ஈஸ்டர் தீவின் ஆதி குடிகள் ரொங்கோரொங்கோ எனும் குறியீட்டு எழுத்துக்களை (கீற்றுகள் glyphs ) பயன்படுத்தியுள்ளனர்.
ஸ்பானியர்கள் இந்த தீவிற்குள் நுழைந்ததற்கு பின்னே அதாவது 1770க்கு பின் ஸ்பானிஸ் வார்தைகளை லத்தீன் எழுத்துகளில் எழுதிவந்திருக்கிறார்கள். இது 1860 வரைக்கும் நடைமுறையில் இருந்திருக்கிறது.
1860க்கு பின்நுழைந்த மிஷனரியை சேர்ந்தவர்கள் (missionaries) ஈஸ்டர் தீவின் குறியீட்டு (Rongorongo script) எழுத்துக்களை வடிவங்களின் புதிர்களை விடுவிக்க முயன்றார்கள். முயற்சி தோல்வி அடைந்தது.
ரெங்காரெங்கா குறியீட்டை எழுத்தை தவிர அத்தீவு மக்கள் தவு(Ta'u and Mama) மற்றும் மமா என்ற எழுத்துக்களை பயன் படுத்தி இருக்கிறார்கள்.
ரெங்காரெங்கா ஸ்கிரிப்டில் 120 வடிவங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பறவைகள், மீன்கள், கடவுள்களை, தாவர குறியீட்டுகளை, பல்கோண வடிவங்களை உள்ளடக்கி உள்ளது.
pic : thanks to wikipedia
ஒவ்வொரு குறியீடும் வார்த்தைகளையோ, ஒலியையோ, கருத்து கோர்வையை,எண்களையோ வெளிப்படுத்துவதாக இருக்கலாம்.
ரப்பானூய் பேச்சு மொழி பாலிநேசியன் மொழியை ஒத்தது என்கிறார்கள்.
ரொங்கோரொங்கோ எனும் குறியீட்டு எழுத்துக்கள் இன்னும் விளங்கிக் கொள்ளப்படாத எழுத்து வடிவமாகவும், ஒரு மர்மக் குறியீடாகவே உள்ளது.
தொடர்புடைய பதிவு : ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்
label : Easter Island, Rongorongo script
புரியலே... இந்த விளையாட்டிற்கு வரலே...
ReplyDeleteநன்றி டி.டி
Deleteநல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteவரலாறு அழியாமல் காக்கும் உங்கள் பதிவுகள் தொடரட்டும் .நன்றி.
ReplyDelete