[ மு.கு : இந்த பதிவில் பலவிதமான சிந்தனை ஓட்டமிருக்கும் நீங்கள் எதை கையில் எடுக்க வில்லை என்றாலும் பொருமையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ]
அவசரமான உலகம் இது. "எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு சீக்கிரம் சொல்லுங்க" என்று வீட்டு பாஸோ, நண்பனோ, ஏன் அலுவலக பாஸோ உங்களிடம் சொல்லியிருக்கலாம். அவங்க கிட்ட நீங்க ஏன் 1089 வேலை இருக்காதோ என்று சொல்ல வில்லை என்றாலும் மனதில் நினைத்திருக்கலாம். இந்த 1089 ஒரு மந்திர எண் அல்லது ஸ்பெஷல் நம்பர் எப்படி ?
ஒரு மூன்று டிஜிட் எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். மூன்றும் வெவ்வேறு எண்ணாக இருக்கவேண்டும். அதை அப்படியே திருப்பி போட்டு கழிக்கவும் கிடைத்த எண்ணை மறுபடியும் திருப்பி போட்டு கூட்டவும். விடை என்ன ?
விளக்கம் :
நான் நினைத்த எண் 301 திருப்பி போட்டால் 103 இப்போது 301 - 103 = 198
198 திருப்பி எழுதினால் 891 இந்த இரண்டையும் கூட்ட 198+891 = 1089
இன்னும், 1089 ல் 10 மற்றும் 89 இடையில் 9 போட்டு கொள்ளுங்கள் 10989
இதை 9 ஆல் பெருக்க கிடைப்பது 98901 அதாவது முதல் நம்பரின் திருப்புதல். இது போல 109999989 ஐ 9 ஆல் பெருக்கினாலும் விடை அந்த நம்பரின் திருப்புதல் கிடைக்கும்.
மேலே சொன்ன 1089க்கும் விண்ணியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் 108 என்ற எண்ணிற்கும் விண்ணியலுக்கும் ஏன் வேத கால சாத்திரங்களுக்கும், ஜோதிடத்திற்கும், சமய ஆகம விதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது.
[ பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது இது ஆம்புலன்ஸ் நம்பர் தானே ? ]
விண்ணியலை விஞ்ஞான கலைகளின் ராணி [ Quien of sciences ] என்று ஏன் சொல்லுகிறோம் ?இது பல துறைகளின் கூட்டு, வானியல், வான சாஸ்திரம், புவியியல், புள்ளியியல், தாவரவியல்,உயிரியல், பெளதிகம், ரசாயணம், கணிதவியல்,கட்டிடக்கலை.. இன்னும் பல அறிவியற் துறைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
மேலே சொன்ன பல இயல்களிலும் கணிதவியல் இல்லை என்றால் விண்ணியல் இல்லை என்றே சொல்லலாம்.
விண்ணியல் பற்றி சொல்லும் போது எதுக்கு எண்ணியல் என்று நீங்கள் கேட்கலாம் இரண்டிற்கும் சம்பந்தம் உண்டு. பழங்காலத்தில் இருந்த விண்ணியலை எகிப்தியர், கிரேக்கர்கள்,பாபிலோனியர்,இந்தியர், சீனர் பலரும் இந்த துறையில் ஈடு பட்டிருக்கின்றனர், என்றாலும் இந்திய வான சாஸ்திரத்தின் அணுகுமுறை மற்றும் ஆராய்சி வேறுப்பட்டது என்று சொல்லலாம்.
ஒரு மனிதனின் இரத்த மூலக்கூறுகளில் நட்சத்திர அணுக்கள் பரவியுள்ளது. குழந்தை பிறக்கும் போது அதன் பிறப்பு அல்லது சுவாசத்தை எந்த நொடியில் தொடங்குகிறது எந்த இடத்தில் என்பதை அடிப்படையாக கொண்டே குழந்தையின் ஜோதிடம் கணிக்கப் படுகிறது.
இந்திய ஜோதிடம் கணக்கீட்டு அட்டவணைகளால் உருவாக்கப்பட்ட அடித்தளம்.
நண்பர்களில் ஒருவனை திட்டுவதற்கு " அவன் சுத்த பஞ்சாங்கம்டா " என்பார்கள் அப்படிப்பட்டவன் ஒரு ஒழுங்கில் சென்று கொண்டிருப்பவன் என்பது பொருள்.
பஞ்சாங்கத்தில் ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் (இது பழையது) இதிலுள்ள பல பிழைகள் நீக்கி உருவாக்கப்பட்டது திரு கணித பஞ்சாங்கம். பஞ்சாங்கங்கள் 18 விதமான சித்தாங்கங்களை உள்ளடக்கியுள்ளது. பஞ்ச அங்கங்கள் கொண்டது. ஐந்து அங்ககள் 1. தி.தி. 2.வாரம் 3. நட்சத்திரம். 4.யோகம். 5. கரணம்.
திதிகள் சூரியன் சந்திரன் இவற்றிடையேயான தொலைவுகள் மற்றும் கோணங்கள் தான் அடிப்படை.
1 நாழிகை - 60 வினாழிகை, 2-2/1 வினாழிகை - 1 நிமிடம், 2-1/2 நாழிகை-1 மணி, 60 நாழிகை - 1 நாள்
108 என்ற எண்ணின் சிறப்புகள் :
"அஷ்டோத்ர சதா நாமவளி" என்பவை இந்து கடவுளர்களின் ஸ்தோத்திரங்களின் பெயர்கள் 108.
முனிவர்களும் ஞானிகளும் தங்கள் உள்ளுணர்வின் மூலமே பல தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சர்யமானது.
நம் உடலில் 108 சூட்சுமங்கள் (நெர்வ் பாய்ன்ட்ஸ்) இருக்கின்றன
துணை உணர்வு மற்றும் எண்ணங்கள் ஒவ்வொரு மனித உடலின் சிக்கலான கூறுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. "குண்டலினி" என்பதன் அடிப்படை. இந்த மர்ம நாடி 9 முக்கிய உடல் பாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
ஹிந்து இதிகாசங்களில் திருப்பாற்கடல் இது "மில்கி வே" தான் இதன் ஒருபுரம் 54 தேவர்களும் மறுபுறம் 54 அசுரர்களும் ஒரு பெரிய பாம்பிணை கயிராகவும் மேரு மலையை மத்தாகவும் கொண்டு அமுதம் பெற வேண்டி கடைந்ததாக சொல்லப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஒப்புமைப்படுத்த விளக்கப்பட்டது. இரண்டு 54 ன் கூட்டு தொகை 108.
108 திவ்விய தேசங்கள் மகா விஷ்ணுவிற்கு உள்ளது.
உத்திராட்ச மற்றும் துளசி மணி மாலை, கிருத்துவர்களின் புனிதஜெப மாலை இவைகளில் மணிகளின் எண்ணிக்கை 108.
உபநிஷ்த்துகள் 108. புத்தர் கோயில்களில் கற்பகிரஹகத்திற்கு செல்ல 108 படிகளை கடக்க வேண்டும். புத்த விகாரங்களில் 108 சிறிய புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டிற்கு 108 முறை மணிகளை ஒலிக்கிறார்கள்.
இஸ்லாத்தில் 108 என்பது கடவுளை குறிக்கும்.
இந்திய கலாச்சாரத்தில் 108 நாட்டிய வகைகள் உண்டு.
108 உணர்சிகளில் 36 உணர்ச்சிகள் நிகழ்காலத்திலும், 36 உணர்ச்சிகள் கடந்த காலத்திலும், 36 உணர்ச்சிகள் எதிர் காலத்திலும் இருக்கிறதாம்.
ஜோதிடத்தில் நிலவுக்கு வெள்ளி ஒப்பீடு செய்யப்படுகிறது இதன் அணு நிறை 108.
நிலவின் சுற்றுப் பாதையில் 27 நட்சத்திர மண்டலங்களோடு தொடர்பு படுத்தப்படுகிறது. நிலவு பூமியை ஒரு சுற்று முடிக்க 27 - 1/3 நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு நட்சத்திர தொகுப்பில் சஞ்சரிக்கும்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம் என்றால் 27 நட்சத்திரத்திற்கு மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் என வகைப்படுத்தப்பட்டது இந்திய ஜோதிடம்.
நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = நிலவின் விட்டம் போல் 108 மடங்கு.
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = பூமியின் விட்டம் போல் 108 மடங்கு
சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தில் 108 மடங்கு.
[சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள வரையறுக்கப்பட்ட தொலைவு
149,597,870,691 kms இதை சூரியனின் விட்டத்தால் அதாவது 1,392,000 Kms ஆல் வகுத்தால் கிடைப்பது 107.46973469181034482758620689654. ]
இது போல் பல கிரகங்கள், நட்சத்திரங்கள் உடுமண்டலங்கள், அனைத்தும் இந்த கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது இதை நான் சொல்ல வில்லை "கார்ல் சகன்" என்ற அறிஞர் சொல்லியிருக்கிறார்.
ஒரு நாளுக்கு மனிதனின் சுவாசங்களின் எண்ணிக்கை 21600 இதில் 10800 சூரிய சக்தி, 10800 நிலவின் சக்தியாகவும் சொல்லப்படுகிறது. தியானமுறையில் ப்ரணாயாமம் கற்பிக்கப்படுகிறது இதில் மூச்சு காற்றை 108 சுவாசங்கள் என்பது ஒரு நாளுக்கு தான். [10800 divided by 100 ]
வானவில்லின் நிறம் ஏழு, சித்தாந்த வேதங்களில் ஏழு உலகம் சொல்லப்படுகிறது இந்த ஏழு உலகத்தையும் ஏழு பரிமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முப்பரிமாணம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். சரி அந்த ஏழு உலகங்கள் பூமியையும் சேர்த்து, புவர், சொர்க்க, மகர், மனோ, புத்தி, ஆனந்த லோகம்.
ஏழின் மகத்துவத்தை திருமூலரின் பல பாடல்களில் எழுதிவைத்துள்ளார். ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டாக காணலாம்.
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே
[இங்கு விண் அறிவாளர் யார் என்றால் விஞ்ஞானிகள் ]
kalakkal
ReplyDeleteநன்றி சூர்யா...
Deletespeechless post, வேறவொன்னும் சொல்ல தோணலை!
ReplyDeleteஏதாவது கருத்து சொல்லுங்க...நன்றி நண்பரே.
Deleteகேள்விப்படாத சில தகவல்களை கண்டேன்.
ReplyDeleteநன்றி வடுவூர் குமார் சார்.
Deleteமிகவும் சிறப்பான தகவல்கள்! அருமையான பகிர்வு! வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
சிறப்பான பகிர்வு...
ReplyDeleteதிருமூலரின் பாட்டை சேர்த்தது மிகவும் சிறப்பு...
நன்றி... வாழ்த்துக்கள்...
அடேங்கப்பா... என் சிற்றறிவுக்கு எட்டாத அளவுக்கு பல விஷயங்கள் இருக்குது. பொறுமையாப் படிச்சு முழுசா உணர்ந்துட்டு கருத்து சொல்றேன். அருமையான எழுத்துக்கு என்னோட வாழ்த்தை மட்டும் இப்பவே சொல்லிக்கறேன்.
ReplyDelete\\சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள வரையறுக்கப்பட்ட தொலைவு
ReplyDelete149,597,870,691 kms இதை பூமியின் விட்டத்தால் அதாவது 1,392,000 Kms ஆல் வகுத்தால் கிடைப்பது 107.46973469181034482758620689654. \\ பூமியின் விட்டம் 12,000 பன்னிரெண்டாயிரம் கி.மீட்டர்கள் மட்டுமே கலாகுமாரன்!!
சூரியனின் விட்டத்தில் என இருக்க வேண்டும் திருத்தி விட்டேன். சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி ஜெயதேவ் சார்.
Delete