"வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்"
வொயுனிச் ஆச்சர்யங்களை உள்ளடக்கிய 600 வருட பழமையான படங்களுடன் கூடிய கையெழுத்து புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட இதில், உள்ளவைகளை இன்னதென்றே புரிந்து கொள்ள முடியாத மர்மம் மிக மிக நீண்ட ஆண்டுகளாக இருந்தது (இருந்து வருகிறது !)
பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைகழகத்தை சேர்ந்த மொழியியல் பேராசிரியரால் இப் புத்தகத்தில் உள்ள சில குறிப்புகள் விடுவிக்கப்பட்டது என்று சொல்லலாம். (இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை !! ) . 2012 ல் பிபிசியில் வெளியான செய்தியின் பின்னே புத்தகத்திலுள்ளவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"வொயுனிச் கையெழுத்து புத்தகம்" என இது அழைக்கப்பட்டாலும் இதை எழுதியவர் யார் ?
இந்த புத்தக எழுத்தாளரின் பெயரை விடுவிக்கவே பல வருடங்கள் ஆகியிருக்கிறது.
இறுதியாக அறியப்படும் புத்தக பரிமாற்றத்தின் படி, இப்புத்தகம் வில்ஃப்ரெட் வொயுனிச் ( Wilfrid Voynich ) எனும் புத்தக வியாபாரியால் 1912 ல் விலைக்கு வாங்கப் பட்டது. ஒரு பெரிய டிரங் பெட்டியில் கொண்டு வரப்பட்ட புத்தகங்களில் ஒன்று இந்த புத்தகம். தென் இத்தாலியில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. மேலும் இத்தாலியின் மறுமலர்ச்சி காலத்தை சேர்ந்ததாக இது இருக்கும் என்பது ( 1400 ) கார்பன் சோதனையில் உறுதிப் படுத்தப் பட்டது. வொயுனிச் மறைவு வரைக்கும் இப்புத்தகத்தின் எழுத்துக்களும் தகவல்களும் "அவரால்" தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.
இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இரகசியங்கள் இருக்கக்கூடும் ?
நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றிய தகவல்களும், தாவங்கள் பூக்கள் பற்றிய விவரங்களும், மனித உடல் கூறு (அனாடமி) சம்பந்தமான தகவல்களும், விண்ணியல், இந்த பிரபஞ்சம், பல்வேறு மூலிகைகள்,மருத்துவம்,மருந்துகள், ரெசிபிகள் பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.
இப்புத்தகத்தில் இருக்கும் சில விளக்கப்படங்கள் அனுமானதில் இல்லாமல் பார்த்து வரையப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மைக்ரோ பயாலாஜிகல் சம்பந்தமான படங்கள் (மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்கக்கூடிய இமேஜ்கள்) இந்த புத்தகத்தில் உள்ளன. அப்படியாயின் இப்புத்தகம் எழுதிய கால கட்டத்தில் மைக்ராஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததா ? கூட்டு நுண்ணோக்கியானது கலிலியோவால் 1625 ல் கண்டுபிடிக்கப்பட்டது.
There are other claims that the microscope and the telescope were invented by Roger Bacon in the 1200s but this is not substantiated. Giovanni Faber coined the name microscope for Galileo Galilei's compound microscope in 1625 (Galileo had called it the "occhiolino" or "little eye").
நம் கேளக்சியை பற்றிய தகவல்களும் இதில் இருக்கு.
" inside book view "
முதலாம் உலகப்போர் காலந்தொட்டு இப் புத்தக குறியீடுகளை விடுவிக்க பல ஆண்டுகள் பல்வேறு தரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் மொழியியல் வல்லுநர் (Stephen Bax) ஸ்டீபன் பக்ஸ் இப்புத்தக மர்மம் துலங்கப்பட்டதாக அறிவித்தார். முக்கியமாக அம்மொழி எழுத்துக்களை தம்மால் படிக்க முடிந்ததாக தெரிவித்தார். இவர் மட்டுமே புத்தக ரகசியத்தை விடுவித்தார் என்று சொல்வதற்கு இல்லை அவருக்கு முன் பல ஆராய்சியாளர்கள் புத்தக ரகசியத்தை விடுவிக்கப் பாடுபட்டனர்.
"க்ளிப்" என்று சொல்லக்கூடிய 1,70,000 குறியீட்டுப் படங்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது. (hieroglyphs )எகிப்திய உருவ (வடிவ) எழுத்துகளை கொண்டிருந்ததன. பல தகவல்களை உள்ளடக்கிய ஒரே குறியீடு ( "குழு குறியிடு") என்ற வகை பயன்படுத்தப் பட்டு உள்ளது.
[ உதாரணமாக Centaurea என்ற மலர் " kantairon " என்ற பெயரால் ஒரு குறியீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி - செந்தில்
ஜோக் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் பூவை... புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்பம் என்றும் சொல்லலாம் !! ]
Centaurea என்ற மலர் ( kantairon)
இதிலுள்ள மலர்களை பற்றிய விவரங்களே இதை எழுதியவர் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று இருப்பார் என்பது தெளிவு. ஒரு மலர் என்றால் அதை மேலோட்டமாக மட்டும் அல்லாமல் அதன் குறுக்குவெட்டு தோற்றம் அதன் உள்ளீட்டின் செல் பகுப்பாய்வு வரை விவரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இன்றைக்கு ப்ரூப் பார்த்து பிரின்ட் போடப்படும் புத்தகங்களே தப்பும் தவறுகளுமாயிருக்க கையால் எழுத்தப்பட்ட இந்த புத்தகத்தில் தவறுகள் இல்லை (அடித்தல் திருத்தல் கூட) என்பது ஆச்சர்யமானது.
இதில் பயன்படுத்தி இருக்கும் வண்ணங்கள் நிறம் மங்காமல் இருப்பது. பெரிய படங்கள் இப்புத்தகத்தில் பல சீரான மடிப்புகளுடன் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
இன்னும் இப்புத்தகத்தின் இரகசியங்களை விடுவிக்க பல்வேறு துறை வல்லுநர்களின் உதவியும் தேவைப்படுவதாக குறிப்பிடுகிறார் ஸ்டீபன் பக்ஸ் ( Code remained uncracked !! )
மேலும் சில தகவல்கள்
புத்தகத்தை எழுதியவர் (Roger Bacon )ரோஜர் பெகான்
காலம் 1214 - 1292 பிரத்தியேகமான மென்மையான ஆட்டு தோல் பேப்பர் போல பயன்படுத்தப் பட்டுள்ளது.
1586 ல் ரோமானிய பேரரசர் ருடால்ஃப் II இதை ரோஜர் பெகான் இடம் இருந்து 600 ட்யூகேட்ஸ் (சுமார் 2 லட்சம் பவுண்டுகள் அப்போதைய மதிப்பு ?? ) கொடுத்து பெற்றுக்கொண்டார்.
1912 ல் நியூயார்க்கை சேர்ந்த புத்தக டீலர் வில்ஃப்ரெட் வொயுனிச் கைக்கு வந்தது.
அதன் பின் இத்தாலிய புத்தக காப்பகத்தில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
1921 ல் பென்சில்வேனியா பல்கலைகழக பேராசிரியர் இப்புத்தகம் வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பெற்ற பக்கங்களும் படங்களும் இருப்பதாக கண்டறிந்து சொன்னார்.
1978 ல் இப்புத்தகத்தில் இருந்து போட்டோ நகல் வடிவில் The Voynich Manuscript: An Elegant Enigma எனும் பெயரில் Mary D’Imperio என்பவரால் (அல்லது குழுமத்தால்) பிரதி உருவாக்கப்பட்டது
2013 ல் டாக்டர் ரக் ( Dr. Gordon Rugg of Keele University ) என்பவர் புத்தகம் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட்டார்.
கலாகுமரன்,
ReplyDeleteநல்ல பகிர்வு!
இதே போல லெய்டன் ஜார், கிரிஸ்டல் ஸ்கல், நாஸ்கா லைன்ஸ் ,பிரமிட் என பல ஆச்சர்யங்களுக்கான புதிர் இன்னமும் விடுவிக்காமலே இருக்கு.
அக்காலத்திலேயே அறிவியல் எல்லாம் நல்ல வளர்ச்சியுடன் இருந்திருக்க தான் வேண்டும் ,ஆனால் பரவலாக கற்பிக்கப்படாததால் , ஒருக்காலத்திற்கு பின்னர் அப்படியே வழக்கொழிந்து போயிருக்க க்கூடும்.
எகிதியர்கள் வானியல் அறிவுடன் இருந்துள்ளார்கள், பிரமிடில் ஆங்காங்காங்கே சில ஓட்டைகள் டன்னலுடன் உள்ளன ,அவற்றின் வழியே பார்த்தால் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் மட்டுமே தெரிகிறதாம் ,எனவே ஒரு நட்சத்திரம் வானில் எங்கு இருக்கும் என சரியாக கணிக்காமல் அப்படி கட்ட இயலாது, இப்படி பல அறிவியல் தகவல்கள்,நுட்பங்கள் அக்காலத்திலும் பயன்ப்பட்டிருக்கு ,ஆனால் அவை எல்லாம் பரவலாக அனைவருக்கும் கற்றுத்தரப்படவில்லை
சித்தர்களின் மருத்துவக்குறிப்பில் இன்னுள்ள எல்லா நோய்கள் பற்றியும், அதற்கான மருத்துவ தீர்வும் உள்ளன ,அப்படியானால் அப்பொழுதே அந்நோய்கள் இருந்து அதனை அவர்கள் ஆய்வு செய்திருக்க தானே வேண்டும், பின்னாளில் எல்லாவற்றையும் "அழித்து விட்டு" மீண்டும் புதிதாக கண்டுப்பிடிக்கும் வேலைய தான் நாம செய்து வருகிறோம் அவ்வ்!
வருகைக்கு நன்றி வவ்வால், நாஸ்கா கோடுகள பத்தி ஏற்கனவே பதிவு போட்டுட்டேன். பிரமிடுகள் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது . அதில மின் விளக்கை எகிப்தியர் பயன் படுத்தினார்களான்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன். பிரமிடுகளின் பிரம்மாண்டம் மாட்டுமே பலருக்கும் தெரிஞ்சிருக்கும். ஆநேக ஆச்சர்யங்கள் அதோட மறஞ்சுகிடக்கு. உண்மையே. அவங்க கல்வெட்டுக் கள இன்னமுமே முழுசா விளங்கிக் கொள்ள முடியலயே. ( இனியும் முடியாது) இப்படிப் பட்ட புத்தகம் பாதுகாக்கப் பட்டு வந்ததே பெரிய விசயம் தானே.
Deleteஆச்சரியமா இருக்கு ..இத பேஸ்புக்ல போட்டா இவர் ஒரு தமிழன்னு கண்டுபிடிச்சி அவனுக்கு ஒரு சாத்திய கொடுத்துருவாங்கன்னு பயமா இருப்பதாலும் ...இறை தூதராக சித்தரிக்கப்பட வாய்ப்புள்ளதாலும் இந்த அருமையான பதிவை பகிர பயமா உள்ளது.
ReplyDeleteபோகட்டும் ,ஆச்சரியமாக உள்ளது ..இது எழுதப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் நடந்த ஆராய்ச்சிகள் என்ன நிலையில் இருந்தது?
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் 14 - 16 ஆம் நூற்றாண்டு காலம் குறிப்பிடப் படுகிறது. அந்த கால கட்டத்தில் கலை,இலக்கிய, புதுப் புது கண்டுபிடிப்புகள், சமூக கலாச்சாரம் இப்பிடி ஒவ்வொரு துறையும் பல வளர்ச்சிகளை கண்டது. கலிலியோ, டாவின்சி இப்படிப்பட்ட பிறப்பாலேயே ஜீனியஸ்கள் தோன்றிய கால கட்டம் அது. உடற்கூறு இயல், இயற்பியல், வானியல், வேதியல் பெரும் வளர்ச்சி மிகுந்த கால கட்டம்னு கூட சொல்லலாம். பிரிண்டிங் மெசின் 1440 ல கண்டுபிடிக்க பட்டதற்கு பின்னாடி இன்னுமே தகவல் பரிமாற்றங்கள் பதிவு செய்யப் பட்டன. சுருக்கமா சொன்னா சொகுசான வாழ்க்கையின் அஸ்திவாரம் போடப்பட்டனன்னு சொல்லிறலாம். நன்றி நண்பா.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்தியா, சீனா, எகிப்து, பாபிலோன், தென் அமெரிக்க பழங்குடிகள் ஏற்கனவே ஓரளவிற்கு மருத்துவ, பொறியியல், கணித துறையில் வளர்ச்சி பெற்றுதான் இருந்தன. ஆனால் இடையே வந்த மதவாதிகளால் அத்தகைய வளர்ச்சிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. பல அறிவியல் நூற்கள், தடயங்கள் அழிக்கப்பட்டன. பரமபதம் போல மறுபடியும் துவக்கத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறோம்.
ReplyDelete