"நெக்டெர்னல் லெகோப்தாலமஸ் " [ Nocturnal lagophthalmos ] என்று மருத்துவத்துறையில் குறிக்கப்படும் கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கு இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு என்பது கொஞ்சம் சீரியஸ் ஆன பிரச்சனை தான். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகள் முழுமையாக மூடாமல் கொஞ்சம் திறந்த படி தூங்குவது(அரைக்கண்) இயல்பு. மேல் இமை தசைகள் சரியான வளர்ச்சி அடைந்த பின்னர் இமைகளை முழுவதுமாக மூடிய படியே தூங்குவர். சிலருக்கு டீன் ஏஜ் வரைக்குமே இந்த பிரச்சனை இருக்கலாம். பெரியவர்களுக்கு எனும் போது தோல் நோய் பிரச்சனை அல்லது முகத்தில் ஏதேனும் சர்ஜரி செய்திருந்தால் இந்த பிரச்சனை இருக்கும். பெரியவர்களுக்கு இந்த பிரச்சனையால் இமைமுடிகள் கண்களில் பட்டு எரிச்சலை (அலர்ச்சி/அயர்ச்சி) ஏற்படுத்தும். தொடர்ந்தால் பார்வை பிரச்சினை ஏற்படும். அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஐ மாஸ்க் என்று சொல்லக்கூடிய முக மூடியை அணிந்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.
அடுத்த கேள்வி ஒரு கண்னை மட்டும் திறந்தபடி தூங்க முடியுமா ?
இயல்பின் மனிதனுக்கு இதுவும் முடியாத காரியந்தான். பறவைகள், விலங்குகள் அந்த மாதிரி தூங்குவது உண்டு. பெரும்பான்மையான விலங்குகள் ஒரு கண்ணை மூடி தூங்கு கின்றன. அப்போது அவைகளுக்கு ஒரு பக்க மூளையும் விழிப்புடன் இருக்கும். இது எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்து கொள்ள இயற்கை வழங்கிய கொடை. இமைகளே இல்லாத விலங்குகள் அதிகம் உண்டு.
மீன்களுக்கு இமைகளே இல்லை பிரச்சனை இல்லை. டால்பின்கள் ஒரு கண்னை மூடியே தூங்கும். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளும் தூங்கி கொண்டே பறக்கும்.
அட...
ReplyDeleteதெரியாத தகவல்கள்
அறியாத தகவல்கக்ள்
ReplyDeleteஅதிலும்
கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள்
தூங்கிக் கொண்டே பறக்குமா
வியப்புமிகு செய்திகள்
தம 1
சுவாரஸ்யமான உண்மைகளை தருவதில் இனியவை கூறல் எப்போதும் முதலிடத்தில்..
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete