நேற்று க்யூப் பிறந்த 40 ஆண்டுகளை கொண்டாடிவிட்டார்கள். கூகில் குழுமமும் அதோடு சேர்ந்து கொண்டது.
அப்ப எட்டாவதோ இல்லேன்னா 9 படிச்சிட்டிருந்திருப்பேன். அப்ப எனக்கு அறிமுகமானது அந்த ரூபிக் க்யூப் . என்னோட உறவுக்கார பையன் கைல அது இருந்துச்சு. எந்த விளையாட்டிலேயும் ஆர்வம் இல்லாம இருந்த எனக்கு அந்த விளையாட்டு பொருள் மேல் அதீத மோகம் ஏற்பட்டுச்சு. ஆனா அது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே என் கைகளில் இருந்தது.
முத்தாரம், கல்கண்டு வார புத்தகங்களில் அதைப் பற்றி அடிக்கடி செய்திகள் வரும். ஒரு கட்டத்துக்கு அப்புறம் அந்த க்யூப் என்னோட நினைவில் ஒரு ஓரம் போயிடுச்சு. ஒரு முறை அந்த க்யூப்ப வாங்கினேன். அதில எதிர் எதிர் கலர் தப்பா இருந்ததால என்னால தீர்க்க முடியல.
சமீபத்தில் ஒரு மாலுக்கு சென்ற போது என் மகள் கண்ணில் பட என் கையில் தவழ்ந்தது. முழு மூச்சா அதை சால்வ் செஞ்சு முடித்த போது அதை தயாரிச்ச ரூபிக் எவ்வளவு உழைச்சிருப்பாரு என்பது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில மரக் கட்டையில் அதை உருவாக்கினார். அப்ப அவருக்கு வயசு 24 தான். உலக அளவில் அதிகம் விற்பனையான விளையாட்டு பொருள் இது.
சரி அதை கண்டுபிடித்தவர் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் , புடாபெஸ்டில் (ஹங்கேரி) பிறந்தவர் எர்நோ ரூபிக். அவருடைய தாய் கவிஞர், அவருடைய தந்தை விமான பொறியாளர். க்ளைடர்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இளவயதில் (ரூபிக் ) இவருக்கு சிலைகள் செய்வதில் விருப்பம் இருந்தது பின்னாளில் " the Academy of Applied Arts and Crafts " ல் டிசைனிங் துறை படிப்பு படித்தார். அங்கேயே 3டி டிசைனிங் துறையில் பணிபுரிந்தார்.
உலக மக்கள் தொகையில் எட்டில் ஒரு பகுதியினரிடம் இந்த விளையாட்டு பொருள் சென்று இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது (அந்த காலத்தில்)
1974 ல் மரக்கட்டையில் 3 x 3 க்யூப் உருவாக்கினார். 1975 ல் விளையாட்டு பொருள் டிசைனாக பேடண்ட் பதிவு செய்தார். அதன் கலரிங் புதிரை விடுவிக்க அவருக்கு ஒரு மாதம் ஆகியது. ஜனரஞ்சகமாக விற்பனைக்காக தயாரிப்பதற்கு முன் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இது ப்ளாக்குகளை சுமுகமாக இயங்குவதில் சிக்கல் இருந்தது, சமயங்களில் பொல பொலவென பிரிந்து விழுந்தது. பல முயற்சிகளுக்கு பின்னர் சாலிடாக உருவாக்கப் பட்டது.
“மேஜிக் க்யூப் ” என்ற பெயரில் 1977 முதற்கொண்டு ஹங்கேரியில் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின் ஐரோப்பா முழுமையும் இதன் மகிமை உணரப்பட்டது, பிரபலமடைந்தது. கணிதவியலை சேர்ந்த பலரும் இதை ஒரு விளையாட்டு பொருளாக மட்டும் பார்க்காமல் மூளைக்கு வேலைதரும் ஒரு அருமையான பொருளாகவே பார்த்தனர்.
ஸ்டீவன்டவுன்ஸ் முதலாளியால் U. S ல் ரூபிக் க்யூப் ஆக டப் செய்யப்பட்டன. செஸ் விளையாட்டு போல 1982 ல் க்யூப் புதிர் போட்டிகள் வைக்கப்பட்டன. ஹங்கேரியில் எர்னோ ரூபிக் பெரும் செல்வந்தர் ஆனார் என்று சொல்ல தேவையில்லை.
ரூபிக் ஸ்பிக் க்யூப்
புடாபெஸ்டில் முதல் உலக சாம்பியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வியட்நாமை சேர்ந்த 16 வயது சிறுவன் ” மிந் தாய் “( Minh Thai ) 23 செகண்டுக்குள்ளாக க்யூப் புதிரை விடுவித்தான் (June 1982).
கடந்த 2013ல் ஃபெலிக்ஸ் லாஸ்வேகாசில் 8.18 செகண்டுகளில் க்யூப் புதிரை விடுவித்து காட்டியிருக்கிறான்.
ஒரு 3 x 3 சைஸ் க்யூபில் குறைந்த பட்சம் 24 - 28 மூவ்களில் 6 பக்கங்களும் ஒரே நிறமாக கொண்டுவந்து விட முடியும்.
இத்தனை வேகமாக எப்படி அவங்க க்யூப் இயக்கறாங்க ? எல்லாம் சூத்திரம் தான். கணக்கு மாதிரி இதுக்கும் பார்முலா இருக்கு அதில தெளிவாகிட்டா அத்தனை வேகமாக இயக்க முடியும்.
இன்னும் கூட தண்ணீருக்கு அடியில் இருந்தபடியே வேகமாக க்யூபை போட்டு காட்டிருக்கிறார்கள்.
செஸ் போல மனித மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு பொருள் என்றால் "க்யூபை" சொல்லலாம்.
Download As PDF
After reading this article, I started thinking of the old days..... very good writing sir ! I admire with the way how you wrote this.
ReplyDeleteவாங்க சுரேஷ்... நீங்க அதிரடியா களத்தில் இறங்கி போட்டோ சூட்டோட பதிவு போடுவிங்களே நாமெல்லாம் ? ரசிபிற்கு நன்றி !
Deleteநான் ஏதாவது ஒரு கலர் மட்டும் 10 செகண்டுக்குள் சேர்த்துவேன்.. அதுக்கு ஏதாவது பரிசு கொடுப்பாங்களா?
ReplyDeleteஒரு கலருக்கு கொடுக்க "தருமி ப்ரைஸ் " எல்லாம் இல்ல போலயே. நன்றி ஆவி.
Deleteநானும் க்யூப் எல்லா பக்கமும் எப்படி கழன்று விழாமல் சுற்றுகிறது என்று பார்த்து அசந்ததுண்டு ,நல்ல கண்டு பிடிப்பு !
ReplyDeleteதம 3
அப்ப இன்னியும் சால்வ் பன்னலேன்னு சொல்லுங்க. உங்களிடம் தற்போது இருந்தால் சொல்லுங்க அதை எப்படி சால்வ் செய்வதுன்னு கைவசம் டிப்ஸ் வச்சிருக்கேன்., சொல்றேன்.
Deleteரூபிக் கியுப் பற்றிய விரிவான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஇதுவரை அறிந்திராத அருமையான தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் மிக்க
ReplyDeleteமகிழ்ச்சி .வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த ஆக்கங்கள் தொடரட்டும் .
மிக்க நன்றி பகிர்வுகளிற்கு .
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. என்ன ஒரு ஒற்றுமை உங்கள் தளமும் ரூபிகா தானே !
Deleteநான் இந்த விளையாட்டிற்கு வரலே... ஹா... ஹா...
ReplyDeleteபழகிப்பார்த்தால் இதுவும் சுலபமே ! நன்றி D.D
Delete