வெறும் கண்ணால் எத்தனை கேலக்ஸிகளை நம்மால் பார்க்க முடியும் ?
மேகக் கூட்டம் இல்லா நிலையில் விண்மீன் கூட்டம் அல்லது விண்மீன் திரள் நம் பார்வைக்கு எட்டுமா என்றால் எட்டுகிறது ஆனால் சற்று கூர்ந்த கவனிப்பு தேவைப்படும். சரி அப்படியானால் எத்தனை கேலக்ஸிகளை நம்மால் கவனிக்க (அ) அவதானிக்க முடியும் என்றால் நம் சூரிய மண்டலம் இருக்கும் கேலக்ஸி அதாவது பால்வெளி மண்டலம் மற்றும் 3 கேலக்ஸிகளை பார்க்கமுடியும். அதிலும் சிக்கல் என்னவென்றால் 2 கேலக்ஸிகள் வட கோளார்த்தப் பகுதியிலும், 2 தென் கோளார்த்த பகுதியிலும் தெரியும்.
வட கோளார்த்தப் பகுதியில் பால்வெளி மண்டலமும்(Milky Way ), ஆன்ரோமெடா Andromeda (M31), தெரியும் தென் கோளார்த்தப் பகுதியில் மெகா லித்திக் க்ளவுடுகள் சின்னதும், பெரிதும்( Magellanic Clouds.) தெரியும்.
M33 ( in Triangulum), M81 (in Ursa Major) மற்றும் M83 (in Hydra) இவைகள் தெரியும் என்கிறார்கள் ஆனால் இவை தெரியுமெ என நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் எந்த ஒரு கேலக்ஸியும் வெறும் கண்ணால் முழுமையாக தெரியாது. (பார்க்கவும் முடியாது !)
ஒரு கேலக்ஸியை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க இயலும். இந்த பிரபஞ்சத்தில் 100 பில்லியன் கேலக்ஸிகள் இருப்பதாக ஒரு கணக்கீடு உண்டு. ஒவ்வொரு கேலக்ஸியும் 10 முதல் 100 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
வெறும் கண்ணால் எத்தனை நட்சத்திரங்கள் பார்க்க முடியும் என்றால், 10000 ஆயிரம் என்கிறார்கள் அதுவும் தவறு 2,873 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்கமுடியும் (நீங்க வேனா எண்ணிப் பார்த்துக்கோங்க....அவ்..)
**GALAXY - விண்மீன் மண்டலம்/விண்மீன் கூட்டம்/விண்மீன் திரள்
நிலவில் இருந்து பார்க்கும் போது பூமியில் மனிதனால் கட்டப்பட்ட சீன மதில் சுவர் தெரியுமாமே ?
வானத்தில் இருந்து பார்த்தால் அதாவது சுமார் 100 கி.மீ தூரத்தில் இருந்து பூமியின் கட்டிடங்கள் தெரியும் அதற்குமேல் உயரே சென்றால் தெரிய வாய்ப்பு இல்லை. நிலா பூமியில் இருந்து 4,00,000 கி.மீ தொலைவில் இருக்கு. அங்கிருந்து நிச்சயமாக சீன மதில் சுவர் தெரிய வாய்ப்பே இல்லை தானே.
கண்ணாடியை சீனர்கள் கண்டுபிடிச்சாங்களா ?
கண்ணாடி போன்ற பீங்கான் பொருள் ஹான் வம்சத்து காலத்தில் சீனாவில் இருந்து இருக்கு அதாவது இந்த ஆண்டுகளில்...(206 BC–AD 220) ஆனா அதுக்கு முன்னாடியே 1350 BC ல் எகிப்தில் கண்ணாடி பொருட்கள்,கண்கவரும் வண்ண கண்ணாடி அணிகலன்கள் இருந்து இருக்கு.
நமது சூரிய குடும்பத்தின் உயரமான மலைச்சிகரம் எந்த கோளில் உள்ளது?
"ஒலம்பஸ் மான்ஸ் " என்று செல்லமாக அழைக்கப்படும் ஒலம்பஸ் எரிமலை சிகரம் செவ்வாய் கிரகத்தில் இருக்கு. இதன் உயரம் சுமார் 22 கிலோ மீட்டர்கள், சுற்றளவு சுமார் 624 கி.மீ கள், எவரெஸ்டின் உயரம் 8848 மீட்டர்கள் அதை விட மூன்று மடங்கு உயரம் உள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எரிமலை சீற்றம் இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.
அறை வெப்பத்திலேயே உருகிவிடும் உலோகம் இருக்கிறதா ?
"Gallium"
பாதரசம் (mercury) காலியம்(மென் தங்கம்) ( gallium ), சீசியம்( caesium), மற்றும் ப்ரான்சியம் ( francium) இந்த உலோகங்களை சொல்லலாம். கேலியம் மைக்ரோ சிப்புகளிலும், டிவிடி ப்ளேயர்களிலும், லேசர் லைட் எந்திரத்திலும் பயன் படுத்தப் படுகிறது.
சீசியம் அணு கடிகாரத்தில் உபயோகிக்கப் படுகிறது. சீசியம் என்றாலே ”ஆகாயநீலம்” அதே போல அந்த நிறத்தை வெளிப்படுத்தும். தண்ணீருடன் எதிர் வினை (explodes)புரியக்க்கூடியது.
ப்ரான்சியம் ரேடியோ கதிர் தன்மை கொண்ட இயற்கையில் கிடைக்கும் தனிம வரிசையில் கடைசியில் கண்டுபிடிக்கப் பட்டது.
மழைபெய்யும் போது மண்வாசனையை நாம் நுகர்கிறோம் அதுபோல நிலவின் புழுதி வாசம் எப்படி இருக்கும் ?
நிலவின் புழுதி வெடி மருந்து (Gun powder) வாசனை அடிக்கிறதாம்.
பூமியை ஒரே ஒரு துணைக்கோள் தான் அதாவது நிலா தான் சுற்றிவருகிறதா ?
பூமியின் துணைக்கோள் நிலா தான் ஆனால் அதே போல 7 அஸ்ட்ராய்டுகளும் பூமியோடு சேர்ந்து சுற்றி வருகிறதாம். (the snappily named Cruithne ,2000 PH5, 2000 WN10, 2002 AA29, 2003 YN107 and 2004 GU9) கார் பந்தயத்தில் வெவ்வேறு டிராக்கில் ஒரே வேகத்தில் நீள் வட்டமாக சுற்றும் கார்களைப் போல. ஆனால் எவ்வளவு பெரிய அஸ்ட்ராய்டாக இருந்தாலும் அதை கோள் என சொல்வது இல்லை.
நம் சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் இருக்கா இல்லையா?
எட்டு என்று தான் சொல்ல வேண்டும். 2006 ஆகஸ்டில் கூடிய அஸ்ட்ரானாமிகல் கூட்டமைப்பு இதைத்தான் உறுதி செய்தது.
காற்றில் கலந்துள்ள முக்கிய மூலங்கள் எவை எவை ?
ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைட், ஹைட்ரஜன், நைட்ரஜன் இந்த நான்கில் மிக முக்கியமானது நைட்ரஜன் தான். 78 சதவீதம் பூமியில் நிறைந்துள்ளது. 21 சதவீதத்திற்கும் குறைவானது ஆக்ஸிஜன். 300 ல் ஒரு சதவீதம் கார்பன் டை ஆக்ஸைட். இந்த பூமி உருவாகும் போது எரிமலை வெடிப்புகளில் அதிக அளவில் வெளியானது நைட்ரஜன். ஹைட்ரஜன் ஹீலியம் இவைகளை காட்டிலும் ஹெவியானது. புவியின் காற்று மண்டலத்தில் விரவி தங்கி விட்டது என்று சொல்லப்படுகிறது. 76 கிலோ (கி) உள்ள மனிதனில் சுமார் 1 கிலோ (கி) நைட்ரஜன் இருக்கும் (தனிம வடிவில்). வானம் நீலநிறமாக தோற்றம் தருவதற்கும் நைட்ரஜன் ஒரு காரணம்.
கையால் ஒரு காகிதத்தை ஒன்றன் மேல் ஒன்றாக திரும்ப திரும்ப எவ்வளவு தடவை மடிக்க முடியும்?
பல பேர் இதை சோதித்தும் பார்த்து இருக்கலாம் A4 அளவு காகிதத்தை எடுத்து மடித்து பின் மடித்து பின் மடித்து இப்படியே செய்தால் 5 முறைக்கு மேல் அதை மடிக்க முடியாத கனம் ஆகிவிடும். (ஒவ்வொரு முறை மடிக்கும் போதும் அதன் தடிமன் கூடிக்கொண்டே போகும்)
டிசம்பர் 2001 ல் அமெரிக்க பள்ளி மாணவி ( Britney
Gallivan ) இதற்கான சூத்திரம் (பார்முலா ) ஒன்றை கண்டுபிடித்தார்.
W is the Width of the paper, L is the Length , t is the thickness, and n is the number of folds.
The first equation describes folding a piece of paper in half in
one direction and then the other, alternately; the second one describes folding it in one direction only
இதில் முதல் பார்முலா காகிதத்தை முதலில் பாதியாக மடிக்கிறோம் பின், பின் மடிக்கும் போது திசையை மாற்றி மாற்றி மடித்தால் ;
இரண்டாவது பார்முலா காகிதத்தை ஒரே மாதிரியாக மடித்தால் ;
பிரிட்டனி இதற்காக இரண்டு விதமான காகிதங்களை பயன் பயன்படுத்தினார் 1. மிக மெல்லிய தங்க தகடு (சதுர வடிவம்)
2. 4000 அடி நீளமான டாய்லட் பேப்பர்
தங்க காகிதத்தை ஒன்று விட்டு ஒன்று திசையில் (in alternate directions) ;
டாய்லட் பேப்பரை ஒரே திசையில் (நீளவாக்கில்) மடித்து காட்டினார். இந்த முறையில் 12 மடிப்புகளை மடித்துக் காட்டினார்.
ஆனால் இதே மாதிரி சாதாரண A4 அளவு பேப்பரை மடிக்க முடியவில்லை. (அதிகபட்சம் 5 மடிப்புகளையே மடிக்க முடியும்)
10 அடி நீள முள்ள மெல்லிய பேப்பரை எந்த கருவியையும் பயன் படுத்தாமல் அதிக பட்சம் ஒன்றன் மேல் ஒன்றாக 8 மடிப்புகளை மடிக்க முடியும்.
சுவாரஸ்யமான அறிவியல் துணுக்குகள்! ரசிக்க வைத்தன! நன்றி!
ReplyDeleteவிண்வெளி பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆவலா இருக்கு, ஆனா வாய்ப்பு கிட்ட மாட்டேன்கிறது. நகரங்களில் வானத்தை பாத்தா தெருவிளக்கு / மற்ற மின்விளக்குகள் வெளிச்சமே நிரம்பியுள்ளது. பால்வெளி மண்டலத்தைப் பார்க்கணும்னா அதிகாலையில் பார்க்கணுமாம், அது என்ன கணக்குன்னே தெரியலை.
ReplyDeleteவிண்வெளியில் இருந்து பார்த்தால் தெரியகூடிய மனிதனால் செய்யப் பட்ட ஒரு அமைப்பு சீனப் பெருஞ்சுவர்என்பார்கள். நம்மாட்களுக்கு விண்வெளி என்றால் அது நிலாவில் இருந்து என்று அர்த்தம் செய்து கொண்டுவிட்டார்கள். உண்மையில் தற்போது International Space Station 300 கி.மீ. உயரத்தில் உள்ளது, அங்கிருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் தெரியக்கூடும்.
நிலவின் மண்ணை மழையில் நுகர்ந்தது யாரோ? [அதுசரி நிலவில் மழை எங்கே பெய்தது?!!! அப்படியே பெய்தாலும் இவர்கள் போட்டிருக்கும் உடையில் அதை நுகர வழி எது??!!] நிலவிற்கு போனார்களா இல்லையா என்ற பெரும் சர்ச்சை, இதில் இருவர் சொல்வதும் உண்மை போலவே இருக்கிறது, குழப்பம் இன்னமும் தீரவில்லை.
காகிதத்தை மடிக்கும் விளையாட்டு சுவராஸ்யமானது, மடித்துப் பார்க்கிறேன்!!
நல்லவேளை எல்லாவற்றிக்கும் பதில் சொல்லி விட்டீர்கள்... நன்றி...
ReplyDeleteபேப்பர் மடித்தல் - இன்றைய மாணவர்களிடம் கேட்க வேண்டும்...!