கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ;
நான், புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன். மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது.
மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது. இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன். செயற்கையான வேதியல் மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, சப்பாத்திகள்ளி உதவியது.
கொசுவின் முட்டைகள், லார்வா, பியூபா, அடல்ட் என இந்த படிநிலைகளை தாண்டித்தான் கொசுக்களாக உருவம் பெருகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு பகுதியை நன்றாக அரைத்தேன். அதிலிருந்து, "மீயூசிலே ஐஸ்" என்னும் வழுவழுப்பான திரவம் கிடைத்தது.
பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன். கொசுவின் "லார்வா' " க்களுக்கு உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன. இச்சோதனையில் கொசுவின் கூட்டுப் புழுக்கள் முற்றிலும் அழிந்ததை நிரூபித்தேன்.
இது இயற்கை முறையிலானது என்பதால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். புதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய அறிவியலை "மேக் சயின்ஸ்" (அறிவியல் உருவாக்கம்) போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதோடு 300 யூரோ பரிசும் பெற்றேன்.
இளம் அறிவியல் விஞ்ஞானியாக ! உருவெடுக்கும் தம்பி தங்க கம்பியை பாராட்டுகிறேன்.
source of news : dinamalar dtd. 26.8.13
தம்பி தங்க கம்பி வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிங்க D.D
Deleteமாணவன் காஸ்ட்ரோவுக்கு
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இதைப் பதிவாக்கிப் பகிர்ந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteமாணவனுக்கு வாழ்த்துக்களை தெரியப்படுத்தி இருக்கிறேன் கருத்திற்கும் ஓட்டளிப்பிற்கும் நன்றிங்க.
Deleteஇன்றைக்கு மிகவும் தேவையான ஆராய்ச்சி...காஸ்ட்ரோவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமாணவனை ஊக்கப்படுத்தியதற்கு நன்றிங்க எழில்.
Deleteமாணவர் காஸ்ட்ரோவுக்கு பாராட்டுக்கள்! அவரைப் பாராட்டி தகவல்களைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்திட்டு மாணவனை ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றிங்க இளங்கோ.
Deletethambi nala muyarchi vazthukal
ReplyDeletethambi nala muyarchi vazthukal
ReplyDeleteஅருமை தம்பி. வாழ்துக்கல். செழியன், புதுச்சேரி.
ReplyDelete