எத்தகைய நாகரீக மக்கள் ”மேக்கப்” முதலில் பயன்படுத்தி இருப்பார்கள் ?
நாகரீக ( ! ) ஹோமோசாபியன்ஸ் (Homo sapiens) முதன் முதலில் மேக்கப் என்ற ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம். சுமார் 75000 வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க ப்ளூம்பாஸ் குகை சித்திரங்களில் (ochre * ) இயற்கையில் கிடைக்கும் இரும்பு ஆக்ஸைடு பிக்மெண்ட் நிறங்கள் பயன்படுத்தப் பட்டு இருப்பதை வைத்து அப்போதே மேக்கப் என்ற சமாச்சாரம் தோன்றி இருக்கலாம் என கருதலாம். அதை நாகரீக வாழ்க்கை என ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில், ஃபிரான்ஸ், ஸ்பெயின் தேசங்களில் கிடைக்கப் பெற்ற சித்திரங்களில் வேலைப்பாடுகளில் அதே போல இரும்பு ஆக்ஸைடு வண்ணங்கள் பயன் படுத்தப் பட்டு இருக்கின்றன. இது சுமார் 20000 வருடங்களுக்கு முன்.
இன்னும் கிட்ட என்னால், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர் ஆரஞ்ச் வண்ணக் கலவை, கண் மை, மருதாணி இவைகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
சரி அப்படியாயின் நமது இதிகாச காலத்திலேயே முக அழகு வசீகரம் பற்றியெல்லாம் கதை கதையாக படித்திருக்கிறோம். தமிழர்களும் இத்தகைய முக அழகு கலையில் சிறந்து விளங்கி இருப்பர் என்று கருத இடமுண்டு.
*Ochre = Any of various earths containing silica and alumina and ferric oxide; used as a pigment
புதிர்
ஒருவர் வெளியூருக்கு வேலை விசயமாக போக வேண்டி இருந்ததால், இரவில் காரை அவரே ஓட்டிச் சென்றார். அசதி காரணமாக வழியில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு லாட்ஜ் கிடைக்குமா என பார்த்தார் அந்த ஊரில் லாட்ஜ் இல்லை. பெட்டி கடைகாரரின் உதவியால் ஒரு இடம் கிடைக்க தூங்கிவிட்டு அதிகாலை காரை பார்த்தால் அதிர்ச்சி , காரில் இருந்து ஒரு டயர் திருடு போயிருந்தது. நல்ல வேலையாக அவரிடம் ஸ்டெப்னி ( டயர் ) இருந்தது ஆனால் அதுக்கு போல்ட் நட் இல்லை. பக்கத்தில் எங்கு தேடியும் டயருக்கான போல்ட் நட் கிடைக்கல. வயசானவர் சொன்ன யோசனைப் படி டயரை மாட்டி காரை ஓட்டி சென்றார் எப்படி ?
எப்படி ? பதில் பதிவின் இறுதியில்.
பைசா சாய் கோபுரம் இன்னும் சாய்ந்து வருகிறதா ?
1173 முதல் அடித்தளமிட்டு கட்டப்பட்ட இந்த கோபுரம் இரண்டு அடுக்குகள் கட்டப்பட்ட நிலையிலேயே நிலை சாய்ந்திருக்கிறது.
சாய்மானத்தின் காரணமாக அதற்குமேல் கட்டப்பட்ட தளங்கள் (1178) சாய்வுக்கு எதிரான நிலையில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அது அமைந்துள்ள நில அமைவே அது மேன் மேலும் சாயத்தொடங்கியது. அதன் பிறகு 200 ஆண்டுகள் கழிந்து அது சாய்ந்து விழுந்துவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதன் அடித்தளம் உறுதிப் படுத்தப் பட்டது.
அதன்பிறகு 1990, 2001, 2008 ஆண்டுகளில் பல கட்ட பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் அடித்தள மண் (முக்கால் பாகம்) வெளியே எடுக்கப் பட்டு நிலத்தடி கடினப் படுத்தப் பட்டு கட்டிடத்தின் சாய்வு 3.97 டிகிரிகள் உயர்த்தப்பட்டதாகவும், கோபுரத்தின் சாய்வை தடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏன் வலது கைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் ?
பெரும்பாளும் 90 % பேர் வலதுகைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். பிறக்கும் பத்தில் ஒன்பது குழந்தைகள் வலது பெருவிரலை தான் சூப்புகின்றன.
இடது அரைவட்ட மூளை பகுதி நமது வலது கைகால் உடல் இயங்கத்தை கட்டுப் படுத்துகிறது. அதே பகுதியில் தான் மொழி சம்பந்தமான சங்கதிகளும் மூளை செல்களால் இயக்கப் படுகின்றன. மொழியோடு கை எழுத்தும் வலது கை இயக்கத்தில் வந்துவிடுகிறது. ஆனால் மொழி ஏன் இடது பாக மூளைப் பகுதியிலே செயல் பாட்டில் இருக்கு ? இதற்கு காரணம் மில்லியன் ஆண்டுகால மனித மரபு கூறு.
விஞ்ஞானிகள், 2013 ல் இது குறித்த ஜெனிடிக் ஆய்வில் PCSK6 ஜீன் கூறு கை பழக்கத்தை மனித உடலில் கடத்தி வருகிறது என தெரிந்து கொண்டார்கள். ஆனால் 4000 இரட்டை குழந்தைகள் அவற்றின் கை பழக்கங்களை ஆய்வு செய்ததில் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. ( ??)
கான்சாஸ் பல்கலை கழகத்தில் கைபழக்கம் பற்றிய ஒரு ஆய்வில் அக்கால மனிதர்களின் கை பழக்கம் பெரும்பாளும் வலதாக இருக்க கண்டனர். மண்டை ஓட்டு எலும்புகளில் வலது தாடைப் பற்கள் தேய்மானத்தை வைத்து முடிவு செய்தனர்.
ஆனால் ஒரு மனிதனின் கைப் பழக்கம் என்பது ஜீனில் உள்ளபடி உறுதி செய்யப்படுகிறது என்பது மட்டும் புலப்படுகிறது.
க்யூப் வடிவதர்பூசணி எப்படி விளையுது ?
சின்னதா வளரும் போதே படத்தில் இருக்கும் பெட்டியில், காம்புக்கு துளை விட்டு வளர்ப்பாங்க. அதே போல இதய வடிவ பெட்டியா இருந்தா அதே வடிவில் கோசாப் பழம் ரெடி
2001 ல ஜப்பான் இதை ரெஜிஸ்டர் செஞ்சதால 1st invention அவங்க தான். ஆன அதுக்கு பல வருசம் முன்னாடியே இது உருவாக்கப் பட்டுதுன்னு சொல்றாங்க.
எப்படி இந்த ஐடியான்னா ஈஸியா கேரி பன்ன வசதியா இருக்குமேன்ற எண்ணம் தான். ரெகுலர் விலை கம்மி இதுக்கு விலை அதிகம்.
Labels : கை பழக்கம், பைசா சாய் கோபுரம், ஆதிகால மேக்கப், முக அழகு, துணுக்கு
விடை ஊகிக்க முடியவில்லை.
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
தகவல்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteக்யூப் வடிவ தர்பூசணி வியப்பு...
ReplyDeleteஒவ்வொரு டயரிலிருந்தும் 1 போல்ட் (யம்மாடி...! எவ்வளவு சிறிய படம்)