அந்த கால இந்தியாவில் நடுத் தெருவில் செய்து காட்டப்படும் ஒரு மேஜிக் வெளி நாட்டினரே அதிசயத்தது. கயிறு பாம்பாட்டி வாசிக்கும் மகுடிக்கு தகுந்த படி நட்டமாக கம்பு போலே எழும்பி நிற்குமாம், சிறுவன் ஒருவன் அதமேல் ஏறி நிற்பானாம். நான் இந்த மாயாஜாலத்தை பார்த்தது இல்லை (இந்த மேஜிக் புகைப்படம் கீழே) காலம் மாறும் போது டெக்னாலஜியும் வளர்கிறது அது போல மேஜிக்கின் வளர்ச்சியும் அதற்கு தகுந்தார் போல் மாற்றம் பெறுகிறது.
யு-டியூபில் வெளிவந்திருக்கும் இந்த ஐ-பேட் மேஜிகை பலரும் பார்த்து வியந்து இருக்கலாம்.
இந்த ஐபேட் மேஜிக்கிற்கு மூன்று முக்கிய அம்சங்கள் வேண்டி இருக்கும்
1. டைமிங் சென்ஸ் - நொடிக்கு தகுந்தாற்போல நுணுக்கமான அசைவுகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. ஏற்கனவே திட்ட மிட்டு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், அதை புரிந்து செயல்படுவது மிக மிக அவசியம்.
3. வீடியோவில் சம்பந்தப்பட்ட மேஜிக் டிரிக் பொருட்கள்.
இந்த ஐபேட் மேஜிக் அவர் செய்வதற்கு கண்டிப்பாக தீவிர பயிற்சி செய்திருப்பார். இவர் திறமையான மேஜிக் நிபுணர் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விளக்கமெல்லாம் நான் இங்கே சொல்ல காரணம் எதையும் நம்பாமல் கொஞ்சம் யோசித்து பார்க்கவேண்டும் ஏமாற்றுகாரர்கள் நிறைந்த உலகம் இது என்பதை சொல்வதற்கே. இந்த மேஜிக் நிபுணரை தரம் தாழ்த்துவது எம் நோக்கமல்ல.
முதலில் மூன்றரை நிமிசம் ஓடக்கூடிய இந்த விடியோவைப் பாருங்கள். பிறகு என் விளக்கத்தை படியுங்கள்.
தயாராக வைக்கப்பட்டிருக்கும் இந்த நவீன மேஜிக் பெட்டியின் அருகில் வசதியாக அமர்ந்து கொள்கிறார். உட்கார்வதற்கு முன் சேரில் முன்னமேயே வைக்கப்பட்ட ஐபேடை கையில் எடுக்கிறார். இந்த ஐபேட் பின்னாடி, முன்னாடியே போட்டோ ஒட்டி வைச்சிருக்கார். லாகவமாக அதை கையில் எடுத்து ஐபேடை ஆன் செய்கிறார்.
பிளாஸ்டிக் மணியை மேஜிக் பாக்சில் போட்டு தயாராக அங்கு இருக்கும் சின்ன போட்டோவை உள்ளங்கைக்குள் மறைத்து எடுத்துக் கொள்கிறார்.
அடுத்து ஒரு இமேஜை கிளிக் செய்து அந்த இமேஜை விரல்களால் சுருக்கி டக் கென்று உள்ளங்கைக்குள் மறைத்து வைத்திருந்த போட்டவை ஐபேட் மேலிருந்து எடுப்பதாக காட்டுகிறார்.
அடுத்து ஒரு ஃப்ளாஸ் (flash image - sleeping mode of sun ) இமேஜை கிளிக் செய்கிறார் அதில் நகரும் சூரியனை சுட்டுவிரலால் நகர்த்துவது போல் செய்து காலை மதியம் மாலை இரவு என்று நான்கு எஃபக்ட்டும் விரலால் நகர்த்தும் சூரியன் தான் என்பதை நம் மூளையில் பதிய வைக்கிறார். (கில்லாடி)
அடுத்து வரும் இந்த மேஜிக் (டென்னிஸ் பால்) மிகத்திறம்பட இம்மி பிசகாமல் செய்யப் பட வேண்டிய அபூர்வமானது.
வலது கையால் டென்னிஸ் பந்தை எடுத்துக் கொள்கிறார் அதை லாவகமாக ஐபேடை வைத்து மறைத்தபடியே ஐபேடின் பின்னால் அழுத்தி பிடித்து கொள்கிறார். டென்னிஸ் பந்து இருக்கும் வீடியோ இமேஜை பெரிது படுத்து வதுபோல் செய்கை செய்து ஐபேடின் பின்னால் நழுவ விடும் பந்தை இடது கையில் பிடித்து வைத்து கொள்கிறார் (இப்போது கையை அவரால் விரிக்க முடியாது)
அதன் பின் ஐபேடிற்குள் எடுப்பது போல் உள்ளங்கையில் வைத்திருக்கும் பந்தை காட்டுகிறார். அதன் பின் ஐபேடினுள் வைத்து அமிழ்த்துவது போல் பாவனை செய்கிறார். ஆனால் உண்மையில் அவர் இடது கையிலேயே இருக்கிறது. ஐபேடின் பின்னால் இரண்டு கைகளின் நடு விரல்களை பயன் படுத்தி பிடித்தபடியே நகர்த்தி வலது கையில் வைத்து ஐபேடை திரும்பி காட்டி பின் நெஞ்சோடு சேர்த்தணைத்து பின் கீழாக நழுவவிட்டு அசத்துகிறார்.
அடுத்த வீடியோ ஓடுகிறது ஓரப்பகுதியில் வாயால் ஊதுவது போல் செய்கிறார் வீடியோவில் வரும் நீயூஸ் ரீடரின் தலைமுடி பறக்கிறது.
அடுத்து நேரடி ஸ்கைபை போல சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சி.
உள்பகுதி ரூமில் இருக்கும் நபர் ஸ்டாரவை உயர்த்திப் பிடிக்க அதை இவர் ஐபேட் உள்ளிருந்து எடுப்பது போலவும். அந்த நபர் கையில் வைத்திருக்கும் குளிர் பானத்தை இவர் உறிஞ்சி குடிப்பது போலவும் அமைக்கப்பட்டது.
இதற்கு இவர் ஸ்டாராவை வலது கையில் மறைத்து பிடித்து வைத்து செய்து விடுகிறார். ஸ்டாராவை தூக்கி போட்டுவிடுகிறார்.
அடுத்து செம்மையான ஒரு மேஜிக் பாலை வீடியோவில் தெரியும் நபரின் தலை மேல் ஊற்றுவது.
மேஜிக் பெட்டியில் இருந்து பால் நிரம்பிய கண்ணாடி டம்ளரை எடுத்து ஐபேடில் உள்ளிருக்கும் நபரின் தலைமேல் பாலை ஊற்றுகிறார் பால் எங்கும் வெளியே சிந்துவது இல்லை.
இதற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஒன்றினுள் ஒன்று அமிழ்த்தி வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளர் (பளாஸ்டிக்காகவும் இருக்கலாம்) இரண்டு டம்ளர்களின் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் கொஞ்சூண்டு பால் நமக்கு முக்கால் கிளாஸ் இருப்பது போல தோற்றம் தருகிறது. மேல் பகுதி மூடியுடன் இருக்கும். உள்ளிருக்கும் கண்ணாடி கிளாசை மேலாக தூக்கினால் பால் கீழே போய் விடும். கவனித்து பார்த்தால் காட்சியின் இறுதியில் டம்ளரில் கொஞ்சூண்டு பால் மீதம் இருக்கும்.
நீங்கள் செய்ய முடியுமா? என்று என்னை கேட்டால் என்னால் நிச்சயமாக செய்ய முடியாது என்றுதான் சொல்லுவேன். மேஜிக் செய்வதற்கு தனித்திறமை வேண்டும். நாம் சொல்லுவது எளிது.
வியக்க வைக்கிறது... இருந்தாலும் மேஜிக் திறமை தான்.. படத்துடன் கூடிய ஒவ்வொரு விளக்கத்திற்கும் நன்றி...
ReplyDeleteநன்றி D.D
Deleteஅருமையான பொறுமையான விளக்கம். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
ReplyDeleteநன்றி பாலாஜி
Deleteசூப்பர் மேஜிக்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஐ பேட் மேஜிக் மிக அருமை...
ReplyDeleteநன்றி நண்பரே
Delete