கடந்த வாரத்திற்கு முந்திய வாரத்தின் இறுதி நாள் புதுவையில் கழிந்தது., மாலை நேரம், வெப்பத்தை தனிக்க கடலை நோக்கி, கரையினுள் இறங்கிய நண்பர்கள் அலைகளுடன் மோதி விளையாடிக்கொண்டிருந்தனர்.
வெளிநாட்டுகாரிகள் அவர்களின் தேசிய உடையில் ஜோடியாய்.., இந்த ஊரின் தட்ப வெப்ப நிலையையும் ஜனங்களின் ரசனையையும் ரசித்தபடியும்; நண்பன் சொன்னான் இந்த பீச்சை விடவும் இன்னொரு பீச்சு (ஸாண்ட்)இருப்பதாகவும் அங்கே வெளிநாட்டினர் வரவு அதிகமென்றான். சமயம் கிடைக்கும்போது கோவை ஆவி, ஜீவா மற்றும் நண்பர்களுடன் வரலாம் என்று உள் மனசு ஆறுதல் சொன்னது.
சற்று தூரத்தில் அலைகளின் ஓசையையும் மீறி ஒரு பாடல் காற்றில் மிதந்து வந்தது.. மத்தவங்க நடந்து போனா, வீதி வெறும் வீதி..
நீ தெருவில் நடந்து போனா, எனக்கு சேதி தலைப்பு சேதி... ஊதா கலரு ரிப்பன்...
எதிரில் இருந்த ஒரு சிலையை எல்லோரும் கடந்து போனார்கள், அந்த சிலை காக்கைகளுக்கு கக்கா போகும் இடமாகவும் பொருக்கி தின்பதற்கு வசதியான இடமாகவும் அதற்கு இருக்கவேனும்.
அந்த சிலை ஜோசப் ஃப்ரன்சுவா தூப்ளே (Joseph François Dupleix ) என்று அதில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு செப்புகிறது. யார் இந்த தூப்ளே ?..., மேலே பறந்து கொண்டிருந்த பட்ஷி இவரின் கதையை சொல்லியது என்று சொன்னால் நம்ப வா போறீங்க.
தூப்ளே பிரான்ஸில் ஒரு பெரும் செல்வந்தரின் மகனாக பிறந்தவர்(1697). இந்தியா, அமெரிக்காவிற்கு பல கடல் பயணங்கள் செய்த, இவரின் 24 ஆவது வயதில் (1721) ஈஸ்ட் இண்டியா கம்பெனி இவரை கவுன்சிலின் சுப்பீரியர் ஆகவும் ஆளுமை படுத்திய இடங்களை, பொருட்களை மேற்பார்வை செய்யவும் இவரை அனுப்பியது. அடுத்த இருபது வருடத்தில் கவர்னர் ஜென்ரல் அந்தஸ்து பெற்றார் அதோட சைனாவினுடனான வாணிபத்தை பெருக்கினார்.
அதோட இவரின் சொத்துக்களை பெருக்குவதிலும் கவனத்தோட இருந்தார். இந்த கம்பெனியில் இறந்து போன ஆபீசரின் மனைவியை (ஜீன் ஆல்பர்) கண்ணாலம் கட்டிக்கிட்டாரு. அவுங்க இங்க இருந்த சிற்றரசர்களோட நட்புறவு கொள்ள உதவியா இருந்தாங்க. இங்கிருக்கிற மக்களை வைச்சே ஒரு சிப்பாய் படையை உருவாக்கினார். மைசூரின் ஹைதர் அலியையும் வளச்சி போட்டார்.
பெர்ட்ரண்ட் பான்சுவா என்பவர் தலைமையில் படை திரட்டி(மதராஸ் சண்டை) பிரிட்டிஸ் காரங்களை எதிர்தார். இவருக்கும் தூப்ளேவுக்கும் ஆகாது. அவரு சொன்ன மாதிரி (கோட்டையை மட்டும் வச்சுகிட்டு ஏரியாவை திருப்பி கொடுப்பது ) கேட்காம ஜார்ஜ் கோட்டையை தரைமட்டமாக்கும் முயற்சி செஞ்சாரு. ஆர்காடு நவாப்பினால இது தடுத்து நிறுத்தப்பட்டது. இவரு கைது செஞ்ச இங்கிலீஸ் ஆபீசர்களில் ஒருத்தர் தான் ராபர்ட் கிளைவ். வேசம் போட்டு தப்பி ஓடிய அவரு பிரஞ்சு துரோகத்தை புட்டு புட்டு வெச்சாரு.
1754 வரைக்கும் கோட்டையை பிடிக்கவும் இடத்தை பிடிக்கவும் பல போர்கள் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நடந்தது. ஆனா தூப்ளே சமாதான விரும்பின்னு சொல்றாங்க.
கம்பெனியோட (ஈஸ்ட் இண்டியா ) முன்னேற்றத்துக்கு தன்னோட சொத்துக்களை விற்றவரை பின்னாளில் அதே கம்பெனி கப்பலேற்றியது(1754). சொத்துக்களோடு சம்சாரத்தையும் இழந்த (இறப்பு) இவரு வறுமையில் வாடினார். அரசு இவரை ஆதரிக்கவும் இல்லை கவனிக்கவும் இல்லை. தனது 66 வயதில் (1763 ) பாரிஸில் சந்தடியே இல்லாம செத்துப் போய்ட்டார்.
தலைப்புக்கு வந்திட்டேன் இதுதான் பரதேசிக்கு வைக்கப்பட்ட சிலை.
சொன்னவிதம் புரிகிறது...
ReplyDeleteஉடனடி வருகையும் பின்னூட்டமும் ... மகிழ்ச்சி . நன்றிங்க D. D
ReplyDeleteபிரான்ஸிஸ் ட்யுப்ளே! வரலாற்று புத்தகங்களில் படித்து இருக்கிறேன்! சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Delete//வெளிநாட்டுகாரிகள் அவர்களின் தேசிய உடையில் ஜோடியாய்..//
ReplyDeleteதேசிய உடை :)
// சமயம் கிடைக்கும்போது கோவை ஆவி, ஜீவா மற்றும் நண்பர்களுடன் வரலாம் என்று உள் மனசு ஆறுதல் சொன்னது.//
ReplyDeleteபோயிடுவோம்.. அம்மணிகள் நிறையா இருந்தாதான் சிங்கம் கிளம்பும்னு ஒருத்தர் சொல்வாரே!!
//ஆனா தூப்ளே சமாதான விரும்பின்னு சொல்றாங்க./
ReplyDeleteஆவி மாதிரியே நல்ல மனுசன்னு சொல்லுங்க..
நானும் அவர் பற்றி படித்துள்ளேன்.
ReplyDeleteநல்லா சொல்லியிருக்கீங்க...
கலை : கலாகுமரன்....?
ReplyDeletevisit : http://worldcinemafan.blogspot.in/2013/10/blog-post.html