- மாலை சூரியன் சுட்டெரிக்கும் தன் கோபக் கனல்களை சுருட்டிக் கொண்டிருந்தான் பால் வெள்ளை முகங்காட்டிச்சிறித்த நிலவின் அந்த அந்தி மாலைப்பொழுதில் ஓய்வாக பால்கனியில் அமர்ந்திருந்தேன்.
ஒரு திருமண வரவேற்பு நிகழ்விற்கு என் மனைவியும் மகளும் சென்றிருந்தார்கள்.
எதிரில் இருந்த அந்த சிறிய மரத்தில் இரு குருவிகள் கீச் கீச் என மாறி மாறி கூப்பிட்டுக் கொண்டிருந்தது, என் நினைவுகளை பின்னோக்கி தூண்டியது.
ஊரின் சந்தடிகள் சற்று குறைந்த தூரத்தில், பல வித மரங்களும், தென்னை மரங்களும், வாழைகளும், கரும்பு தோட்டங்களும் சூழ்ந்த ஒரு ரம்யமான சுழலில் ஆரம்பிக்கும் நிலத்தில் பலவித சிரமங்களுக்கிடையே என் தந்தை ஒரு சிறு இடத்தை வாங்கி போட்டார்.
அவர் மறைவுக்கு பின், அவரில்லாமல் அவரின் ஆசையை பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நானும் பலவித கஷ்டங்களின் இடையே ஏதோ ஒரு உந்துதலில் நமக்கும் ஒரு இனிமையான சொந்த இல்லம் வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் வீடு கட்ட ஆரம்பித்த அந்த பசுமையான நினைவுகள் என் மனதில் மின்னி மறைந்தது.
இது நடந்து நான்கைந்து ஆண்டுகள் இருக்கும். கட்டிய இந்த புது வீட்டிற்கு ஒரு வாரத்தில் வாடகை வீட்டை காலி செய்து சந்தோசத்துடன் குடி புகுந்திருந்தோம்.
என் மகளுக்கு அப்போது எட்டு வயதிருக்கும் அவளை ஒத்த வயதுடைய மனைவியின் அக்காளின் ஒரு சிறுமியும், மூன்று வயது குறைந்த மற்றொரு குழந்தையும் ஆக மூன்று பேரும் அந்த மாலை நேரத்தில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பா..., அப்பா சீக்கிறம் வாங்கப்பா.. என்ற மகளின் குறல் கேட்டது.
என்ன ஏதோ பிரச்சனையா? ... என்று நினைத்து வாசலில் எட்டிப்பார்த்தேன்.
மூவரும் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அருகில் சென்று பார்த்தால் ஒரு சிறு குருவி நிற்காமல் அமர்ந்திருந்தது கீச்... கீச் என கத்திய படி அந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தது.
அந்த குருவி பார்பதற்கு மிக அழகாக இருந்தது சிறிய குஞ்சு போல் தெரிந்தது. அதன் உச்சந்தலை முதல் வால் வரை கரு நீலமாகவும், கழுத்துப்பகுதியில் இருந்து உடல் முழுவதும் இள மஞ்சள் வண்ணமுமாக அந்தி மாலைப் பொழுதின் சூரிய ஒளியில் அதன் உடல் மின்னியது.
அந்த குருவிக்கு ஒரு காலில் எப்படியோ அடி பட்டிருக்கும் போல இருந்தது. அதனால் சரிவர நிற்க முடியவில்லை. சற்று நடுங்கியபடி, அது எங்களைப் பார்த்து கீச்... கீச்... என கத்தியது. அதற்கு எங்களை கண்டு எவ்வித அச்சமும் இல்லை. அடிபட்ட தால் தான் அந்த நடுக்கம்.
என் மகள் வீட்டின் உள்ளே ஓடிச் சென்று ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வந்தாள். அதை வாங்கி குருவியின் அருகில் வைத்தேன். சுற்றும் முற்றும் பார்த்து கீச்... கீச்... என கத்தியது.
குழந்தைகளை சற்று விலகி இருக்கச் செய்தேன். மெதுவாக அது தண்ணீர் குடித்ததை பார்த்து குதூகளித்தார்கள்.
சற்று நேரத்தில் சூரியன் தன் கிரணங்களை ஒழித்து வைத்துக் கொண்டான்.
இருளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்து.
சிறுமிகள் மூவரும் அப்பா, அப்பா ப்ளீஸ் பா.. இதை நாமளே வளர்க்கலாம்...என கெஞ்சினர். குருவி இப்போது எங்கும் செல்ல முடியாத நிலைமை. நம்மை நாடி அடைக்கலம் வந்துள்ளது. என்ன… இருந்தாலும் காலையில் பார்க்கலாம்...சரி என்று அதை மெதுவாக கையில் பிடித்தேன். எவ்வித எதிர்ப்பும் அது காட்டவில்லை.
ஒரு சிறிய மரப் பெட்டி வீட்டில் இருந்தது அதன் ஒரு பக்கம் நடுவில் உடைந்திருந்தது. பெட்டியை தலைகீழாக கவிழ்க்க சொன்னேன். இப்போது அது பார்க்க ஒரு கதவு இல்லாத வீடு போல் இருந்தது. சிற் சில இடங்களில் பெட்டி உடைந்திருந்ததால் காற்றோட்ட வசதி இருந்தது.
ஹாலின் ஒரு ஓரத்தில் பெட்டியை வைத்து அதனுள் பாதுகாப்பாக குருவியை வைத்தேன் அது ஒரு புறமாக தவ்வி ஒடுங்கிக்கொண்டது. ஒரு கைப்பிடி அரிசியை அதன் அருகில் வைத்தேன். அதை கண்டு கொள்ளவில்லை. நீர் நிறைந்த கிண்ணத்தை சற்று தள்ளி வைத்தேன். பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று சிறு புத்தகத்தை வாயில் போன்ற பகுதியில் வைத்து மறைத்தேன்.
இரவில் சாப்பிடும் போது மனைவி கேட்டாள் " இத வளர்க்க போறீங்களா? ..
“இல்லை...” என தலை அசைத்தேன்.
குழந்தைகள் விட வில்லை. " இல்ல நாம இத வளர்க்களாம்ப்பா...
அவர்களுக்கு தெளிவு படுத்தினேன். இதை வளர்க்க கூண்டு வேண்டும். அதில்லாம ஒரு குருவியை மட்டும் தனியா வளர்க்க மாட்டாங்க... சுதந்திரமா பறந்து திரியர அத கூண்டிலடைத்து வளர்ப்பது பாவம் இல்லையா..
ஏதேதோ பேசிப்பின் உறங்கச் சென்று விட்டோம்.
இரவின் சில நேரங்களில் அது கீச்..கீச்.. என கத்துவதும் சிறிது அமைதியாவதுமாக இருந்தது.
மீண்டும் காலையின் அதன் கீச் கீச் ஒலியைக் கேட்டு விழித்துக் கொண்டேன். நன்றாக விடிந்திருந்தது. சிறிது நேரத்தில் குழந்தைகளும் விழித்துக் கொண்டனர்.
குருவியை கையில் மெதுவாக எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றோம். அப்பொழுது தான் கவனித்தேன் அதையொத்த மற்றொரு குருவி ஒன்று கீரீச்.. கீரீச்... என கத்திய படி சுற்றி சுற்றி பறந்தது. அந்த குருவி இதன் துணையாக இருக்கவேண்டும். ஆணா? பெண்ணா? தெரியாது.
இதை குஞ்சு குருவி என ஆரம்பத்தில் நினைத்தேனே. இதன் வளர்ச்சியே அவ்வளவுதான் என புரிந்து கொண்டேன்.
மெதுவாக தரையில் விட்டேன். அது இப்போது சற்று சுதாரித்து நின்றது.
இதை பறக்க ஊக்குவிப்பது போல் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிச் சுற்றி இதன் இணை கீரீச்...கீரீச்.. என கத்தியபடி பறந்தது.
நான் மற்றும் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இந்த குருவியும் பறந்து தாழ்வான மரத்தின் கிளையில் சுதாரித்து அமர்ந்தது.
அது அங்கிருந்தே கீச்...கீச்.. என எங்களைப் பார்த்து கத்தியது. அது நன்றி சொல்வது போல இருந்தது.
இதற்கிடையில் புதரில் தவ்வி தவ்வி பறந்தது. அதனுடன் பாதுகாப்பாக இணைக்குருவியும் வழி நடத்திச் சென்றது. அதற்கு முழுவதும் குணமாக இன்னும் சில தினங்கள் ஆகும்.
ஒரு வித பரவச உணர்வு எனக்குள் ஏற்பட்டது. குழந்தைகள் குதூகளித்தனர் " போயிருச்சு....போயிருச்சு...என சப்பதமிட்டனர்.
அந்த சிறிய பறவைக்கு இவ்வளவு மன தைரியத்தை கொடுப்பது எது? தனது இனத்தை எப்படி பாது காக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னை தேர்த்திக் கொள்ளும் பக்குவம். போராடி வாழ வேண்டும் என்ற உந்துதல். இயற்கை எவ்வளவோ இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
இயந்திரத்தனமான இந்த உலகத்தில் சுயநலம் மிகுந்தவன் மனிதன் தான். எவ்வளவோ விசயங்களை கற்றுக்கொள்ளாமல் இருக்கிறான்.
*********************************************************************************
இக்கதையை அதீதம் தளத்தில் வெளியிட்டு சிறப்பித்த திரு.L K அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயற்கை எவ்வளவோ இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு பகிர்ந்துள்ளேன்
ReplyDeleteவருக!
http://blogintamil.blogspot.in/
விருந்தாளியை நல்ல முறையில் அனுப்பி வெச்சுட்டீங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நல்ல கதை, படித்ததும் எனது இளைமை கால புரியாத புதிரும் நிணைவிற்கு வந்தது. எங்கள் தந்தை PWDல் வேலையில் இருந்தார்கள். 2 அல்லது 3 வருடத்திற்கு ஒருமுறை வேறு ஊருக்கு மாற்றல் வரும். சேதி வருவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்னால் சிட்டு குருவி எங்கள் வீட்டில் கூடு கட்ட ஆரம்பித்து விடும். உடண் எங்கள் அம்மா நாம் சிட்டு குருவி போல் பறந்து விடப்போகிறோம் என்பார்கள். சரியாக மறுநாள் அப்பா transfer தகவலை தெரிவிப்பார்கள். அப்பா ஓய்வு பெற்று சொந்த வீடு போகும்வரை ஆறு முறை நான் பார்த்து இருக்கிறேன். எல்லா இனங்களுக்கும் ஒவ்வொரு அறிவு இருக்கிறது. எல்லா இனங்களும் தங்களுக்குள் பேச தெரிந்திந்தால் உலகம் வித்தியாசமாக இருந்திருக்கும்!
ReplyDeleteஎன் வீட்டில் சிட்டுக்குருவிக்கு கூடும் தண்ணீர் உணவும்
ReplyDelete