சமீபத்தில் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியாகி இருந்தது (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்). தலைப்பு இதுதான் “சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான் பூச்சி பண்ணை ”. பால் பண்ணை ,கோழிப்பண்ணை,ஆட்டுப் பண்ணை போல் இது என்ன ? இந்த கேள்விதான் படித்தவர்களின் எண்ணம்.
இந்தியா ஒரு கட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தது. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. என் தந்தை மற்றும் அந்த கால பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். கடுமையான பஞ்சம் தலை விரித்தாடிய அந்த கால கட்டத்தில் மக்கள் சப்பாத்திகள்ளியின் சதைப் பகுதியையும்,எலிகளையும், ஈசல்களையும் பிடித்து பொறியல் செய்து சாப்பிட்டதை கதை கதையாக சொல்வார்கள்.
சைனா காரர்கள் எதையும் விட்டு வைக்காமல் சாப்பிடுவார்கள் என்ற கருத்தும் உண்மையே. சிலவகை கூட்டு புழுக்கள், வெட்டுக்கிளிகள், கரப்பான் பூச்சிகளை வறுத்து சாப்பிடுகிறார்கள். தவளை சூப், இவைகள் அறுசுவை உணவின் ஒரு அங்கம். கரப்பான்களை உலரவைத்து மருந்துகள், அழகு சாதனப் பொருட்களில் பயன் படுத்துகிறார்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்னாடி ரகசிய கரப்பான் பண்ணை வைத்திருந்த ஒருவர் கோடீஸ்வரர் ஆனார். (சின்ன கல்லு பெத்த லாபம் !)
கொதிக்கும் நீரில் போட்டு இவற்றை கொன்று வடாம் காயவைப்பதை போல் காய வைத்து பயன் படுத்துகிறார்கள்.
சீனா மற்றும் தென்கொரிய பல்கலைக் கழகங்கள் இதற்கென்றே ஆய்வு துறைகளை வைத்துள்ளது. பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன எதற்கு? இவைகள் எய்ட்ஸ், கேன்ஸர் போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கு மருந்தாகுமா? ஏன் இந்த எண்ணம் என்றால் அணுகுண்டின் கதிர்வீச்சை கூட தாங்கி இவை உயிர் வாழ்ந்திருக்கின்றன என்பது தான்.
சட்னி போல அரைத்து தலையில் பூச, சொட்டை தலையில் முடி வளரும் என்கிறார் 78 வயதான சீன வைத்தியர் ஒருவர். (உவ்வே...)
எதை தின்றால் பித்தம் தெளியும் ? என்ற கதைதான்.
இதைவிட கறை நல்லது என்ற விளம்பரம் போல ஐ.நா வும் பூச்சிகளை சாப்பிடலாம் தப்பே இல்லை என்று சான்றளிக்கிறது.
நம்முடைய பிரபலபதிவர் (தமிழ்வாசி பிரகாஷ்) வீட்டிலும் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. என்ன செய்வது என்று பரிதவித்த அவருக்கு நம் சகாக்கள் சொன்ன அட்வைசை படியுங்களேன். (சீரியசான மேட்டருக்கு பின் கொஞ்சம் சிரிப்போமே..! )

சீனா - எதையும் காசாக்க தெரிந்தவர்கள்...
ReplyDeleteஹா... ஹா... ஒவ்வொருத்தரும் அவரவர் பாணியில் அசத்தி விட்டார்கள்...
இவங்க தொல்லைக்கு கரப்பான் தொல்லையே பெட்டர் !
ReplyDeleteத.ம 2
பதிவு பார்த்தேன்...
ReplyDeleteமேலதிகமா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல...
ஐயோ.... கரப்பானை பார்க்கவே வாந்தி வர்ரமாதிரி இருக்கு...:)
த ம.3
சீனாகாரங்க கிட்ட கற்றுக்கொள்ள நிறைய இருக்கு ...எதையும் வியாபரமாக்கிடறாங்களே...
ReplyDeleteதீபாவளிக்கு வாங்கின பட்டாசு இருந்தா ஒரு பாக்ஸ ஃப்ரிட்ஜ்க்கு அடியில வச்சு வெடிக்கச்சொல்லங்க எல்லா கரப்பான் பூச்சியும் ஓடிப்போயிடும்
ReplyDeleteஅடுத்த வார கலர் பென்சில்ல சேர்க்கலாம்னு இருந்தேன்... நீங்க முந்திக்கிட்டீங்க.... த.ம.4
ReplyDelete