கடந்த ஜூலை மாதத்தில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது அந்த செய்தி சொல்லும் சேதி இதுதான்.
ரஷ்யாவின் விலாடிவாஸ்டோவில் (vladivostok) அலுமினியத்தாலான 400 வருட பழமையான இயந்திர படிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
கம்ஷட்கா பெனின்சூலாவின் ஒதுக்குப்புரமான பகுதியில் அதாவது 150 மைல்கள் தொலைவில் உள்ள டைகில் எனும் கிராமத்தில் புதைபொருள் ஆராய்சியாளர்களுக்கு (செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த) புதை படிமம் ஒன்று கிடைத்தது. இது பற்றி யுரி குளோப்(Yuri Golubev) என்பவர் இது ஒருவகையான கியர் மெசின் போல் இருப்பதாக தெரிவித்தார். இந்த இயந்திர படிமம் (fossil) 400 மில்லியன் வருட பழமையானது.
இந்த இயந்திர படிமத்தின் படமும் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி படிமம் பிரான்ஸில் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
Ancient machine gears embedded in rock
செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தில் யுரி குளோப் என்ற பேராசிரியர் இல்லை.
உண்மையில் இந்த படிமமானது பிரெஞ்சு மியூசியத்தில் வைக்கப்பட்டிக்கு, இதன் காணொளி 2007 ல் வெளிப்பட்டதாக தெரிகிறது.
பின் ஏன் ரஷ்யாவில் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டது ?
டூரிஸ விளம்பரத்திற்காக ரஷ்யாவில் இதுமாதிரியான செய்திகள் வெளியிடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இந்த காணொளியில் வெளியிடப்பட்ட தவறான தகவல் மெசின் படிமம் என்பது. ரஷ்ய செய்தி வெளிப்பட்டபோது இது குறித்து விஞ்ஞானிகள் நிலைத்தகவல் எதையும் வெளியிடவில்லை. இத்தகவல் உண்மையாக இருப்பின் அவ்வாறு விஞ்ஞானிகள் மெளனியாக இருக்க வாய்ப்பில்லை.
Weekly World News எனும் செய்தி தளமும் தவறான தகவலை வெளியிட்டுள்ளது.
சரி உண்மை என்னவாக இருக்கும் ?
முதலில் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இயந்திரம் என்பதே ஒரு முரண்.
கிரிநாய்ட் அல்லது கடல் லில்லி என அழைக்கப்படும் கடல் உயிரினத்தின் படிமமாக (crinoids steam fossils) இது இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது கடலடியில் 6000 மீட்டர் ஆழத்தில் வாழும் ஒரு உயிரினம்) இதனுடைய படிமமே பார்பதற்கு கியர்கள் உள்ள இயந்திரம் போல் தோற்றம் தருகிறது.
என்னென்ன பொய்த் தகவல்கள்...!
ReplyDeleteவாங்க D.D எதையும் நம்ப முடியாது போலிருக்கே.
Deleteநல்லாவே ஏமாத்தறாங்க!
ReplyDeleteஉண்மைனே நம்புகிறமாதிரி எழுதராங்களே.
Deleteஉங்களுக்காக, தமிழ் மனம் வோட்டு + 1
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி, வருகைக்கும் ஓட்டுகளுக்கும் நன்றி நம்பள்கி.
Deleteகண்டுபிடிப்புகளில் கூட போலிகளா...
ReplyDelete