]
ஆனா சுமாரா ஒரு நட்சத்திரம் 5 ஒளியாண்டு தொலைவில் எல்லாம் இல்லை. 5 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும்.
நம்ம கிட்ட இருக்கிற தொலைநோக்கியில் 14.3 பில்லியன் ஒளியாண்டு வரைக்குமான காட்சியை தான் பார்க்கமுடியும் அதுக்கு அப்பால் இருப்பதை பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை ஒரு விண்வெளி அளவு [Austronomical Unit ] 1AU என்ற அலகால் குறிப்பிடுகிறார்கள். இந்த தூரத்தில் இருக்கும் ஒரு கிரகம் நம் பூமியை போன்று தகவமைவுடன் இருக்கும் என்ற யூகமும் உண்டு. இது போல பூமியை போன்றே 156 இருக்குன்னு கலிபோர்னியா கோள் ஆராய்சியில் கணக்கெடுத்திருக்காங்க.
நட்சத்திரங்கள் பற்றிய ஒரு பதிவு :
நட்சத்திர குள்ளர்கள் பற்றிய விண்வெளி ஆய்வு
===========================================================
பூமி சுற்றும் வேகம் என்ன ?
நம்பூமி மணிக்கு 2000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.
===========================================================
//நம்பூமி மணிக்கு 2000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.//
ReplyDeleteண்ணாங்,, தலை சுத்துதுங்கன்னா..
பிரபஞ்சம் - குறிப்புகள் அறிந்து கொண்டேன்
ReplyDeleteமனசாட்சிக்கு எனது நன்றிகள்.
Deleteஒளி ஆண்டுகள் பற்றி வித்தியாசமா விளக்கம்! தொடருங்கள் நண்பரே!
ReplyDeleteநன்றி நண்பரே வித்தியாசமான தகவல்களை தருவதற்கே எப்போது முயற்சிக்கிறேன். மேலும் வானியல் குறித்து நான் அறிந்து கொண்ட தகவல்களில் சுவாரஸ்யமானவைகளை பதிவாக்கம் செய்கிறேன்.
Deleteதொடருங்கள் கூடவே ஸ்குரியோசிட்டி பற்றி சிறிது எழுதலாமே
ReplyDeleteவாங்க சிவசங்கர் சார். க்யூரியாசிட்டி பற்றிய "செவ்வாயில் மனிதன்" எனும் சமீபத்திய பதிவில் காணலாம்.
Deleteவிரிவாக சொல்லி உள்ளீர்கள்...
ReplyDeleteவிளக்கமும் அருமை...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி...
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !
நன்றி தனபாலன் சார். வானியல் குறித்த சுவாரசியமான தகவல்களை தர காத்திருக்கிறேன்.
Deleteவியத்தகு அறிவியல் உண்மைகள்! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html
அருமையான பதிவு..
ReplyDeleteஒளி ஆண்டுகளை மிக எளிதாக விளக்கி இருக்கிறீர்கள்!!
//நம்ம கிட்ட இருக்கிற தொலைநோக்கியில் 14.3 பில்லியன் ஒளியாண்டு வரைக்குமான காட்சியை தான் பார்க்கமுடியும் அதுக்கு அப்பால் இருப்பதை பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க.//
இது ஒரு கற்பிதம்..
பூமியில் இருந்து எந்த திசையிலும் நம்மால் 46 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தைப் பார்க்க முடியும்!!