கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தாழ் நிலப்பரப்புகள் கடல் விழுங்கும் அபாயத்தில் உள்ளது. உலக அளவில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது.
கடல் மட்ட அளவானது, கடல் ஓரப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், அலைகளின் போக்கு அளவீடுகள், மற்றும் சாட்டிலைட் கணக்கீடுகள் கொண்டு கணிக்கப் படுகிறது.
(Global mean sea level - GMSL) உலக கடல் மட்ட அளவிட்டு தரம் தெரிவிக்கும் புள்ளிவிவரம் என்னவென்றால் கடந்த நூற்றாண்டில் 4 முதல் 6 இன்சுகள் ( 10 முதல் 20 சென்டிமீட்டர்கள்) கடல் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த 20 வருடங்களில் வருடத்திற்கு சுமார் 0.13 இன்சுகள் (3.2 மீட்டர்கள்) உயர்ந்து வருகிறது. முன்பிருந்ததை விட கடந்த 80 வருடங்களில் இருமடங்காக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டாயிரம் வருடங்களில் கடல் மட்ட உயரம் இந்த அளவில் உயர்ந்ததில்லை. எப்போது பூமி வெப்பமயமாதல் பிரச்சனைக்குள்ளானதோ அப்போதிருந்து, அதாவது 19ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் இருந்து கடல் மட்ட உயர்வு ஆரம்பித்து விட்டது. உலக அளவில் தற்போது இருக்கும் மட்ட அளவை விட சராசரியாக மூன்று அடிகள் 2100ல் உயர்ந்திருக்கும்.
குறிப்பாக 1880க்கு பிறகு பெரிய மாற்றம் ஏதும் இல்லாது இருந்த கடல் மட்ட உயரமானது 1992 ல் இருந்து கனிசமாக உயர ஆரம்பித்தது என்பதை சாட்டிலைட் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது OECD (Organisation for Econimic co operation and development)யின் கணிப்பு.
வரும் 2070 ல் பெரிய கடற்கரை நகரங்களில் 136 பெரிய கடற்கரை நகரங்களில் கடற்மட்டம் உயரும் அபாயம், வசிக்கும் 150 மில்லியன் மக்கள் கடல் நீர் மட்டம் உயர்வதால் பாதிப்படைவார்கள், அதனோடு 35 டிரில்லியன் டாலர் சொத்துகளும் சேதமடையும். உலக அளவில் 9% சதவீத இழப்பு(GDP). இது குறைந்த பட்ச கணக்கீடு
கடல் மட்டம் உயர முக்கிய காரணங்கள் :
1. உலக வெப்பமயமாதல் Thermal expansion
2. பனிமலைகள், பனிப்பாறைகள் உருகுதல் Melting of glaciers and polar ice caps:
3. கிரீன்லாந்து மற்றும் மேற்கு அன்டார்டிகா பனி பாறைகளின் இழப்பு Ice loss from Greenland and West Antarctica:
உலக வெப்பமயமாதல் கடல் மட்டத்தை உயர்த்த காரணமாகிறது.
Thermal expansion :
பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்களால் வெளியாகும் வெப்பம் பூமியை சூடாக்கி வருகிறது. கார்பன் டையாக்சைட் மற்றும் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாயுக்களால் இது அதிகரித்து வருகிறது. கடந்த நூறு வருடங்களில் கடல் மட்டத்தினை சராசரியாக எட்டு இஞ்சுகள் உயர்த்தி விட்டது. தற்போது எரிபொருட்டகளின் உபயோகத்தை நிறுத்தி வைத்தால் கூட வாயுக்களின் ஊடே அமிழ்ந்துள்ள வெப்பம் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு குறையாது என்கிறார்கள். அப்படியானால் எதிர்காலத்திலும் கடல் மட்ட உயரத்தினை தவிர்க்க இயலாது போகும்.
பூமியின் வெப்பம் அதிகரிப்பதால், கடல் நீரின் வெப்பம் உயர்கிறது. 80 சதவீத வெப்பம் கடலால் உறிஞ்சப்படுகிறது. கடல் மட்டம் உயர இதுவும் முக்கிய காரணம்.
வெப்பமான கடல் நீர், கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனி பாளங்கள், பனிமலைகளை உருக வைக்கிறது. கோடைகாலங்களில் அதிகமான உருகுதலும், குளிர் காலத்தில் பனி குறைவாக இருப்பதும்.
பூமியின் வெப்பம் அதிகரிப்பு ஏன் ? அதிக அளவில் எரிபொருள் எரிக்கப்படுவது, இயற்கை நடவடிக்கைகள், வெப்பத்தை தக்கவைத்து கொள்ளும் வாயுக்களின் உயர்வு, சூழல் மாசுக்களின் அதிகரிப்பு இப்படி பல காரணிகள்.
ஆறுவருடங்களூக்கு முன்னால் Intergovernmental panel on climate change (IPCC) ஐபிசிசி தெரிவித்த எதிர்பார்க்கும் குறியீட்டு அளவீட்டை காட்டிலும், எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் குறியீட்டு அளவீடு அதிகமாகி செல்கிறது.
கடல் மட்டம் உயர்வால் ஏற்படும் பாதிப்புகள்.
- நல்ல நிலங்கள் உவர்நிலங்களாக மாறும்
- தாழ்வு நிலப்பரப்பு தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்
- பறவைகள், தாவரங்கள், கடல் உயிரினங்கள் மற்றும் மீன்வள பாதிப்பு
- மக்கள் இருப்பிடம், உயிர்சேதம் பொருள் இழப்பு
- கடல் சீற்றம் அதன் பாதையில் உள்ள பகுதிகளை நாசமாக்கும்.
சாண்டி புயல் போல பல அதிதீவிர புயல்கள், சுனாமிகள் உருவாக புவி வெப்பமடைதல் தான் காரணம்.
படங்கள் பனிமலைகளும் பனிபாளங்களும் உருகிவருவதை காட்டுகிறது.
வரும் 2100 ல் 2.5 அடி முதல் 6 அடிவரை கடல் மட்டம் உயர்வு ஏற்படலாம் என கணிக்கப் பட்டிருக்கிறது. இந்த கூற்றின் படி நடந்துவிட்டால் உலகின் பல கடற்கரை நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
இதில் இன்னும் ஒரு ஆபத்து என்னவென்றால் பூமியின் வெப்ப சமநிலை பாதிப்பு ஏற்பட்டு கிரீன்லாந்தின் பனிமலை முழுவதும் உருகுவிட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் இலண்டன், லாஸ் ஏஞ்சல் முதற்கொண்டு, மாலத்தீவு மணிலா, பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
மாலதீவின் மக்கள் தொகை 3,94,000. தலைநகரான மாலேவினை சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் கடற்கரை சுவர்கள் கடல் சீற்றத்தில் இருந்து அரணாக பாதுகாக்கிறது. இந்திய கடற்பிராந்தியத்தில் மாலத்தீவு கூட்டம் கடல் மட்ட அளவில் தாழ்வான நிலபரப்பு. 2100 அளவில் ஏற்படும் கடல்மட்ட உயரம் இத்தீவுகளை கபளீகரம் செய்யும் ஆபத்து உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது.
உலகின் அநேக கடற்கரை நகரங்கள் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளது.
உலகநாடுகள் இணைந்து உலக வெப்ப மயமாதலை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது மிக மிக அவசியம்.
labels : புவி வெப்பமாதல், கடல் மட்ட உயர்வு, விழுங்கும் கடல், Sea level Rise
வரும் ஆபத்தை உணர வேண்டும்... விரிவான விளக்கத்திற்கு நன்றிகள்...
ReplyDeleteநம்ம நாட்டிற்கு ஏதாவது பாதிப்பு வருமா? நல்ல விழிப்புணர்வு பதிவு! நன்றி!
ReplyDeleteஏற்கனவே சுனாமியால் பாதிக்கப் பட்டுள்ள பூமி பாதிப்பு இருக்கும். அழகிய கடற்கரைகளை இழக்கவேண்டி இருக்கும்.
DeleteI am going to loose my sleep..............:((
ReplyDeleteஆபத்து நெருங்குகிறது.
ReplyDelete